Advertisment

Tamil news today: அனைத்து பல்கலை, 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news Updates

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நடைமுறையினை பின்பற்றிடும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில், தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த பாடத்திட்ட மாற்றம் அமலுக்கு வருவதாகவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

பெட்ரோல்டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற உள்ளது.  வரும் 17ஆம் தேதி துவங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:38 (IST) 14 Oct 2022
    நடிகர் அர்ணவ்-க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    காதல் மனைவியை அடித்ததாக அளித்த புகாரில், போலீசாரால் நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டு

    அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நடிகர் அர்ணவ் அக்டோபர் 28ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.



  • 23:36 (IST) 14 Oct 2022
    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை; ரூ.1.12 கோடி பறிமுதல்

    அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு கோடியே 12 லட்சம் பணம் சிக்கியது. திருவாரூர் கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியிலிருந்து மட்டும் ரூ.75 லட்சம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்.



  • 21:09 (IST) 14 Oct 2022
    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் - டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு

    மாணவி சத்தியபிரியாவை ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



  • 19:59 (IST) 14 Oct 2022
    நேட்டோவுடன் நேரடி மோதல் உலக அளவில் பேரழிவிற்கு வழிவகுக்கும் - ரஷ்ய அதிபர் புதின்

    நேட்டோ நாடுகளுடனான நேரடி மோதல் உளகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும். உக்ரைனின் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பகுதியில் வசிப்பவர்கள் அங்கிருந்து ரஷ்யாவிற்கு வெளியேற விரும்பும் மக்களுக்கு இலவச தங்குமிடத்தை அளிக்க ரஷ்யா உறுதியளித்துள்ளது.

    ரஷ்யாவுடன் நேட்டோ படைகளின் எந்தவொரு நேரடி மோதலும் 'உலகளாவிய பேரழிவிற்கு' வழிவகுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை கூறினார்.

    கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி தனது தேசிய நலனை விட நேட்டோவுடனான தனது விசுவாசத்தை முதன்மைப்படுத்தி தவறு செய்கிறது என்று கூறினார். 3,00,000 வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதை இலக்காகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் கூறிய பகுதி அணிதிரட்டல் கடந்த மாதம் அவர் அறிவித்தார். இது இரண்டு வாரங்களுக்குள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.



  • 19:43 (IST) 14 Oct 2022
    நடிகர் அர்ணவிடம் விசாரணை நிறைவு

    நடிகர் அர்ணவிடம் நடைபெற்ற போலீசாரின் விசாரணை நிறைவடைந்தது. சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் வைத்து அர்ணவிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அர்ணவை அழைத்து சென்றுள்ளனர்.



  • 18:38 (IST) 14 Oct 2022
    “பெண்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்”- விஜயகாந்த் கோரிக்கை

    சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரயில் நிலையங்களில் ஸ்வாதி, ஸ்வேதா வரிசையில் சத்யாவும் கொல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:34 (IST) 14 Oct 2022
    அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு? உயர் நீதிமன்றம் யோசனை

    அரசு உதவிப் பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.



  • 18:14 (IST) 14 Oct 2022
    சென்னையில் அமைச்சரவை கூட்டம்

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

    வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.



  • 18:11 (IST) 14 Oct 2022
    சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    சென்னை ராயப் பேட்டையில் உள்ள புதுக்கல்லூரில் சனிக்கிழமை (அக்.15) காலை 11 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.



  • 18:09 (IST) 14 Oct 2022
    நீட் ரிட் மனு ஒத்திவைப்பு

    நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுவை 12 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.



  • 17:50 (IST) 14 Oct 2022
    மாணவி கொலை: சதீஷிக்கு நீதிமன்ற காவல்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டு நேற்று மாலை கொலை செய்தார்.

    இந்த நிலையில் சதீஷை கைது செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது சதீஷின் முகத்தை மூடி அழைத்து வந்ததால் போலீசாருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், சதீஷை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.



  • 17:35 (IST) 14 Oct 2022
    திருப்பத்தூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

    திருப்பத்தூரில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 17:22 (IST) 14 Oct 2022
    மாணவி சத்யா கொலை.. சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டு நேற்று மாலை கொலை செய்தார்.

    இந்த நிலையில் சதீஷை கைது செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



  • 17:17 (IST) 14 Oct 2022
    சிறுமிக்கு தொந்தரவு- இளைஞருக்கு சிறை

    புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 32 வயதான சுரேஷ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.



  • 17:06 (IST) 14 Oct 2022
    இந்தி மொழியை அல்ல, திணிப்பை எதிர்க்கிறோம்- பொன்முடி

    “நாங்கள் இந்தி உள்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழியை அல்ல இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



  • 16:40 (IST) 14 Oct 2022
    சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது!

    சின்னத்திரை நடிகர் அர்ணவை மாங்காடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை நேரில் ஆஜராக சம்மன் அளித்திருந்த நிலையில், ஆஜராகாததால் கைது செய்யப்பட்டுள்ளார். நேமம் என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்



  • 16:13 (IST) 14 Oct 2022
    ஆர்.சி.பி-யை தவறாகப் பேசிய நண்பரைக் கொன்ற கோலி ரசிகர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

    ரோஹித் சர்மா - விராட் கோலி யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று குடிபோதையில் சண்டையிட்டதைத் தொடர்ந்து தனது நண்பரைக் கொன்றதாகக் கூறப்படும் 21 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • 16:13 (IST) 14 Oct 2022
    ஆர்.சி.பி-யை தவறாகப் பேசிய நண்பரைக் கொன்ற கோலி ரசிகர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

    ரோஹித் சர்மா - விராட் கோலி யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று குடிபோதையில் சண்டையிட்டதைத் தொடர்ந்து தனது நண்பரைக் கொன்றதாகக் கூறப்படும் 21 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • 16:11 (IST) 14 Oct 2022
    அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

    தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் என்றும், 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 16:10 (IST) 14 Oct 2022
    இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: தேதி அறிவிப்பு!

    இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட தேர்தலில் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும், அக்டோபர் 17ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்; அக்.25ல் வேட்புமனு தாக்கல் நிறைவு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், அக்டோபர் 27ல் வேட்புமனு மீது பரிசீலனை என்றும், வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 29 ஆம் தேதி தான் கடைசி நாள் என்றும் குறிப்பிட்டுள்ளது.



  • 14:59 (IST) 14 Oct 2022
    மத்திய அரசு மறுப்பு

    3 ஜி, 4 ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என, வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.



  • 14:32 (IST) 14 Oct 2022
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசின் தரப்பையும் கேட்க வேண்டும் எனக்கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது



  • 14:30 (IST) 14 Oct 2022
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து 60,000 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது. அரியலூர் - கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 13:44 (IST) 14 Oct 2022
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை , நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:42 (IST) 14 Oct 2022
    திருமா கோரிக்கை

    பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும். சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும் தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 13:42 (IST) 14 Oct 2022
    புகழேந்தி விமர்சனம்

    பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. பழனிசாமி பொதுச் செயலாளர் ஆக முடியாது. அதிமுக-வை ஓபிஎஸ் மட்டுமே வளர்க்க முடியும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.



  • 12:50 (IST) 14 Oct 2022
    மாணவியின் தந்தை மாணிக்கத்தின் உடற் கூறாய்வு தொடங்கியது

    ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கத்தின் உடற் கூறாய்வு தொடங்கியது

    சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வு தொடங்கியது

    மயில் துத்தம் என்ற வேதிப்பொருளை மது உடன் கலந்து குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்



  • 12:48 (IST) 14 Oct 2022
    நயன் - விக்கி குழந்தைகள் விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

    நயன் - விக்கி சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 12:13 (IST) 14 Oct 2022
    உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

    சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

    ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • 12:13 (IST) 14 Oct 2022
    டெல்லியில் பட்டாசு எதிரான மனுக்கள்- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

    டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு எதிரான மனு

    மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு



  • 11:52 (IST) 14 Oct 2022
    நடிகர் அர்ணவ் விசாரணைக்கு ஆஜராவதிற்கு கால அவகாசம் கோரி மனு

    சின்னத்திரை நடிகர் அர்ணவ் விசாரணைக்கு ஆஜராவதிற்கு கால அவகாசம் கோரி மனு

    மனைவி திவ்யா அளித்த புகாரில் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மனு

    கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைக்கு வரும் 18ம் தேதி ஆஜராக கால அவகாசம் கோரி மனு



  • 11:52 (IST) 14 Oct 2022
    நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

    நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு 2020ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை

    விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு



  • 10:08 (IST) 14 Oct 2022
    குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

    தென்காசி; குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி . நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளதால் அனுமதி



  • 09:09 (IST) 14 Oct 2022
    நிலநடுக்கம்

    சத்தீஸ்கர், அம்பிகாபூர் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு



  • 09:08 (IST) 14 Oct 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 09:08 (IST) 14 Oct 2022
    மாணவியின் தந்தை உயிரிழப்பு

    சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு . மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment