Advertisment

Tamil News Highlights: இன்று அமைதிப் பேரணி - முதல்வர் அறிக்கை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 06-08-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, If BJP is not defeated, no one can save not only Tamil Nadu also India, பா.ஜ.க-வை வீழ்த்தாவிட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது, மு.க.ஸ்டாலின், திமுக, திருச்சி, MK Stali, DMK, Trichy, BJP, Tamil Nadu, India

மு.க. ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 441-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம். ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

திருக்குறள் புத்தகத்தை கொடுத்து ஸ்டாலின்

சென்னை வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை கொடுத்து வரவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:46 (IST) 06 Aug 2023
    நிலவை துல்லியமாய் படம் பிடித்த சந்திரயான் - 3 விண்கலம்

    சந்திரயான் - 3 விண்கலம் நிலவை துல்லியமாய் படம் பிடித்துள்ளது. சந்திரயான் - 3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது



  • 21:28 (IST) 06 Aug 2023
    ராகுலை கண்டு பா.ஜ.க பயப்படுகிறதா? - ஸ்டாலின்

    ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை? ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் மீண்டும் ஏன் பதவி வழங்கவில்லை. தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால் மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருவார் என்பதால் அச்சமா? என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்



  • 20:48 (IST) 06 Aug 2023
    புதுக்கோட்டை வெடி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் வெடி விபத்தில் பலியான வீரமுத்து, திருமலை, சுரேஷ் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • 20:26 (IST) 06 Aug 2023
    2வது டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

    இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது



  • 20:18 (IST) 06 Aug 2023
    ஆளுநர் மாளிகை ஹாலுக்கு பெயர் மாற்றம்

    சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகையை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்



  • 19:44 (IST) 06 Aug 2023
    பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

    பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • 19:27 (IST) 06 Aug 2023
    டெல்லி சேவைகள் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்; நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா

    டெல்லி நிர்வாக சேவைகள் தொடர்பான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாளை ராஜ்யசபாவில் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்



  • 19:13 (IST) 06 Aug 2023
    மெஹ்பூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

    காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி அவர்களை ஏன் நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்? என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்



  • 18:35 (IST) 06 Aug 2023
    தெலங்கானா புரட்சிகர பாடகர் ‘GADDAR’ மரணம்

    தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றிய புரட்சிகர பாடகர் ‘GADDAR’ காலமானார்!



  • 18:09 (IST) 06 Aug 2023
    சீனா - கொரியா இடையேயான போட்டி 1-1 என டிரா

    ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் சீனா - கொரியா இடையேயான போட்டி 1-1 என டிரா ஆனது. அடுத்த போட்டியில் ஜப்பான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!



  • 17:44 (IST) 06 Aug 2023
    பாகிஸ்தானில் ரயில் விபத்து - 22 பேர் மரணம்

    பாகிஸ்தானில் சஹாரா ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்



  • 17:30 (IST) 06 Aug 2023
    மருத்துவ படிப்பு - கலந்தாய்வு முடிவுகள்

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 7,612 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வில், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 107 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



  • 17:01 (IST) 06 Aug 2023
    கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்; இ.பி.எஸ் இரங்கல்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும்,குடும்பத்தில் ஒருவருக்கு

    அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:44 (IST) 06 Aug 2023
    முதல்வரே இரக்கம் காட்டுங்கள் - தமிமுன் அன்சாரி ட்வீட்

    மனிதநேய ஜனநாயகக் கட்சி: “முதல்வரே இரக்கம் காட்டுங்கள்.. அந்தோ பரிதாபம்...

    ராஜீவ் காந்தி மருத்துவனையில் மருத்துவ அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.

    அன்றே அவ்ர்களுக்கு ஆறுதல் உதவியாக ரூ. 1 கோடி இழப்பீடு கொடுங்கள் என்றோம்.

    இப்போதாவது இரக்கம் காட்டுங்கள்...” முதல்வரே என்று ட்வீட் செய்துள்ளார்.



  • 16:41 (IST) 06 Aug 2023
    வல்லபாய் படேல் சிலையை கூட எதிர்க்கட்சி தலைவர்கள் பார்வையிட்டதில்லை - மோடி

    வல்லபாய் படேல் சிலையை கூட எதிர்க்கட்சி தலைவர்கள் பார்வையிட்டதில்லை என்று கூறி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைச் சாடியுள்ளார்.



  • 16:27 (IST) 06 Aug 2023
    பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து;15 பேர் பலி

    பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில், ஹாவேலியன் என்ற நகரம் நோக்கிச் சென்ற ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது; இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.



  • 16:25 (IST) 06 Aug 2023
    சென்னை கிண்டி அருகே ரயில் தண்டவாளம் வளைந்து போக்குவரத்து பாதிப்பு

    சென்னை, கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து

    ஒரு மணி நேரமாக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



  • 15:50 (IST) 06 Aug 2023
    காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து; துரைமுருகன் சாடல்

    “காவிரியின் வரலாறு தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்” என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    “கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி நடக்கிறது. ஓரணியில் இருப்பவர்கள், காவிரி பிரச்னையை ஏன் நேரில் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாது?” என ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், “காவிரியின் வரலாறு தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்” என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 15:34 (IST) 06 Aug 2023
    வட இந்தியர்களுக்கு பணி நியமன் சர்ச்சை; என்.எல்.சி விளக்கம்

    நெய்வேலி என்.எல்.சியில் வட இந்தியர்கள் பணி நியமன சர்ச்சை குறித்து என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது. 28 பேரும் ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள். வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் வெளியிட்டது என்.எல்.சி நிர்வாகம்.



  • 14:55 (IST) 06 Aug 2023
    வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து!

    சென்னை, புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமதிற்கு ஆளாகியுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.



  • 14:12 (IST) 06 Aug 2023
    'பாஜகவுக்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன்': எச்.ராஜா!

    "பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன், மற்றவர்கள் விமர்சித்தால் நான் பதில் கூற முடியாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை இடையேயான மோதல் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா பதில் கூறியுள்ளார்.



  • 14:07 (IST) 06 Aug 2023
    80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV!

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV கண்டறியப்பட்டுள்ளது. அனைவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • 13:49 (IST) 06 Aug 2023
    குழந்தை உயிரிழந்த விவகாரம் - மருத்துவமனை அறிக்கை!

    "குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு தீவிர Hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது. தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடு குழந்தைக்கு இருந்தது;. வைட்டமின் டி குறைபாடு, ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு காரணமாக ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்தததையடுத்து குழந்தை உயிரிழந்தது" என கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சென்னை எழும்பூர் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.



  • 13:48 (IST) 06 Aug 2023
    மாரத்தான் ஓட்டம்: 3.42 கோடி வசூல்!

    "உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர். மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது. இது சாதாரண மாரத்தான் அல்ல. சமூக நீதி மாரத்தான்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 13:48 (IST) 06 Aug 2023
    மீன்வலையில் கைத்துப்பாக்கி!

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மீன்வலையில் கைத்துப்பாக்கி சிக்கியது. தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலையில் சிக்கியது. கைத்துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



  • 13:30 (IST) 06 Aug 2023
    மாரத்தான் ஓட்டம்: 3.42 கோடி வசூல்!

    "உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர். மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது. இது சாதாரண மாரத்தான் அல்ல. சமூக நீதி மாரத்தான்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 12:59 (IST) 06 Aug 2023
    குழந்தை உயிரிழந்த விவகாரம் - மருத்துவமனை அறிக்கை

    ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயரிழப்பு

    குழந்தைக்கு தீவிர Hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் நோய் இருந்தது.

    குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் இருந்தது- சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியீடு



  • 12:47 (IST) 06 Aug 2023
    அ.ம.மு.க பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் மீண்டும் தேர்வு

    அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

    தலைவராக சி.கோபாலன், துணை தலைவராக அன்பழகன் தேர்வு



  • 12:28 (IST) 06 Aug 2023
    மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- முர்மு

    சென்னை பல்கலை.யில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

    மாணவர்கள் மிக உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

    மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது - சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு



  • 12:27 (IST) 06 Aug 2023
    கலாச்சாரம் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு

    கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது

    திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது

    சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

    - சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு



  • 12:26 (IST) 06 Aug 2023
    பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலை- முர்மு பேச்சு

    சென்னை பல்கலை. மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது

    கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலை. திகழ்கிறது

    பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலை - சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு



  • 12:20 (IST) 06 Aug 2023
    தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன

    சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் ரூ. 17.86 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது

    அரக்கோணம், செங்கல்பட்டு, கரூர், மயிலாடுதுறை நாகர்கோவில், சேலம், தென்காசி, தஞ்சாவூர் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுகிறது



  • 12:20 (IST) 06 Aug 2023
    அம்ரித் பாரத் திட்டத்திற்கு மோடி அடிக்கல்

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையங்கள்

    508 ரயில் நிலையங்களை ரூ. 24,470 கோடியில் மேம்படுத்தும் திட்ட பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல்

    சுற்றுலாத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் தேர்வு



  • 12:09 (IST) 06 Aug 2023
    ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலை- ஸ்டாலின் உரை

    ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம்.

    பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலை.யில் தான் படித்தார், நானும் இந்த பல்கலை.யில் தான் படித்தேன்.

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை



  • 12:02 (IST) 06 Aug 2023
    குடியரசு தலைவர் வந்திருப்பது பெருமைக்குரியது

    பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் வந்திருப்பது பெருமைக்குரியது.

    நானும் சென்னை பல்கலைக்கழகத்தில்

    படித்தவன் தான்.

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை



  • 12:01 (IST) 06 Aug 2023
    சென்னை பல்கலை. 165வது பட்டமளிப்பு விழா தொடக்கம்

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பங்கேற்பு

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில் மொத்தம் 762 பேர் பட்டம் பெறுகின்றனர்



  • 11:25 (IST) 06 Aug 2023
    படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

    கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    அலையின் வேகம் மற்றும் அதிக காற்று காரணமாக சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தம் என அறிவிப்பு



  • 11:06 (IST) 06 Aug 2023
    சுரங்கத்தில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்

    கடலூர், நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் இரவு பணி முடிந்த தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வந்த போது சுரங்கத்தில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் காயமடைந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - போலீசார் விசாரணை



  • 10:36 (IST) 06 Aug 2023
    துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ

    துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து . 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் . மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி



  • 10:14 (IST) 06 Aug 2023
    இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான்

    உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர். மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை" "மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ரூ. 3.42 கோடி வசூலானது. இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 09:34 (IST) 06 Aug 2023
    பரிசுகளை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

    உலக சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னை, தீவுத்திடலில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ. 10.70 லட்சம் பரிசு 42 கி.மீ, 21.கி.மீ. 10 கி.மீ., 5 கி.மீ. என 4 பிரிவிகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது



  • 08:09 (IST) 06 Aug 2023
    கை அகற்றப்பட்ட குழந்தை மரணம்

    கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழப்பு



  • 08:08 (IST) 06 Aug 2023
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கயானாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது



  • 08:08 (IST) 06 Aug 2023
    கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் தொடங்கியது

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக சார்பில் சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் - 2023 ஓட்டம் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது கலைஞர் பன்னாட்டு மாரத்தான் தொடங்கியது 42 கி.மீ பிரிவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு அதிகாலை 5.30 மணிக்கு 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என மற்ற 3 பிரிவுகளை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் மாரத்தானில் வெற்றி பெறுவோருக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ. 10.70 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்



  • 08:06 (IST) 06 Aug 2023
    508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

    நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ. 24,470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment