Advertisment

Tamil News Highlights: எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 27 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
MBBS

மருத்துவ படிப்பு

எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 402-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

விண்வெளியில் கிரிக்கெட் உலகக் கோப்பை

முதல் முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்பை என்ற பெருமையை பெற்றது ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை டிராபி. பிரத்யேக பலூனில் கோப்பையை வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 லட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது. இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4-ம் தேதி மீண்டும் இந்தியா திரும்புகிறது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil



  • 22:23 (IST) 27 Jun 2023
    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

    மோசமான வானிலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்



  • 21:38 (IST) 27 Jun 2023
    ஜூன் 29, 30ம் தேதிகளில் மணிப்பூர் செல்கிறார் ராகுல்காந்தி

    ராகுல்காந்தி ஜூன் 29, 30ம் தேதிகளில் மணிப்பூர் செல்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.



  • 20:37 (IST) 27 Jun 2023
    உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்

    தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காவல் தலைமையக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆவடி மாநகர காவல் ஆணையராக சங்கர் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்



  • 20:17 (IST) 27 Jun 2023
    புதுச்சேரியில் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    புதுச்சேரியில் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தரவரிசையை தெரிந்துக் கொள்ளலாம்



  • 20:04 (IST) 27 Jun 2023
    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை சரிவு

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.18 சரிந்துள்ளது. ரூ.128க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி, தற்போது ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது



  • 20:04 (IST) 27 Jun 2023
    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை சரிவு

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.18 சரிந்துள்ளது. ரூ.128க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி, தற்போது ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது



  • 19:31 (IST) 27 Jun 2023
    செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது



  • 19:17 (IST) 27 Jun 2023
    சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபை பிரச்னை; பக்தர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தீட்சிதர்களுக்கு ஆதரவாக அங்கு வந்த பாஜகவை சேர்ந்தவர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



  • 18:45 (IST) 27 Jun 2023
    கெஜ்ரிவால் இல்லத்தில் சிறப்பு தணிக்கை செய்ய சி.ஏ.ஜி-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

    கெஜ்ரிவால் இல்லத்தில் சிறப்பு தணிக்கை செய்ய சி.ஏ.ஜி-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அமைப்புகளை பா.ஜ.க வெளிப்படையாக தவறாக பயன்படுத்துகிறது என்று ஆம் ஆத்மி விமர்சனம் செய்துள்ளது.

    முதலமைச்சரின் அலுவலக இல்லத்தை புனரமைப்பதில் "மொத்த மற்றும் முதன்மையான நிதி முறைகேடுகளை" சுட்டிக் காட்டி, துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ பங்களாவை புனரமைப்பதில் நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து சிறப்பு தணிக்கை நடத்துமாறு, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் பரிந்துரையை அடுத்து, இது குறித்து உள்துறை அமைச்சகம் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரை (சிஏஜி) கேட்டுக் கொண்டுள்ளது.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புனரமைத்ததில் "மொத்த மற்றும் முதன்மையான நிதி முறைகேடுகளை" சுட்டிக்காட்டி துணைநிலை ஆளுநர் செயலகத்தில் இருந்து மே 24-ம் தேதி பெறப்பட்ட கடிதத்தை கவனத்தில் கொண்டு, சிஏஜி தணிக்கைக்கு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக எல்-ஜி ஹவுஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நடவடிக்கையை பா.ஜ.க-வின் மத்திய அமைப்புகளின் தவறாக பயன்படுத்தும் வெட்கக்கேடான முறைகேடு என்று கூறிய ஆம் ஆத்மி கட்சி காவி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தோல்வியடையும் வாய்ப்பு குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளது.



  • 18:31 (IST) 27 Jun 2023
    மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதுகு வலி காரணமாக, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 18:25 (IST) 27 Jun 2023
    செந்தில் பாலாஜி வழக்கு: ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

    செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.



  • 18:22 (IST) 27 Jun 2023
    சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய தீவிர முயற்சி

    சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய தீவிர முயற்சி செய்துவருவதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



  • 18:20 (IST) 27 Jun 2023
    தி.மு.க எம்.பி. ஞான திரவியம் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு

    திருநெல்வேலி தி.மு.க எம்.பி. ஞான திரவியம் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவத்தில் எம்.பி., ஞான திரவியம் உள்ளிட்ட 10 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 30ம் தேதி, ஜாமின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



  • 18:10 (IST) 27 Jun 2023
    கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடா அறிவிப்பை திரும்ப பெறுகிறது பெரியார் பல்கலை. நிர்வாகம்

    பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்ப பெறுகிறது.



  • 17:43 (IST) 27 Jun 2023
    தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை

    தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தக்காளி விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்; அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.



  • 17:20 (IST) 27 Jun 2023
    தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்

    சென்னை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாயக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை குறைப்பது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.



  • 17:10 (IST) 27 Jun 2023
    தக்காளி விலை ஏற்றத்தை குறைக்க தமிழக அரசு முடிவு

    தக்காளி விலை ஏற்றத்தை குறைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:44 (IST) 27 Jun 2023
    செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறை வாதம் நிறைவு

    அமலாக்கத்துறை தரப்பில் தனது வாதத்தை நிறைவு செய்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.



  • 16:43 (IST) 27 Jun 2023
    ஒன் பிளஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு

    ஒன் பிளஸ் நிறுவனம் தனது புதிய நோர்ட CE 3 மாடலை ஜூலை 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது



  • 16:15 (IST) 27 Jun 2023
    மாமன்னன் படத்திற்கு எதிராக மதுரையில் போஸ்டர்

    ஜாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் 'போராட்டத்தை தூண்டாதே!' என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு



  • 15:29 (IST) 27 Jun 2023
    விசிக எம்பி ரவிக்குமார் பேட்டி

    தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது போல புதுவையிலும் 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம்..” -விசிக எம்பி ரவிக்குமார் பேட்டி!



  • 15:29 (IST) 27 Jun 2023
    ஐசிசி உலககோப்பை : இந்தியாவுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 5 போட்டிகள்

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் 9 போட்டிகளில், 5 போட்டிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது! லீகில் இந்தியா மோதும் அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது!



  • 15:05 (IST) 27 Jun 2023
    செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு

    செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை தொடங்கினார்



  • 14:33 (IST) 27 Jun 2023
    டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி, டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய பாதுகாப்புதுறை தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



  • 14:09 (IST) 27 Jun 2023
    நரேந்திர மோடி உரை

    2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்; ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன; ஊழல் செய்தவர்கள் யாரையும் நான் விட மாட்டேன்-- மத்தியப் பிரதேசம் போபாலில் பிரதமர் நரேந்திர மோடி உரை



  • 13:45 (IST) 27 Jun 2023
    கே.எஸ்.அழகிரி பேட்டி

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி; பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது; பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன்- தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் அகில இந்திய காங். தலைமையகத்தில் பேட்டி



  • 13:23 (IST) 27 Jun 2023
    குற்றம் சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம்

    சென்னையில் அதிகமாக குற்றம் சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிவதற்காக, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டறையில், GIS Mapping Crime Zones என்ற தொழில்நுட்பத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.



  • 13:23 (IST) 27 Jun 2023
    மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூலை 1ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:18 (IST) 27 Jun 2023
    திரும்பப் பெறப்படும் கார்கள்

    தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம், இந்தியாவில் தனது கேரன்ஸ் மாடல் கார்களின் Instrument Cluster-ல் ஏற்பட்டுள்ள மென்பொருள் பிரச்சினை காரணமாக 30,297 கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.



  • 13:17 (IST) 27 Jun 2023
    சேப்பாக்கத்தில் 5 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்

    இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்.8ம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் 5 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது



  • 12:28 (IST) 27 Jun 2023
    சிறு குறு தொழில்துறைக்கு ரூ.1505 கோடி நிதியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது

    சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. சிறு குறு தொழில்துறைக்கு ரூ.1505 கோடி நிதியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் . தொழில் வளர்ச்சிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது . சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



  • 12:17 (IST) 27 Jun 2023
    ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியானது

    ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியானது. இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதல் . அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்



  • 12:03 (IST) 27 Jun 2023
    ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை

    ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது . வளர்ந்து வரும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும் . சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தொழில்பேட்டை அமைக்கப்பட உள்ளன . சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



  • 11:42 (IST) 27 Jun 2023
    மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. போபாலில் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் *போபாலில் இருந்து ஜபல்பூர், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை



  • 11:26 (IST) 27 Jun 2023
    அமலாக்கத்துறை வாதம்

    நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை . நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை . ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என அமலாக்கத்துறை தரப்பு வாதம்



  • 11:21 (IST) 27 Jun 2023
    செந்தில்பாலாஜி தரப்பு வாதம்

    செந்தில்பாலாஜி கைது சட்டவிரோதமானது, இயந்திரதனமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.இளங்கோ வாதம் . கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? - என்.ஆர்.இளங்கோ



  • 11:19 (IST) 27 Jun 2023
    செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: விசாரணை

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு . சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை



  • 10:59 (IST) 27 Jun 2023
    தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை

    சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு

    வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.100 வரை தக்காளி விற்பனை



  • 10:58 (IST) 27 Jun 2023
    ஆருத்ரா மோசடி வழக்கு - ரூ.15 கோடி பணம் பெற்ற ஆர்கே சுரேஷ்?

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தகவல்

    ரூ.15 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ரூசோவ் வாக்குமூலம்



  • 10:36 (IST) 27 Jun 2023
    10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்

    10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்

    அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் - மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



  • 10:35 (IST) 27 Jun 2023
    ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை

    கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டிக்கொலை

    சண்முகம் பிள்ளை தெருவில் மதியழகனை ஓட ஓட வெட்டிக் கொன்றது 5 பேர் கொண்ட கும்பல்



  • 10:34 (IST) 27 Jun 2023
    ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்கு

    திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    கிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார்

    புகார் குறித்து எம்.பி. ஞான திரவியத்துக்கு கட்சி தலைமை ஏற்கனவே நோட்டீஸ்



  • 10:34 (IST) 27 Jun 2023
    ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்கு

    திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    கிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார்

    புகார் குறித்து எம்.பி. ஞான திரவியத்துக்கு கட்சி தலைமை ஏற்கனவே நோட்டீஸ்



  • 10:06 (IST) 27 Jun 2023
    அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் காயம்

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்த பள்ளி வாகனம்

    10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் காயம்

    கிரேன் உதவியுடன் வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்த போலீசார்



  • 10:02 (IST) 27 Jun 2023
    வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்

    சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்

    ரூ. 195 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு



  • 10:01 (IST) 27 Jun 2023
    நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடக்கம்

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடக்கம்

    வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான பணி இன்று தொடங்குகிறது

    காலை 11 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

    மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது



  • 09:29 (IST) 27 Jun 2023
    உதகை சிறப்பு மலை ரயில் நீட்டிப்பு

    கோடைகால சீசனை முன்னிட்டு உதகை சிறப்பு மலை ரயில் வரும் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • 09:28 (IST) 27 Jun 2023
    சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்

    சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, 900 மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 09:24 (IST) 27 Jun 2023
    கேரளாவில் பரவும் காய்ச்சல், 8 பேர் உயிரிழப்பு

    கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு, மலேரியா, டைஃபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை காய்ச்சல் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 09:05 (IST) 27 Jun 2023
    அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன - ஓ.பி.எஸ்

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியில் இருந்து நீக்குவது வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அம்மா உணவகங்கள் கேட்பாரற்று, கவனிப்பாரற்று அனாதையாக காட்சி அளிக்கின்றன.

    ஏழை மக்களின் நலனைக் கருதி அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர், நிதிப், பொருட்கள் பற்றாக்குறையைப் போக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பி.எஸ்



  • 08:32 (IST) 27 Jun 2023
    இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி

    திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு



  • 08:31 (IST) 27 Jun 2023
    திமுக எம்.பி.ஞானத்திரவியத்திற்கு நோட்டீஸ்

    திமுக எம்.பி.ஞானத்திரவியத்திற்கு கட்சி தலைமை நோட்டீஸ்

    நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்

    புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்; தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்



  • 08:31 (IST) 27 Jun 2023
    ஜூலை 2வது வாரத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு

    எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை துவக்கம்

    ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது

    தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்



  • 08:00 (IST) 27 Jun 2023
    கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூலை 15-ம் தேதி திறப்பு

    மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வரும் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நவீன வசதிகளுடன் 2 லட்சம் சதுர பரப்பளவுக்கு மேல் அமைந்துள்ள இந்த நூலகம் 8 தளங்களில் அமைப்பு. ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.



  • 07:57 (IST) 27 Jun 2023
    ம.பி-ல் 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் மோடி

    மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    போபாலில் இருந்து ஜபல்பூர், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment