Advertisment

Tamil news today : சென்னை பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு ;இன்று முதல் துவக்கப்படுகிறது

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 25-11- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Nov 25, 2022 08:52 IST
Tamil news today : சென்னை பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு ;இன்று முதல் துவக்கப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கால்பந்து இன்று

FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய அட்டங்கள்:  இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து - ஈக்வடார் அணிகள் மோதல் . மாலை 6.30 மணிக்கு கத்தார் - செனகல் அணிகள் மோதல். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வேல்ஸ் - ஈரான் அணிகள் மோதல்.

அக்கா – தம்பி மீம்ஸ்

பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் நீக்கம் செய்யப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.  கட்சியின் வளரச்சிக்கு ஒரு தொண்டனாக அவர் பணியாற்றலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் “ நாங்கள் அக்கா தம்பியாக பேசி முடித்துகொண்டோம்” என்று டெய்சி மற்றும் திருச்சி சிவா கூறியதை வைத்து அக்கா- தம்பி  மீம்ஸ்கள் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 22:43 (IST) 25 Nov 2022
  உலகக்கோப்பை கால்பந்து : கத்தார் அணியை வீழ்த்தியது செனகல்

  உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செனகல் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளளது. • 22:40 (IST) 25 Nov 2022
  காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும் -பீட்டர் அல்போன்ஸ்

  காங்கிரஸ் கட்சியின் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும்" என சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். • 22:38 (IST) 25 Nov 2022
  5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, 5 தோப்புக்கரணம் தண்டனை

  பீகார் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, 5 தோப்புக்கரணம் போடுமாறு கிராம பஞ்சாயத்து தண்டனை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர். உண்மையை மறைக்க முயன்ற பலரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. • 20:09 (IST) 25 Nov 2022
  கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

  திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. • 19:57 (IST) 25 Nov 2022
  உட்கட்சி பிரச்சினைகளை கட்சி அலுவலகத்திலேயே பேசி முடித்து கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்

  ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் வேளையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல இனியும் இது போன்று நிகழாமல் இருக்க கட்சி நிர்வாகிகள் முயல வேண்டும். உட்கட்சி பிரச்சினைகளை கட்சி அலுவலகத்திலேயே பேசி முடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். • 19:41 (IST) 25 Nov 2022
  சாலையை கடக்க முயன்ற 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

  தெலங்கானா, திடீரென சாலையை கடக்க முயன்ற 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • 19:02 (IST) 25 Nov 2022
  ட்விட்டரில் 3 நிறத்தில் குறியீடு

  இனிவரும் காலங்களில் ட்விட்டரில் 3 நிறங்களில் குறியீடு வழங்கப்பட உள்ளது.

  அதன்படி, நீல நிற குறியீடு தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நிறுவனங்களுக்கு தங்க நிறத்திலும், அரசு கணக்குகளுக்கு சாம்பல் நிறத்திலும் வழங்கப்பட உள்ளது. • 18:49 (IST) 25 Nov 2022
  ஆப்கானிஸ்தான் 294 ரன்கள் குவிப்பு.. இப்ராகிம் மைத்ரான் சதம்

  இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.

  அந்த அணியின் இப்ராகிம் மைத்ரான் சதம் அடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்திருந்தார். 295ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட் செய்துவருகிறது. • 18:35 (IST) 25 Nov 2022
  லால் சலாம் இசை பணிகள் தீவிரம்

  ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் இசை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

  இந்தப் பணிகளை ஏஆர் ரகுமான் கவனித்துவருகிறார். இதுதொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. • 18:16 (IST) 25 Nov 2022
  கோவையில், டிச.2ஆம் தேதி, திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம்

  திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ஆம் தேதி வேலுமணி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். • 18:05 (IST) 25 Nov 2022
  ஃபிபா உலக கோப்பை: ஈரான் வெற்றி

  இன்றைய ஃபிபா உலக கோப்பை போட்டியில் வேல்ஸ் அணி-ஐ வீழ்த்தி ஈரான் அபார வெற்றி பெற்றது. • 17:47 (IST) 25 Nov 2022
  சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீர வணக்கப் பொதுக்கூட்டம்

  சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீர வணக்கப் பொதுக்கூட்டம் நவ. 26 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெறுகிறது.

  இதற்குப் வெ.மு.மோகன் (மாவட்டக் கழகத் தலைவர்) தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை ஆற்றுகிறார்.

  இந்தக் கூட்டத்தில், கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்), தி.மு.தனியரசு (மண்டல தலைவர், திமுக கிழக்குப் பகுதி செயலாளர்),

  வை.ம.அருள்தாசன் (திமுக மேற்குப் பகுதி செயலாளர்),

  ஆர்.ஜெயராமன் (4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்),

  மு.ரகுநாதன் (மதிமுக பகுதிச் செயலாளர்),

  இர.பு.அன்புச் செழியன் (மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். • 17:38 (IST) 25 Nov 2022
  சிபிஐ குற்றப் பத்திரிகையில் சிசோடியா பெயர் இல்லை... அரவிந்த் கெஜ்ரிவால்

  சிபிஐ குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியாவின் பெயர் இல்லை, போலி கலால் கொள்கை வழக்கில் அவர் மீது அவதூறு ஏற்படுத்த முயன்றனர் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். • 17:32 (IST) 25 Nov 2022
  செம்பி டிச.30 வெளியீடு

  பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

  இந்தப் படத்தில் கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். • 17:17 (IST) 25 Nov 2022
  தமிழர்களுக்கு 80 சதவீத பணியை வழங்கும் டாடா

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையயுள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் தமிழர்களுக்கு 80 சதவீத பணிகள் வழங்கப்பட உள்ளன.

  இதனை அமைச்சர் தங்கம் தென்னரசும் தெரிவித்துள்ளார். • 17:01 (IST) 25 Nov 2022
  குற்றாலத்தில் விழுந்த உடும்பு

  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது உடும்பு ஒன்று கீழே விழுந்தது.

  இதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  இது தொடர்பான காணொலி காட்சி வைரலாக பரவிவருகிறது. • 16:45 (IST) 25 Nov 2022
  ஆவின் முறைகேடு.. 45 நாள்களில் குற்றப்பத்திரிகை

  ஆவின் முறைகேடு வழக்கில், தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திரபாலாஜியின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

  இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு இன்னும் 45 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருப்பதாக கூறியுள்ளது. • 16:05 (IST) 25 Nov 2022
  'மாநிலத்தின் நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

  டெல்லியில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விரைவில் வழங்க கோரிக்கை வைத்தோம். மாநிலத்தின் நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது, இதை சீரமைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். • 15:49 (IST) 25 Nov 2022
  கோகுல்ராஜ் கொலை வழக்கு: நவ.30க்கு ஒத்திவைத்த ஐகோர்ட்டு

  கோகுல்ராஜ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று நடைபெற்ற நிலையில், பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சுவாதி அனுமதிக்கப்பட்டனர்.

  சுவாதி மருத்துவமனையில் இருந்து வந்ததும் மீண்டும் விசாரணையை நீதிபதிகள் தொடங்கினர். அப்போது நீதிபதிகள், வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள், எத்தனை நாட்கள் உண்மையை மறைக்க முடியும். நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும்" என கோபத்துடன் சொன்னார்கள்.

  இதனை கேட்டவுடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர் விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதன்பிறகு, சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என்று கூறிய நீதிபதிகள், சுவாதி வரும் 30ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். வழக்கை நவ.30க்கு ஒத்திவைத்தும் உத்தரவு பிறப்பித்தனர். • 14:57 (IST) 25 Nov 2022
  சதமடித்து மிரட்டிய டாம் லாதம்... நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

  இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 307 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி துரத்தி வந்த நிலையில், டாம் லாதம் - கேப்டன் வில்லியம்சன் ஜோடியின் அசத்தல் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  அதிகபட்சமாக டாம் லாதம் 145 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்தனர். • 14:45 (IST) 25 Nov 2022
  சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு: பக்தர்களுக்கு எச்சரிக்கை

  சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும், போலீசாருக்கு முகக்கவசம் கட்டாயம் என்றும் சபரிமலை வரும் பக்தர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. • 14:44 (IST) 25 Nov 2022
  'திமுக அரசை கண்டித்து டிச.2ல் போராட்டம்': எஸ்.பி.வேலுமணி!

  "மழை நிவாரண பணிகள் முறையாக இல்லை. மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து டிச.2ல் போராட்டம். அதிமுக போராட்டத்தை பார்த்து ஆளும் அரசு விழித்து கொள்ள வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். • 13:32 (IST) 25 Nov 2022
  தமிழக அரசு உத்தரவு

  குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000வழங்கும் திட்டத்தை மார்ச் 8ம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. • 13:18 (IST) 25 Nov 2022
  ஹேக்கர்களுக்கு போட்டி அறிவிப்பு

  குற்றங்களை தடுக்க உதவும் ஹேக்கர்களுக்கு சென்னை காவல்துறை ஒரு லட்சம் பரிசு அறிவித்தது. சிசிடிவி குறைபாடுகளை களையும் நோக்கில் ஹேக்கர்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. • 12:56 (IST) 25 Nov 2022
  அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்

  நம்ம ஊரு சூப்பர் பேனர் ஒன்றுக்கு 611 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேனர் அச்சிட ஆணை வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார். • 12:37 (IST) 25 Nov 2022
  கமல்ஹாசன் வீடு திரும்பினார்

  லேசான காய்ச்சல் காரணமாக போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார். • 12:37 (IST) 25 Nov 2022
  அமிதாப் தொடர்ந்த வழக்கு

  நடிகர் அமிதாப்பச்சன் தாக்கல் செய்த மனுவில், அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பிறர் பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • 12:06 (IST) 25 Nov 2022
  22 மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த மழை

  தமிழகத்தில் நவ.17 முதல் 23ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை குறைந்தது. 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது 16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். • 12:05 (IST) 25 Nov 2022
  6 பேர் கைது

  திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி கலிகண்ணன் கிருஷ்ணகிரியில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஒசூர் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரை தனிப்படை காவல்துறை கைது செய்தது. சம்பவம் நடந்த போது அங்கிருந்த செல்போன் எண்ணை கொண்டு கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். • 11:39 (IST) 25 Nov 2022
  நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது

  அனைத்து துறைகளிலும் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது; தமிழகத்தின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் காணொலி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். • 11:23 (IST) 25 Nov 2022
  ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பேட்டி

  காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு. தன்னிச்சையாக மாநில தலைமை செயல்பட கூடாது. இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்த சோனியா, ராகுலுக்கு நன்றி. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரஸில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். • 10:56 (IST) 25 Nov 2022
  மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம்

  மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் • 10:56 (IST) 25 Nov 2022
  மதுரைக்கிளை வந்தடைந்தார் சுவாதி

  கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை. சாட்சியம் அளிக்க பலத்த பாதுகாப்புடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வந்தடைந்தார் சுவாதி • 10:55 (IST) 25 Nov 2022
  பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு

  சென்னை, மணப்பாக்கத்தில் நடைபெறும் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு . தமிழக அரசின் துணிநூல்துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் சார்பில் கருத்தரங்கு கருத்தரங்கை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • 10:54 (IST) 25 Nov 2022
  இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது

  "இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது" நன்றாக செயல்படும் துறை மீதுதான் அதிகளவில் விமர்சனம் வரும் - அமைச்சர் சேகர் பாபு • 10:54 (IST) 25 Nov 2022
  இளம்பெண் உயிரிழப்பு

  திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழப்பு. கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே பகுதியில் நடந்த சோக நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு மயங்கி விழுந்த இளம்பெண் ஜோஸ்னா லூயிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் • 10:06 (IST) 25 Nov 2022
  நீதிமன்ற காவல்

  பாலியல் குற்றச்சாட்டில் கைதான திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் வினோத்துக்கு நீதிமன்ற காவல் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார் • 09:44 (IST) 25 Nov 2022
  தீ விபத்து

  டெல்லி, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து கடைகளில் பற்றியெரியும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. • 09:42 (IST) 25 Nov 2022
  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  "பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் திமுக அரசு பல சீர்த்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது" 16,000 கோடி ரூபாய் வரை வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment