Tamil News Today : நீட் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று இதை அறிவித்தார். தமிழகத்தில் நீட் பீதியில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது
திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் கே.தங்கவேல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த ஆக.31 வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதி; மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என தகவல்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வ நாராயணன் நேற்று வெளியிட்டுள்ளா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அடுத்த மாதம் 1-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலங்களவை காலையிலும் மக்களவை மாலையிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இம்முறை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் கொரோனா பாதிப்பு, சீனாவுடனான எல்லை மோதல், ஜிடிபி சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளன.
வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரத்தில் மேற்கு மத்திய வங்கக் கடல் மீது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென் இந்தியாவின் பல பகுதிகளிலும், மகாராஷ்டிராவிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சில பகுதிகளில் நாளை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கு இதுவரை தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை. இது அடுத்தாண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம். தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதில், அரசு முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “மாணவர்கள் மருத்துவப் படிப்பு மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கக்கூடாது. எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேரலாம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை. போராடிய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
நடிகர் விஷால் பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவல் தவறானது என அவரது மேலாளர் ஹரி விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்திக்க விஷால் நேரம் கேட்டதாக தகவல் வெளியானது. இதனால், விஷால் பாஜகவில் சேர உள்ளதாக பேசப்பட்டது. இதற்கு விஷாலின் மேலாளர் ஹரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த ஆதித்யாவின் உடலை வாங்க போலீசார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாணவரின் குடும்பத்திற்கு அரசு வேலை நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 7,417 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு அச்சத்தை போக்க அரசின் சார்பில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை பதிவு தொடர்பாக, மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுகளின் வருகையை பதிவு செய்ய ஏற்ற வகையில், மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதை எளிதாக்கும் எனவும், இந்த செயலி நாடாளுமன்ற வளாகப் பகுதியில் மட்டுமே செயல்பட ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் . இதன் காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ராகுல் காந்தியும் உடன் சென்றுள்ள நிலையில், நடப்பு கூட்டத் தொடரில் சோனியா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. ஒருசில நாட்களில் நாடு திரும்பும் ராகுல்காந்தி , கூட்டத் தொடரில் பங்கேற்பார் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டியது குறித்து, அக்கட்சி எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி தெளிவான அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
அரசு நல திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரும் மனுவை, 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்று புதிய வாழ்க்கை துவங்கலாம்
தொடர்புக்கு : +91 44 2464 0050, +91 44 2464 0060
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights