Advertisment

News Highlights: விநாயகர் சதுர்த்தி அனுமதி- முதல்வருடன் பாஜக தலைவர் முருகன் சந்திப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 6019 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
News Highlights: விநாயகர் சதுர்த்தி அனுமதி- முதல்வருடன் பாஜக தலைவர் முருகன் சந்திப்பு

எல்.முருகன்

Tamil News Today Updates :  தமிழகத்தில் இ-பாஸ் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனுமதி வழங்கப்படும். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பனிக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் இந்த கூட்டத்தொடரை கூட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஒரேநாளில் 6019 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பாஜக கை காட்டும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியில் அமரும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர், எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 1, 6, 9 ஆகிய அரசுப்பள்ளி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று தொடக்கம். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், மற்றும் புத்தகப்பை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:39 (IST)17 Aug 2020

    ரயில்வே பணியில் தமிழர்கள் நிராகரிக்கப்படுவதாக கூறுவது தவறு - தெற்கு ரயில்வே

    தெற்கு ரயில்வேயில் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வட மாநில இளைஞர்கள் நியமிக்கப்படுவதாகக் கூறுவது தவறு. பொது அறிவிப்பின் மூலமாகவே மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி யூனிட்டுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    21:26 (IST)17 Aug 2020

    நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு; நீதியை நம்புகிறோம் - கமல்ஹாசன் ட்வீட்

    தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

    20:31 (IST)17 Aug 2020

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்.

    கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    20:08 (IST)17 Aug 2020

    விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி குறித்து ஆலோசிப்பதாக முதல்வர் உறுதி - எல்.முருகன்

    முதலமைச்சர் பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    19:05 (IST)17 Aug 2020

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கில் ஐகோர்ட் நாளை தீர்ப்பு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    17:55 (IST)17 Aug 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று; 120 பேர் பலி

    தமிழகத்தில் இன்ரு ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 120 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:33 (IST)17 Aug 2020

    சாத்தான்குளம் கொலை வழக்கில், சிபிஐ அறிக்கை தாக்கல்; விசாரணையில் ஐகோர்ட் நீதிபதிகள் திருப்தி

    சாத்தான்குளம் கொலை வழக்கில், சிபிஐ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில், கொரோனாவால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகள் தடயவியல் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

    17:18 (IST)17 Aug 2020

    'என் முதல் பாடலை பாடிய எஸ்.பி.பி. கடைசி பாடலையும் பாட வேண்டும்' - கவிஞர் வைரமுத்து உருக்கம்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் முதல் பாடலை பாடிய எஸ்.பி.பி எனது கடைசி பாடலையும் பாட வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

    16:23 (IST)17 Aug 2020

    எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது

    எனது தந்தை எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி

    - மகன் எஸ்.பி.பி.சரண்

    16:13 (IST)17 Aug 2020

    விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை

    கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை

    மக்கள் ஒத்துழைப்பு தராவிடில் செவ்வாய்தோறும் அமலாகும் முழுமுடக்கம் ஞாயிறு அன்று மாற்றப்படும்

    - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

    16:12 (IST)17 Aug 2020

    நவ.16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி.15ஆம் தேதி வெளியிடப்படும்

    இந்தாண்டு நவ.16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்

    - தேர்தல் ஆணையம்

    16:04 (IST)17 Aug 2020

    விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதற்காக பல்வேறு இடங்களில் குறைந்தது 2 அடி முதல் 20 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை உள்ளதால் பெரிய அளவிலான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு இந்து அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.

    இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி இந்த முறையீட்டை முன் வைத்துள்ளார்.

    15:54 (IST)17 Aug 2020

    புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

    புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

    மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி

    15:43 (IST)17 Aug 2020

    கழிவுகள் கொட்டுவதற்கு தடை கோரி வழக்கு

    பாக் ஜல சந்தி கடல் பகுதிகளில் கழிவு மண், கற்கள் மற்றும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை கோரி வழக்கு

    மத்திய, மாநில அரசுகள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    15:28 (IST)17 Aug 2020

    போட்டி போட வைக்கத்தான் டாஸ்மாக் கடைகள் திறப்பா?

    சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? என்று திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பிற மாவட்ட கொரோனா பாதிப்புடன் சென்னையை போட்டி போட வைக்க டாஸ்மாக் திறக்கப்படுகிறதா எனவும் அவர் கேட்டுள்ளார். 

    15:02 (IST)17 Aug 2020

    130 பேருக்கு கொரோனா தொற்று

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 14,006ஆக உயர்வு

    தொற்றிலிருந்து 10,853 பேர் குணமடைந்துள்ள நிலையில் 176 பேர் உயிரிழப்பு

    14:29 (IST)17 Aug 2020

    சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5 மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்

    கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோன் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இங்கு பலவகையான மதுபாட்டில்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. 5 மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் காலாவதியான பீர் பாட்டில்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    14:11 (IST)17 Aug 2020

    ரஜினியும், கமல்ஹாசனும்...

    மதுரையை 2வது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம். ரஜினியும், கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம் - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்

    13:43 (IST)17 Aug 2020

    உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சி

    பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்

    விரைந்து முழு உடல்திறன் பெற்று, மீண்டும் தனது பாட்டு பயணத்தை எஸ்.பி.பி. தொடரட்டும் - ஸ்டாலின்

    13:36 (IST)17 Aug 2020

    மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை

    மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

    மணல் கடத்தல் வழக்குகள் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்

    சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா?- நீதிபதிகள் கேள்வி

    13:35 (IST)17 Aug 2020

    ‘கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து’

    கடலூரில் வீடு முழுவதும் குட்காவை பதுக்கிய பாரதி என்பவர், கொரோனா காலத்தில் மட்டும் ரூ.4 கோடிக்கு சொத்து வாங்கியது அம்பலம்

    * பொதுமுடக்க காலத்தில் ரூ.4 கோடி சொத்துக்கள் வாங்கியது குறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிக்க முடிவு

    13:07 (IST)17 Aug 2020

    வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுன்ட்டர் பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும். மதுபான கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    13:06 (IST)17 Aug 2020

    சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

    மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இபாஸ் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையின் எல்லைப் பகுதியான வண்டலூரில் வழக்கம் போல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    13:03 (IST)17 Aug 2020

    நீட், ஜே.இ.இ தேர்வு ரத்து கோரிக்கை நிராகரிப்பு

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

    12:33 (IST)17 Aug 2020

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஆக.19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:18 (IST)17 Aug 2020

    எஸ்.பி.பி குணமடைய பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்

    11:56 (IST)17 Aug 2020

    ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

    11:38 (IST)17 Aug 2020

    மு.க.ஸ்டாலின் மீது அதிமுக எழுப்பியுள்ள புகார்

    ’தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

    11:26 (IST)17 Aug 2020

    மு.க.ஸ்டாலின் மீது தேசியக்கொடி அவமதிப்பு புகார்

    தேசிய கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் காவல்ஆணையரிடம் புகார் தரப்பட்டது.

    11:02 (IST)17 Aug 2020

    ஊரடங்கு மீறல்

    தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யாப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8,81,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 

    10:13 (IST)17 Aug 2020

    அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

    தமிழகத்தில் 1, 6, 9 ஆகிய அரசுப்பள்ளி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று தொடக்கம். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், மற்றும் புத்தகப்பை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    10:02 (IST)17 Aug 2020

    சீமான் மீது வழக்குப்பதிவு

    புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக மதுரவாயல் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    09:59 (IST)17 Aug 2020

    முரசொலி மாறன் 87-வது பிறந்த தினம்

    முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

    09:47 (IST)17 Aug 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 57,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,584 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்துள்ளனர், என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    09:23 (IST)17 Aug 2020

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக தர உத்தரவு

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமையை, நவம்பர் வரை இலவசமாக தர பிரதமரின் ’கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவு. 

    09:21 (IST)17 Aug 2020

    சாத்தான்குளம் விவகாரம் - காவலர் முருகன் மீண்டும் சிறையிலடைப்பு

    கொரோனாவில் இருந்து மீண்ட சாத்தான்குளம் காவலர் முருகன் மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் முருகன், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது குணமடைந்ததால் மீண்டும் சிறையிலடைப்பு. 

    09:18 (IST)17 Aug 2020

    தமிழகத்தில் அனைவருக்கும் இ-பாஸ்

    முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. 

    Tamil News Updates: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்காக ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்குவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் இ-பாஸ் பெறும் நடைமுறை அப்படியே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    Chennai Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment