Advertisment

Tamil News Highlights: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 11 -07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இலவச பிரியாணி விவகாரம்

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும்; தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரியல்ல என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,272 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 143 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 388 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:48 (IST) 11 Jul 2023
    திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு

    திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது



  • 22:45 (IST) 11 Jul 2023
    கொலை வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

    தனியார் மதுபான கடையின் காவலர் கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிக்கு கால தாமதமாக வந்ததாக மேலாளர், ஊழியர்கள் தாக்கியதில் காவலர் பலியான, கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் காரைக்கால் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது



  • 21:38 (IST) 11 Jul 2023
    செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு - நிர்மலா சீதாராமன்

    செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • 20:28 (IST) 11 Jul 2023
    ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி - நிர்மலா சீதாராமன்

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • 19:54 (IST) 11 Jul 2023
    நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேரலாம்; இ.பி.எஸ் அறிவிப்பு

    மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேரலாம். ஒழுங்கு நடவடிக்கைக்காக அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும். பொதுச்செயலாளரை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினால், கட்சியின் உறுப்பினர்களாக கருதப்படுவர் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்



  • 19:28 (IST) 11 Jul 2023
    'மாவீரன்' படத்தில் வரும் அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி டப்பிங்

    சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் வரும் அசரீரி குரலுக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்துள்ளார்.



  • 19:12 (IST) 11 Jul 2023
    தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பேனர் கட்டும் போது தவறி விழுந்து மரணம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க, மூன்றாவது மாடியில் பேனர் கட்டும் போது தவறி விழுந்து மூன்றாம் ஆண்டு மாணவர் மதுரை வீரன் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • 18:45 (IST) 11 Jul 2023
    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் - சென்னை ஐகோர்ட்

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு தேர்தல் தகராறு, பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய 2 வழக்குகளில் முன் ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.



  • 18:36 (IST) 11 Jul 2023
    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் - சென்னை ஐகோர்ட்

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு தேர்தல் தகராறு, பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய 2 வழக்குகளில் முன் ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.



  • 18:28 (IST) 11 Jul 2023
    ராஜமௌலி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணம் - அண்ணாமலை கருத்து

    இயக்குனர் ராஜமௌலி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். “சார், கோயில்கள் நிறைந்த இந்த பூமியில் தமிழ்நாடு உங்களது ஆன்மீக சுற்றுப் பயணம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டின் வரலாற்றுக் கதைகள் எதிர்காலத்தில் மகத்தான படைப்பாக உங்களால் உருவாக்கப்படும் என உங்கள் படைப்பின் ரசிகர்களாகிய நாங்கள் விரும்புகிறோம்.” அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.



  • 18:17 (IST) 11 Jul 2023
    தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் மீது வருமான வரி வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    தி.மு.க எம்பி கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



  • 18:15 (IST) 11 Jul 2023
    செங்கல்பட்டு பா.ம.க பிரமுகர் கொலை வழக்கு; 2 பேர் கைது

    செங்கல்பட்டு பா.ம.க நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா, விஜயகுமார் ஆகிய இருவரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை; விரட்டிச் சென்றபோது கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



  • 17:54 (IST) 11 Jul 2023
    அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைத்தார் - செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம்

    செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மனு 3வது நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜூன் 13-ல் சோந்தனை தொடங்கியது முதல் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.” என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.



  • 17:46 (IST) 11 Jul 2023
    அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில், அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை hrce.tn.gov.in/ என்ற அறநிலையத்துறை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:24 (IST) 11 Jul 2023
    அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: பங்கேற்க வந்தவர்கள் திடீரென சாலை மறியல்

    அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: பங்கேற்க வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தலைமையில் 300 மேற்பட்ட அதிவிரைவு படையினர் குவிப்பு.



  • 17:21 (IST) 11 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு; 3-வது நீதிபதி உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்து 3வது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார்.



  • 17:17 (IST) 11 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு; 3-வது நீதிபதி உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்து 3வது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார்.



  • 16:54 (IST) 11 Jul 2023
    ஆவணத்தை பெற மறுத்தது ஏன்?

    செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு விசாரணையில் கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை பெற செந்தில்பாலாஜி மறுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள 3வது நீதிபதி கேள்வி அமலாக்கத்துறை சட்டத்தை மீறி இருந்தால், கூண்டில் ஏற்றி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.



  • 16:53 (IST) 11 Jul 2023
    100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்



  • 16:52 (IST) 11 Jul 2023
    நடிகர் விஜய்யின் ஆலோசனை நிறைவு

    விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு நிறைவு. 234 தொகுதி நிர்வாகிகளுடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை. மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தார்



  • 16:17 (IST) 11 Jul 2023
    தெருவோர கடைகள் - தமிழக அரசுக்கு உத்தரவு

    ராமநாதபுரத்தில் தெருவோர கடைகளுக்கான வாடகை வசூல் செய்யும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு

    தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் தெருவோரக் கடைகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளதா? தெருவோரக் கடைகளுக்கான சட்டம், விதிமுறைகளை மீறி எத்தனை நகராட்சியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பதில் அளிக்க உத்தரவு



  • 16:12 (IST) 11 Jul 2023
    கொடநாடு வழக்கு விசாரணையில் செல்போன்களை ஆய்வு செய்ய மனு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சொல்போன்களை ஆய்வுக்கு அனுப்ப கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள 8 செல்போன்களை ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் 28ம் தேதி இடைக்கால அறிக்கையை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்



  • 16:10 (IST) 11 Jul 2023
    விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு தர்ம அடி

    புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த அப்பகுதி மக்கள். நெஞ்சை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள்



  • 16:09 (IST) 11 Jul 2023
    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து மத்திய அரசு உறுதிமொழி பத்திரம் தாக்கல்

    காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததால் அங்கு அமைதியும், வளர்ச்சியும் கொண்டு வரப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளது



  • 15:37 (IST) 11 Jul 2023
    மதுரையில் கலைஞர் நூலகம் ஜூலை 15-ல் திறப்பு

    மதுரையில் கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15ம் தேதி திறந்து வைக்கிறார்!



  • 15:23 (IST) 11 Jul 2023
    அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமின் நீடிப்பு

    உ.பி. லகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றி 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமின் செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • 14:59 (IST) 11 Jul 2023
    மாவட்ட பொறுப்பாளர்களுடன், விஜய் ஆலோசனை

    பனையூரில் உள்ள இல்லத்தில் 234 தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை; இன்று முதல் 3 நாட்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்



  • 14:31 (IST) 11 Jul 2023
    உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது; இருப்பினும் அவர் ஜூலை 31, 2023 வரை பதவியில் நீடிப்பார்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு



  • 14:25 (IST) 11 Jul 2023
    மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

    புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்பிற்கு நாளை (ஜூலை12) முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.



  • 14:25 (IST) 11 Jul 2023
    திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

    திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை OTT-ல் திரையிடும்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்!- திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை



  • 13:51 (IST) 11 Jul 2023
    பாமக நிர்வாகிகள் கொலை, அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

    செங்கல்பட்டில் கடந்த 50 நாட்களில் பாமக நிர்வாகிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



  • 13:50 (IST) 11 Jul 2023
    10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:41 (IST) 11 Jul 2023
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்

    திரிணாமுல் காங்கிரஸ் 1,218 கிராம பஞ்சாயத்துகளிலும், பிஜேபி 288 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.



  • 13:19 (IST) 11 Jul 2023
    காவல்நிலைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்

    சட்டம் ஒழுங்கு பிரச்னை கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்; காவல்நிலைய மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - காவல் உயர் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 13:17 (IST) 11 Jul 2023
    பாகிஸ்தான் பெண் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

    பாகிஸ்தான். பெண் ஏஜென்ட் ஒருவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், கோப்புகளை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் பிரவீன் பால் கைது செய்யப்பட்டார்.

    முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் அம்பலம்



  • 12:51 (IST) 11 Jul 2023
    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆக.2 முதல் விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

    பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை கடந்த 3 வருடங்களாக நடைபெறவில்லை.



  • 12:51 (IST) 11 Jul 2023
    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆக.2 முதல் விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

    பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை கடந்த 3 வருடங்களாக நடைபெறவில்லை.



  • 12:47 (IST) 11 Jul 2023
    புதுச்சேரியில் கேஸ் மானியம் வழங்க அரசாணை

    புதுச்சேரியில் கேஸ் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கேஸ் மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

    மகளிர் உரிமைத் தொகையை பெற கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்



  • 12:40 (IST) 11 Jul 2023
    தனியார் உணவகம் மூடப்பட்ட விவகாரம் - வேலூர் ஆட்சியர் விளக்கம்

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் - மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்

    பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்

    பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர்.

    பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    தங்கள் தவறை உணர்ந்து, உணவகம் சார்பில் கடிதம் அளித்ததால், அன்று மாலையே உணவகம் திறக்கப்பட்டது- மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்



  • 12:27 (IST) 11 Jul 2023
    ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?

    நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?

    நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் - நீதிபதி

    அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி வழக்கு - சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு விசாரணை



  • 12:11 (IST) 11 Jul 2023
    செந்தில் பாலாஜி மீது வழக்கு எந்த ஆதாரங்களும் இல்லை

    குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை.

    ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது.

    அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

    ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி தரப்பு



  • 11:48 (IST) 11 Jul 2023
    அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் நடவடிக்கை

    கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு

    கொரோனாவால் கொடநாடு வழக்கில் தாமதம் ஏற்பட்டது.

    கொடநாடு வழக்கு விசாரணை முடிவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது - ஜெயக்குமார்

    அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்



  • 11:47 (IST) 11 Jul 2023
    சட்டம் ஒழுங்கு குறித்து ஸ்டாலின் ஆலோசனை

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு



  • 11:46 (IST) 11 Jul 2023
    தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவன் பலி

    சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 7 ஆம் வகுப்பு மாணவன் பலி, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சருகனேந்தல் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்தது



  • 11:32 (IST) 11 Jul 2023
    முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    ரூ. 127 கோடி ஊழல் செய்துள்ளதாக 810 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்



  • 11:22 (IST) 11 Jul 2023
    செந்தில் பாலாஜி மனு - விசாரணை தொடக்கம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீதான விசாரணை தொடக்கம்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் 3ஆவது நீதிபதி முன்பு விசாரணை



  • 11:01 (IST) 11 Jul 2023
    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் 4 கிளைகள் திறப்பு

    கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் 4 கிளைகள் திறப்பு கூட்டுறவு வங்கியின் 4 கிளைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர், அம்பத்தூரில் வங்கி கிளைகள் திறப்பு



  • 11:01 (IST) 11 Jul 2023
    தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

    தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை முதலமைச்சரின் உத்தரவின்படி, நாளை முதல் விற்பனை- கூட்டுறவுத்துறை "பொதுமக்கள் நலன் கருதி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை" ஏற்கனவே சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு



  • 09:59 (IST) 11 Jul 2023
    அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

    அதிமுக பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்



  • 09:58 (IST) 11 Jul 2023
    கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

    கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்டு 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - வைத்திலிங்கம்



  • 09:18 (IST) 11 Jul 2023
    தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் :இ.பி.எஸ் அழைப்பு

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு. டெல்லியில் வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது



  • 09:17 (IST) 11 Jul 2023
    மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்

    செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா, அரசு மருத்துவரை மிரட்டி ரூ. 12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறி அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் தாம்பரம் ஆணையர் நடவடிக்கை



  • 08:24 (IST) 11 Jul 2023
    நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு . திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது, தர்ஷி என்ற இடத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்தது நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பலி. 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி காக்கிநாடா நோக்கி சென்ற பேருந்தில் 40 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. மற்றவர்கள் நிலைமை தெரியவில்லை- மீட்பு பணிகள் தீவிரம்



  • 08:23 (IST) 11 Jul 2023
    சின்ன வெங்காயம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

    சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது



  • 08:21 (IST) 11 Jul 2023
    பாமக மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    பாமக மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட பகை பாமக பிரமுகர் மகனை கொல்ல முயன்ற கும்பல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment