Advertisment

Tamil news today: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 21 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 396வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

நான் மோடியின் ரசிகன் - எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் டெஸ்லா, ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் சந்திப்பு. நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. அவரை மிகவும் விரும்புகிறேன். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் எலான் மஸ்க் பேட்டி.

லாரி ஓட்டுநர் கேபின்களில் ஏ.சி கட்டாயம்

லாரி ஓட்டுநர்களின் கேபின்களில் ஏ.சி பொருத்துவது விரைவில் கட்டாயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஓட்டுநர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கட்கரி கருத்து.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:46 (IST) 21 Jun 2023
    விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு : ஓபிஎஸ் திட்டம்

    ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டம். மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்



  • 23:45 (IST) 21 Jun 2023
    தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரயில்

    கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரயிலை இயக்குகிறது தெற்கு ரயில்வே. நாளை இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சம்பல்பூர் புறப்படுகிறது; மறுமார்க்கமாக வரும் 24ம் தேதி சம்பல்பூரில் இருந்து தாம்பரம் வரை ரயில் இயக்கப்பட உள்ளது 13 பொதுப்பெட்டிகள், 3 இருக்கை வசதி பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டி ரயில் இணைக்கப்பட்டுள்ளது



  • 23:43 (IST) 21 Jun 2023
    தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

    தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் = குரூப் 'ஏ' பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி * 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா



  • 21:01 (IST) 21 Jun 2023
    கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி : முன்னாள் செயலாளர் கைது

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-21 ஆண்டு காலகட்டத்தில் ₹2.11 கோடி மோசடி செய்த புகாரில் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு; முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது



  • 20:59 (IST) 21 Jun 2023
    பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது

    2021-ம் ஆண்டு செந்தில்குமார் என்பர் கொல்லப்படட வழக்கில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 20:57 (IST) 21 Jun 2023
    காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பதவியிறக்கம்

    புதுச்சேரி: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகார்கள் மீத நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளராக பதவியிறக்கம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



  • 20:04 (IST) 21 Jun 2023
    யோகா ஒரு உலகளாவிய வாழ்க்கை முறை : பிரதமர் மோடி

    நியூயார்க்கில் நடைபெற்று வரும் பிரதமர் மோடி தலைமையிலான யோகாசனம் நிகழ்ச்சியில் அதிக நாட்டினர் பங்கேற்றதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி யோகா ஒரு உலகளாவிய வாழ்க்கை முறை என்று தெரிவித்துள்ளார்.



  • 19:41 (IST) 21 Jun 2023
    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம்

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக நாளை லண்டன் செல்கிறார் * லண்டன் வாழ் தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்



  • 19:00 (IST) 21 Jun 2023
    நியூயார்க்கில் யோகா செய்தார் பிரதமர் மோடி

    நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா செய்தார்



  • 18:43 (IST) 21 Jun 2023
    'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது - படக்குழு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது



  • 18:36 (IST) 21 Jun 2023
    தமிழகத்தில் மட்டும் தான் நடிகர் அரசியலுக்கு வரும் சாபக்கேடு உள்ளது – திருமாவளவன்

    விஜய் அரசியலுக்கு வருவதால் ஒன்றுமில்லை. அம்பேத்கரை படியுங்கள் என்று விஜய் கூறியதில் மகிழ்ச்சி. சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து மக்களை ஈர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • 17:55 (IST) 21 Jun 2023
    இ.டி சோதனை ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்கு - உதயநிதி ஸ்டாலின்

    அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்கு" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்



  • 17:43 (IST) 21 Jun 2023
    லண்டன் ராயல் பூங்கா போல் செம்மொழி பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா, துபாயில் உள்ள மிராக்கில் பூங்கா போல செம்மொழி பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்கா மேம்படுத்தபட உள்ளது. என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது



  • 17:28 (IST) 21 Jun 2023
    பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் தரகர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் மூர்த்தி

    பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் தரகர்களுக்கு அனுமதி இல்லை. மீறி அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் யாரும் பணத்தை கையில் கொண்டு வரவேண்டாம். போலி பத்திரப்பதிவுகள் தடுக்கப்பட்டுள்ளது என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்



  • 17:11 (IST) 21 Jun 2023
    பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத்திற்கு பின்னடைவு

    இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுடன் மோத உள்ள இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்தது



  • 16:52 (IST) 21 Jun 2023
    அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 16:37 (IST) 21 Jun 2023
    ரூ.1000 கோடி மதிப்புலான நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரம்; அதிமுக பிரமுகர் மீண்டும் வழக்கு

    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரூ1000 கோடி மதிப்புலான நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் அதிமுக பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை சட்டப்படியே அரசு கையகப்படுத்தியுள்ளது. விரைவில் அங்கு பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு வாதங்களை வைத்துள்ளது. இதனையடுத்து இம்மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • 16:19 (IST) 21 Jun 2023
    அறுவை சிகிச்சைக்குப்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார் - மருத்துவமனை நிர்வாகம்

    அறுவை சிகிச்சைக்குப்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார். மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • 15:59 (IST) 21 Jun 2023
    தமிழக கௌரவ விரிவுரையாளருக்கு எதற்கு சமஸ்கிருதம், இந்தி பட்டம் - சு. வெங்கடேசன்

    தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் அறிவிப்பு குறித்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் ட்வீட்: “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 15:14 (IST) 21 Jun 2023
    ஐ.சி.சி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை: பவுலிங்கில் அஷ்வின் முதலிடம்

    ஐ.சி.சி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

    பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.



  • 15:08 (IST) 21 Jun 2023
    அமலாக்கத்துறைக்கு எவ்வித விதிமுறைகளும் கிடையாது - கார்த்தி சிதம்பரம்

    புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி: “அமலாக்கத்துறைக்கு எவ்வித விதிமுறைகளும் கிடையாது” என்று தெரிவித்தார்.



  • 15:01 (IST) 21 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு நடந்தது சற்று கடினமான அறுவை சிகிச்சைதான் - மா. சுப்பிரமணியன்

    அமைச்சர் மா. சுப்பிரமணியன்: அமைச்சர் செந்தில் பாலாஜியை பொருத்தவரை, அவருக்கு 5 மணிநேர அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. தற்போது அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகான தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று மாலைதான் செந்தில் பாலாஜி சுய நினைவுக்கு வருவார். நான் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மருத்துவர்களிடம் பேசி வருகிறேன். செந்தில் பாலாஜிக்கு நடந்தது சற்று கடினமான அறுவை சிகிச்சையாகத்தான் இருந்துள்ளது.

    3 அடைப்புகள் இருந்ததால் சற்று கடினமான அறுவை சிகிச்சையாக தான் இருந்துள்ளது. தலைசிறந்த இதய மருத்துவர் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் நேரில் சென்று சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சிறைத் துறையிடம் நான் அனுமதியும் கேட்கவில்லை.” என்று கூறினார்.



  • 14:28 (IST) 21 Jun 2023
    தன்னை விஷம் வைத்து கொல்ல சதி; பிரபல வில்லன் நடிகர் பரபரப்பு புகார்

    தன்னை விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜே.டி.சக்கரவர்த்தி.



  • 14:26 (IST) 21 Jun 2023
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன், இதே ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்த அதே எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 14:15 (IST) 21 Jun 2023
    டாஸ்மாக் கடைகள் மூடல்: திசை திருப்பும் நடவடிக்கை - ஜெயக்குமார் விமர்சனம்

    அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசைதிருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.



  • 14:06 (IST) 21 Jun 2023
    குளித்தலை அருகே காளியம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவருக்கு அனுமதி

    கரூர், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

    கடந்த 8ம் தேதி பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுதை அடுத்து, கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்றினார்.



  • 13:59 (IST) 21 Jun 2023
    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவரின் படகு கரை ஒதுங்கியது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின், 9 பேரையும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.



  • 12:54 (IST) 21 Jun 2023
    திரவுபதி அம்மன் கோவில் வழக்கு

    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.



  • 12:52 (IST) 21 Jun 2023
    எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி

    பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது-எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி



  • 12:52 (IST) 21 Jun 2023
    500 டாஸ்மாக் கடைகள் மூடல்

    நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • 12:33 (IST) 21 Jun 2023
    ஆர்ப்பாட்டம்

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



  • 12:14 (IST) 21 Jun 2023
    பீகார் செல்கிறார் ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார். நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.



  • 11:46 (IST) 21 Jun 2023
    வேங்கைவயல் விவகாரம்

    வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை, இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது.

    - புதுக்கோட்டையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி



  • 11:45 (IST) 21 Jun 2023
    ஒத்திவைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.



  • 11:42 (IST) 21 Jun 2023
    அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

    ஆட்கொணர்வு மனுக்களை கையாள்வதில் உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.

    செந்தில் பாலாஜி வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது குறித்து நாளை முடிவெடுப்போம்;

    உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.



  • 11:38 (IST) 21 Jun 2023
    உயர்நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டாமா?

    ஆட்கொணர்வு மனு குறித்து அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆட்கொணர்வு மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டாமா? - நீதிபதி சூர்ய காந்த்



  • 11:38 (IST) 21 Jun 2023
    அமலாக்கத் துறை கேள்வி?

    செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்?

    ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்கக் கூடாது- உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி



  • 11:37 (IST) 21 Jun 2023
    விசாரணை தொடங்கியது

    செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இடைக்கால தடைகோரி அமலாக்கத்துறை மனு மீது உச்சநீதி மன்றத்தில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.



  • 10:55 (IST) 21 Jun 2023
    வேங்கைவயல் விவகாரம் - 2வது முறையாக ஆலோசனை

    புதுக்கோட்டை, வேங்கைவயலில் கடந்த டிசம்பர்.26ல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்

    ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது முறையாக ஆலோசனை



  • 10:51 (IST) 21 Jun 2023
    செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது

    அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

    புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது.

    இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



  • 10:48 (IST) 21 Jun 2023
    நாளை பீகார் செல்கிறார் ஸ்டாலின்

    நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்

    கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்



  • 10:48 (IST) 21 Jun 2023
    செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நிறைவு

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை நிறைவு

    5 மணி நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை நிறைவு

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் காலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது

    மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்



  • 10:15 (IST) 21 Jun 2023
    ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்தது

    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்தது. ரூ. 44,040க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,505க்கு விற்பனை



  • 10:11 (IST) 21 Jun 2023
    போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது

    தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது - ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை

    நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணை

    ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு

    எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு



  • 09:10 (IST) 21 Jun 2023
    யோகாவை பள்ளியில் பாடமாக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை

    புதுச்சேரி இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

    யோகாவை பள்ளியில் பாடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள்.



  • 09:10 (IST) 21 Jun 2023
    காவிரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிப்பு

    சென்னை, காவிரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் குவிப்பு

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் பாதுகாப்பு



  • 08:16 (IST) 21 Jun 2023
    யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்பு

    இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பு

    நெல்லை, பாளையங்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாசன நிகழ்வில் பங்கேற்பு



  • 08:15 (IST) 21 Jun 2023
    18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு



  • 08:14 (IST) 21 Jun 2023
    4 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை

    பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும்

    பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்குப் பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள் - இருதய நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம்



  • 08:12 (IST) 21 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது

    காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது

    மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment