Advertisment

Tamil News Today: இ.பி.எஸ் தலைமையில் மதுரையில் இன்று அ.தி.மு.க மாநாடு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 19 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today: இ.பி.எஸ் தலைமையில் மதுரையில் இன்று அ.தி.மு.க மாநாடு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 455-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது. ஹங்கேரியில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 19 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா சார்பாக 23 வீரர்கள், 4 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

குடிநீர் ஏரிகளின் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம். 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,962 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:34 (IST) 19 Aug 2023
    திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்?

    நாளை மறுநாள் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குவதில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதைய பாதையிலேயே சுற்றி வருகிறது, லூனா-25 விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறங்குவதற்கான பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது



  • 21:43 (IST) 19 Aug 2023
    லடாக் விபத்தில் 9 ராணுவ வீரர்கள் மரணம்

    லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கியாரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.



  • 20:55 (IST) 19 Aug 2023
    உ.பி. முதல்வரை சந்தித்தார் ரஜினி

    நடிகர் ரஜினிகாந்த் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்



  • 20:14 (IST) 19 Aug 2023
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம்

    தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம்

    தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

    குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம்

    வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்



  • 19:59 (IST) 19 Aug 2023
    வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிப்பு

    வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் சந்தைகளில் போதிய அளவு வெங்காய இருப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதி வரை 40% வரி நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது



  • 19:25 (IST) 19 Aug 2023
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்தகுமார், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்



  • 18:53 (IST) 19 Aug 2023
    மதுரை வந்தடைந்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    நாளை நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டிற்காக மதுரை வந்தடைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்



  • 18:32 (IST) 19 Aug 2023
    துரூவ் விக்ரம் படத்திற்கு இசையமைப்பதாக வெளியான செய்திக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு

    டாடா பட இயக்குனர் இயக்கத்தில் துரூவ் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு இசையமைப்பதாக வெளியான செய்திக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு தெரிவித்துள்ளார்.



  • 18:12 (IST) 19 Aug 2023
    கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூல்

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என மாவ‌ட்ட‌ வன‌ அலுவ‌ல‌ர் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் கட்டணம் உயர்த்தி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்



  • 17:59 (IST) 19 Aug 2023
    "வாரிசு திரைப்படத்தால் நஷ்டம்"

    வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறும் நடிகர் விஜய்க்கு கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர் கடிதம். தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு



  • 17:58 (IST) 19 Aug 2023
    "2 ஆண்டுகளில் 6800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்"

    திமுக அரசின் நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன

    கோவை ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்ச்சியில், காணொலி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்



  • 17:58 (IST) 19 Aug 2023
    அரசு பேருந்து டிரைவரை கடித்து வைத்த இளைஞர் கைது

    காருக்கு சைடு கொடுக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து டிரைவரை தாக்கி, காலில் கடித்து வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்



  • 17:51 (IST) 19 Aug 2023
    'ஜெயிலர்' பார்க்க வராத உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

    ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஜெயிலர் படம் பார்ப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்க வரவில்லை... வருகை தந்த உ.பி துணை முதல்வரும் அலுவல் நிமித்தமாக பாதியிலேயே கிளம்பினார்



  • 16:58 (IST) 19 Aug 2023
    சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

    இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து 4 மணிநேரமாக பயணிகள் காத்திருந்த நிலையில், இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக மதியம் 2 மணிக்கு அறிவித்தனர் மொத்தம் இருந்த 147 பயணிகளில், பலருக்கு மாற்று விமானங்களில் டெல்லிக்கு செல்ல டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன சில பயணிகள் பயணத்தையே ரத்து செய்துவிட்டு, டிக்கெட் கட்டணங்களை திரும்ப பெற்றனர்



  • 16:56 (IST) 19 Aug 2023
    கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் மீது தாக்குதல்

    கோவை மாவட்டம் வடவள்ளி அருகே மளிகை கடைக்குள் புகுந்து இருவர் கடை உரிமையாளரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது



  • 16:27 (IST) 19 Aug 2023
    பத்திரப்பதிவு சட்டத்திருத்தம் - நீதிமன்றம் அதிரடி

    பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தம் என தெரிவித்துள்ளது



  • 15:33 (IST) 19 Aug 2023
    உத்தரப்பிரதேசத்தில் நடிகர் ரஜினி!

    உத்தரப்பிரதேசம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி ராமர் கோயிலில் நாளை சாமி தரிசனம் செய்கிறார்.



  • 15:15 (IST) 19 Aug 2023
    கைதிக்கு மிரட்டல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராதாகிருஷ்ணன் வேலூர் மத்திய சிறையில் மிரட்டப்படுவதாக வழக்கில், கைதியிடம் பணம் கேட்டதுடன், பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டல் விடுத்த உதவி ஜெயிலர், வார்டன்களுக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வேலூர் சிறை டிஐஜி விசாரணை செய்து செப். 4ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 14:31 (IST) 19 Aug 2023
    ஜே.பி.நட்டா உடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 14:30 (IST) 19 Aug 2023
    ராகுல் காந்தியின் பைக் சவாரி!

    இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, லே பகுதியில் இருந்து பேங்காங் ஏரிக்கு பைக் சவாரி மேற்கொண்டுள்ளார்.

    பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் ராகுல் காந்தி.



  • 14:30 (IST) 19 Aug 2023
    மீண்டும் கைதான தப்பியோடிய கைதி!

    கடலூரில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், பெரம்பலூர், சில்லக்குடி என்ற இடத்தில் திண்டிவனம் போலீசார் தப்பியோடிய அமீர் அப்துல் காதரை கைது செய்தனர்



  • 14:16 (IST) 19 Aug 2023
    நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க.-வின் உண்ணாவிரத போராட்டம்: தேதி மாற்றம்

    நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில், நாளை தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா, நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெறும் போராட்டத்தில் மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி கலந்து கொள்கிறார்கள்.



  • 14:06 (IST) 19 Aug 2023
    மனைவியை வேவு பார்க்க சொன்ன கணவன்; விசாரணையில் அம்பலம்!

    கோவை சுந்தராபுரம் அழகுநகரில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து கண்காணித்ததாக துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தால் கணவனே மனைவியை வேவு பார்க்க சொன்னது விசாரணையில் அம்பலமாகியது



  • 13:39 (IST) 19 Aug 2023
    மின் கசிவு, தீப்பிடித்த 2 பெட்டிகள்; பெங்களூரு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

    பெங்களூருவில் நின்றுகொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மும்பையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    ரயில் பிளாட்ஃபார்ம் 3 இல் நிறுத்தப்பட்டது மற்றும் அது வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது. விசாரணை தொடங்கப்பட்டு, இயந்திரவியல், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு அதிகாரிகளைக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) பணியாளர்களும் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து, இந்த சம்பவத்தில் ஏதேனும் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்துகின்றனர். தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) குழு மேலும் ஆய்வுக்காக அந்த இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.



  • 13:03 (IST) 19 Aug 2023
    பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்த ஸ்டாலின்

    நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்!

    பத்திரிகை புகைப்பட கலைஞர்களை தான் புகைப்படம் எடுத்த காட்சியை பதிவிட்டு ஸ்டாலின் ட்வீட்



  • 12:29 (IST) 19 Aug 2023
    ப.சிதம்பரம் பேட்டி

    சட்டம் ஆங்கிலத்தில் இருக்கும் போது, பெயரும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்; இந்தியில் மொழிபெயர்ப்பு இருந்தால், இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கும் நிலை தற்போதும் உள்ளது;

    ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு, பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்- புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் பேட்டி



  • 12:25 (IST) 19 Aug 2023
    முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் - ஸ்டாலின்

    கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் - கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரை



  • 12:24 (IST) 19 Aug 2023
    ஆனந்தி பென்னுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

    உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு



  • 12:13 (IST) 19 Aug 2023
    டிடிவி.தினகரன் பேட்டி

    மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அழைக்கிறார்கள்- டிடிவி.தினகரன் பேட்டி



  • 12:12 (IST) 19 Aug 2023
    முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் - ஸ்டாலின்

    கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் - கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரை



  • 11:27 (IST) 19 Aug 2023
    தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

    காவல்துறையினரின் வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10% இடஒதுக்கீடு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை, ஒரு வாரத்திற்குள் முழுமையாக செயல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்- தமிழ்நாடு அரசுக்கு மனுதாரர்கள் சார்பில் நோட்டீஸ்



  • 11:26 (IST) 19 Aug 2023
    அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்

    தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது; நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவனும் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது;

    இது எல்லா குடும்பங்களுக்கும் சாத்தியம் அல்ல. ரூ.20 லட்சம் செலவழித்த பிறகும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத போது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது; இதிலிருந்து மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்



  • 10:59 (IST) 19 Aug 2023
    கலைஞர் நூற்றாண்டு விழா: ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை. நூற்றாண்டு விழா பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை



  • 10:55 (IST) 19 Aug 2023
    அரையிறுதிச் சுற்றில் ஸ்வீடன் வீரர்

    மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்வீடனின் கியான் மார்டின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

    அரையிறுதிச் சுற்றில் ஜப்பானின் ரைஹா ஓனோவை வீழ்த்தினார் கியான் மார்டின்



  • 10:10 (IST) 19 Aug 2023
    அதிமுக மாநாடு : ராயபுரத்தில் இருந்து பேருந்தில் தொண்டர்கள் பயணம்

    மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும் நிர்வாகிகள்

    சென்னை ராயபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பேருந்துகளில் பயணம்

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்



  • 09:56 (IST) 19 Aug 2023
    அலைச்சறுக்கு இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனைகள்

    மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் மகளிருக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனைகள்

    முதல் அரையிறுதிச் சுற்றில் ஷினோ மட்சுடா, 2வது அரையிறுதிச் சுற்றில் சாரா வகிடா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி



  • 09:50 (IST) 19 Aug 2023
    கொசு விரட்டும் மருந்தால் தீ விபத்து? - 4 பேர் பலி

    சென்னை மணலி பகுதியில் வீட்டில் கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தைத் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப் பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு சந்தான லட்சுமி அவரது 3 பேத்திகள் உயிரிழப்பு



  • 09:33 (IST) 19 Aug 2023
    கச்சத்தீவு வரலாறு தெரியாமல் பேசுவதா? - ஓ.பி.எஸ்

    கச்சத்தீவு வரலாறு தெரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். முன்கூட்டியே தெரிந்திருந்தும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து தி.மு.க குரல் எழுப்பவில்லை. 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் தி.மு.க இருந்த போது கச்சத்தீவு குறித்து ஏன் பேசவில்லை - ஓ.பன்னீர் செல்வம்



  • 09:24 (IST) 19 Aug 2023
    மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரைக் கண்டறிந்து கவுன்சிலிங்

    18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் மது அருந்தினால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். முதல் முறையாக மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு - அமைச்சர் முத்துசாமி



  • 09:03 (IST) 19 Aug 2023
    4 கொலைகளுக்கும் ஒரே நோக்கமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

    சமூக செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் கொலைகளுக்கு பின்னால் பொதுவான நோக்கம் உள்ளதா? -சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுரை. கொலையாளிகள் கைது செய்யப்படாத நிலையில் மும்பை ஐகோர்ட் விசாரணையை கண்காணிக்க மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு. 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியும் போதிய ஆதாரங்கள் இல்லை என சிபிஐ தரப்பு விளக்கம்.



  • 08:13 (IST) 19 Aug 2023
    கடலூர்: கைதி தப்பி ஓட்டம்

    திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்

    புதுச்சேரியை சேர்ந்த அமீர் அப்துல் காதர் (22) கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார் .

    திண்டிவனம் நீதிமன்றத்தில் நேற்று அமீர் அப்துல் காதர் கொள்ளை வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    2 போலீசாருடன் இருந்த கைதி, கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பி ஓட்டம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதிக்கு வலைவீச்சு



  • 08:12 (IST) 19 Aug 2023
    ஒகேனக்கல்: நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரிப்பு. நான்காவது நாளாக பரிசல் இயக்கத் தடை



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment