Advertisment

Tamil News Updates: இன்று தமிழகம் வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி

Tamil Nadu News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Updates: இன்று தமிழகம் வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்

மக்களவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:05 (IST) 11 Aug 2023
    சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பின் காரணமாக இன்று (11.08.2023) மாலை இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழுத்து தவிக்கும் சத்யராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 22:54 (IST) 11 Aug 2023
    காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வேறு வழியில்லை - துரை முருகன்

    அமைச்சர் துரைமுருகன் அறிக்கை: “காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை; ஆகஸ்ட் 11-ம் தேதி வரையில் கர்நாடகா 53.77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ வெறும் 15.79 டி.எம்.சி தான், 37.97 டி.எம்.சி தன்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



  • 22:29 (IST) 11 Aug 2023
    குட்கா முறைகேடு: 8 பேர் மீது வழக்கு தொடர அனுமதி

    தமிழ்நாட்டில் குட்கா முறைகேடு வழக்கில் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அனுமதிக் கடிதத்தை சி.பி.ஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது; தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை தொடர்பாக 6 பேர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 21:55 (IST) 11 Aug 2023
    கிரிவல பாதையில் அசைவ உணவகம் - ஆளுநர் ஆர்.என். ரவி வருத்தம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்: “திருவண்ணாமலை கோயில் அருகிலும் கிரிவல பாதையிலும் போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகங்களை பார்த்தும் வருத்தமடைந்தேன். உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:16 (IST) 11 Aug 2023
    மாணவர் சின்னத்துரையின் கல்லூரி படிப்பிற்கான, முழு செலவையும் ஏற்றார் - அன்பில் மகேஸ்

    நாங்குனேரியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் “பாதிக்கப்பட்ட தம்பி சின்னத்துரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாகா நான் ஏற்றுக்க்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:07 (IST) 11 Aug 2023
    நாங்குநேரி சம்பவம்: நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது - கனிமொழி

    தி.மு.க எம்.பி கனிமொழி: “நாங்குனேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்ரும் அவரது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நாம் அனைவரும் பொறுப்பேற்று சீர்திருத்த வேண்டிய பிரச்னை இது. இருவரும் விரைந்து குணமடைய வேண்டும். சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:57 (IST) 11 Aug 2023
    நாங்குநேரி சம்பவம்: சட்டம் கடமையைச் செய்யும் - மு.க.ஸ்டாலின் உறுதி

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “நாங்குனேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தி ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நாங்குனேரியில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்; சட்டம் அதன் கடமையைச் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:02 (IST) 11 Aug 2023
    குட்கா முறைகேடு வழக்கு: சி.பி.ஐ.க்கு அனுமதி

    குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர சிபிஐ-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இது தொடர்பான கடிதத்தை சீலிடப்பட்ட கவரில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.



  • 19:59 (IST) 11 Aug 2023
    சின்னத்துரை கல்விச் செலவை ஏற்றார் அமைச்சர்

    மாணவர் சின்னத்துரையின் கல்லூரி படிப்பிற்கான, முழு செலவையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.



  • 19:28 (IST) 11 Aug 2023
    ஜெய்லர் படத்தை பாராட்டிய மு.க. ஸ்டாலின்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.

    அவருக்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார். அதில் உங்களது வார்த்தைகள் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.



  • 19:11 (IST) 11 Aug 2023
    காவிரி நீர் திறக்க முடியாது: கை விரித்த கர்நாடகம்!

    கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால், காவிரி நீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் 38 டி.எம்.சி. நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.



  • 18:21 (IST) 11 Aug 2023
    அய்யனார் கோயில் திருவிழாவில் இஸ்லாமிய மக்கள்

    மதுரை: மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து நடத்திய கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்றது!



  • 18:19 (IST) 11 Aug 2023
    பிளாக் பிங்க் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் நியூயார்க் வாசிகள்

    நியூயார்க் நகரில் தொடங்கப் பட்டுள்ள பிளாக் பிங் கேர்ள்ஸ் பிரத்யேக பாப் அப் விற்பனையகம். மூன்று நாட்கள் மட்டுமே செயல் படும் பாப் அப் ஷாப்பில் கொரிய பாப் இசை குழுவான பிளாக் பிங்க்-ன் பிரத்யேக ஆடை, அணிகலன்கள் விற்பனை நடைபெறுகிறது. இந்த பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் நியூயார்க் வாசிகள்



  • 17:56 (IST) 11 Aug 2023
    இந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் : முதல்வர் வலியுறுத்தல்

    குற்றவியல் சட்டங்களில் இந்தியா என்ற வார்த்தையை பாரதிய என மாற்றுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் இந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்



  • 17:55 (IST) 11 Aug 2023
    தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி

    டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் இருந்து தமிழக அரசு வெளிநடப்பு "தமிழகத்திற்கு 9ஆம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும்" தமிழகத்திற்கு உரிய நீரை தருவதற்கு கர்நாடகா சம்மதம் தெரிவிக்காததால் வெளிநடப்பு - தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா



  • 17:55 (IST) 11 Aug 2023
    திருவாரூரில் திருவிழாவில் பட்டியலின மக்களை அனுமதிக்க எதிர்ப்பு

    திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டியலின மக்களை அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் கோயிலை பூட்டி, பக்தர்களை வெளியேற்றிய போலீசார்



  • 16:50 (IST) 11 Aug 2023
    வசூலை குவிக்கும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி'!

    ரன்வீர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' திரைப்படம் வசூலை குவித்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகிய இரண்டு வாரத்தில் 47 கோடி வசூலாகியுள்ளது.



  • 16:34 (IST) 11 Aug 2023
    குஜராத் விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

    குஜராத், அகமதாபாத்தில் உள்ள பவ்லா - பகோதரா நெடுஞ்சாலையில் லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



  • 16:30 (IST) 11 Aug 2023
    ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்!

    ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் 112 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 2017-18 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். 6 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



  • 16:06 (IST) 11 Aug 2023
    சென்னை பொத்தேரி விபத்து: அடையாளம் கண்டுபிடிப்பு!

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

    இந்நிலையில், சென்னை பொத்தேரில் இன்று காலை டிப்பர் லாரி மோதி உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம். கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20), இசை ஆசிரியர் சைமன் (47), தையல் வேலை செய்யும் பவானி (38) ஆகிய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 15:48 (IST) 11 Aug 2023
    பழைய இரும்பு குடோனில் பூட்டை உடைத்து திருட்டு!

    கோவையில் பழைய இரும்பு குடோனில் பூட்டை உடைத்து ரூ. 26.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அமைப்பாளர் காலனி பிரபு உள்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • 15:47 (IST) 11 Aug 2023
    பவானிசாகர் அணை: தண்ணீர் திறக்க உத்தரவு!

    பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.03 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.



  • 15:39 (IST) 11 Aug 2023
    பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி காட்டம்

    "காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது இருந்த பிரதமர்கள், பா.ஜ.க.வின் வாஜ்பாய் மற்றும் மற்ற பிரதமர்களான தேவகவுடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததே கிடையாது" என்று ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.



  • 15:19 (IST) 11 Aug 2023
    ஆம் ஆத்மி எம்.பி ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம்: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    5 ராஜ்யசபா எம்.பி.க்களின் கையெழுத்தை ‘போலி’ செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா, அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்புரிமைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை நாடாளுமன்றத்தின் மேல் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.



  • 15:15 (IST) 11 Aug 2023
    டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் தொடங்கியது!

    காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.



  • 15:06 (IST) 11 Aug 2023
    ஓ.பி.எஸ் தரப்பு அசோகன் நீக்கம்!

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் நீக்கம்பட்டுள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில், அவரை நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:57 (IST) 11 Aug 2023
    மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.



  • 14:57 (IST) 11 Aug 2023
    தக்காளி வாங்க சென்றவரிடம் கொள்ளை!

    நாமக்கல்லில் வங்கியில் பணம் எடுத்து விட்டு குறைந்த விலையில் தக்காளி வாங்க சென்ற பெண்ணின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 14:54 (IST) 11 Aug 2023
    '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு': வானிலை ஆய்வு மையம்!

    '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு': வானிலை ஆய்வு மையம்

    *நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தி.மலை, திருப்பத்தூர், வேலூரில் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:38 (IST) 11 Aug 2023
    மாறுகிறது சட்டங்களின் பெயர்கள்

    இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) ஆகியவற்றின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்‌ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா



  • 13:30 (IST) 11 Aug 2023
    38 டி.எம்.சி தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும்

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 38- TMC தண்ணீர் உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" - டெல்லியில் நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு



  • 13:29 (IST) 11 Aug 2023
    மக்களவை சபாநாயகருக்கு நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் அமைச்சர் எ.வ.வேலு குறித்து பேசியது மக்களவை விதிகளுக்கு எதிரானது, எனவே இதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார் டி.ஆர்.பாலு



  • 12:42 (IST) 11 Aug 2023
    செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

    செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு . விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவு



  • 11:51 (IST) 11 Aug 2023
    போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா

    காவல்துறை சார்பில் நடைபெறும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு . பறிமுதல் செய்யப்பட்ட 16,000 கிலோ கஞ்சா முதலமைச்சர் முன்னிலையில் அழிப்பு .



  • 11:50 (IST) 11 Aug 2023
    100 மஞ்சள் நிற பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

    தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகள் . மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .



  • 11:23 (IST) 11 Aug 2023
    போதை பொருள் தடுப்பு நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்து உள்ளது

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது .போதை பொருட்கள் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .போதைப்பொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது . போதை பொருள் தடுப்பு நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்து உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 11:21 (IST) 11 Aug 2023
    மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு . மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக ஒத்திவைப்பு



  • 10:54 (IST) 11 Aug 2023
    ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகை

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல்காந்தி, உதகை செல்கிறார். உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்வில் பங்கேற்ற பின் தனது தொகுதியான வயநாடு செல்கிறார்.



  • 10:52 (IST) 11 Aug 2023
    மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?

    ஆளும் தரப்பைச் சேர்ந்த அத்தனை பேரும் திமுகவையும், தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி வருகின்றனர்; மத்திய அமைச்சர்கள் போல, பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா?

    மணிப்பூரில் தங்கள் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஆளும் கட்சியினர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; பாஜகவினர் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, திமுக, தமிழ்நாடு என உச்சரித்ததுதான் அதிகம்- அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை



  • 10:50 (IST) 11 Aug 2023
    4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



  • 10:46 (IST) 11 Aug 2023
    4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



  • 10:15 (IST) 11 Aug 2023
    இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

    கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம், டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நடைபெறுகிறது.



  • 10:08 (IST) 11 Aug 2023
    சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை

    சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்று ரூ.160 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.43,880க்கும், ஒரு கிராம் ரூ.5,485க்கும் விற்பனை ஆகிறது.



  • 09:39 (IST) 11 Aug 2023
    கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடமில்லை- ஆளுநர்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடமில்லை. அசைவம் சாப்பிடுபவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இதனை தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்- சாமியார்களுடனான சந்திப்பில் ஆளுநர் ஆர். என். ரவி



  • 09:13 (IST) 11 Aug 2023
    பொது பாடத்திட்டம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு

    பொது பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக் ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-allows-autonomous-colleges-itself-decide-about-model-syllabus-737477/



  • 09:05 (IST) 11 Aug 2023
    பொது பாடத்திட்டம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு

    பொது பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக் ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-allows-autonomous-colleges-itself-decide-about-model-syllabus-737477/



  • 08:03 (IST) 11 Aug 2023
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.50 மணியளவில், 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 08:03 (IST) 11 Aug 2023
    யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ரூ.25 ஆயிரம் உதவித் தொகை

    நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ரூ.25 ஆயிரம் உதவித் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.



  • 08:03 (IST) 11 Aug 2023
    யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ரூ.25 ஆயிரம் உதவித் தொகை

    நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ரூ.25 ஆயிரம் உதவித் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.



  • 08:02 (IST) 11 Aug 2023
    தக்காளி விலை குறைந்தது

    சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.60க்கு விற்பனையாகிறது.



  • 07:47 (IST) 11 Aug 2023
    மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

    மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநிலத்தின் 40 எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



  • 07:47 (IST) 11 Aug 2023
    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் மோடி மொத்தமாக இரண்டே கால் மணி நேரம் பதிலுரை அளித்தார்.

    இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க யாருமில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.



  • 07:46 (IST) 11 Aug 2023
    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்

    சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 5 மற்றும் 6வது இடங்களுக்கான போட்டியும் இன்று நடைபெறுகிறது.

    அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஜப்பானும் மற்றொரு ஆட்டத்தில் மலேசியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.



  • 07:46 (IST) 11 Aug 2023
    சென்னையின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

    பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-power-cut-today-august-11-friday-egmore-tambaram-t-nagar-737399/



  • 07:45 (IST) 11 Aug 2023
    இன்றைய ராசிபலன்

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் இன்றைய உங்களது தினசரி ராசி பலனை தெரிந்து கொள்ளுங்கள்.

    https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-today-friday-11-august-2023-737455/



Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment