பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 229-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
4 பேருக்கு பி.எப் 7 வகை கொரோனா
மேற்கு வங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 உள்பட 4 பேருக்கு பி.எப் 7 வகை கொரோனா தொற்று உறுதி. அமெரிக்காவில் இருந்து வந்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணையை விரைந்து முடிக்க திட்டம்
அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாரா? என உச்ச நீதிமன்றம் கேள்வி. மேலும் வழக்கு விசாரணையை இந்த வாரமே முடிக்க உச்ச நீதிமன்றம் திட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார். அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற கிராமப்புற கோயில்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்களே தவிர, மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல; எந்த மனிதரையும் ஜாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காக தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றா சட்டத்தை கொண்டு வந்தோம்” என்று கூறினார்.
தி.மு.க எம்.பி கனிமொழி ட்வீட்: “நம் மொழி – பண்பாடு – அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் மொழி – பண்பாடு – அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!ிழ்நாடு
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 5, 2023
தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்லார். ஓ.பி.எஸ் தனது தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து தேனி செல்கிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் உடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் சென்ற பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து சிசிடிவி காட்சிகள் இல்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் இளைஞரை தாக்கிய மர்மநபர்கள் கரை கடத்தியுள்ளனர். காயங்களுடன் காரில் இருந்து குதித்து இளைஞர் தப்பித்துள்ளார். ஓ.எல்.எக்ஸி-ல் காரை விற்க முயன்றவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட கோட்டயத்தை சேர்ந்த செவிலியர் மயங்கி விழுந்த நிலையில், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 2500 கோயில்களின் திருப்பணிக்காக ரூ. 50 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலா 2 லட்சம் வீதம் கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை பரிந்துரை செய்துள்ளது.மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியினக் நாடு தழுவிய பாதயாத்திரை தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை நெருங்கியுள்ள நிலையில், ராகுல் காந்தியின் சாயலில் உள்ள நபர் ஒருவர் இந்திய ஒற்றுமை பயணத்தில் நேற்று இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீதியில் வந்து போராடும் செவிலியர்களின் பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு முழு விமான கட்டணத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிக் கொடுத்தது
பதவியை குறுக்கு வழியில் பெற இ.பி.எஸ் முயற்சிப்பதாக, உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் 2ம் நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியுள்ளது
அ.தி.மு.க.,வின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு தெரிவித்துள்ளது
பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓ.பி.எஸ் தரப்பு கூறியுள்ளது
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 3.04 கோடி ஆண் வாக்காளர்களும், 3.15 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேரும், வெளிநாட்டு வாக்காளர்கள் 3,310 பேரும் உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நட த்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை ஜனவரி 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடம் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சரை மீட்டனர் லிஃப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்ற போது, லிஃப்ட் பழுதாகி வழியில் நின்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரம் . வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை . நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கடுமையாக எச்சரித்த நிலையில் நடவடிக்கை.
தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார் திமுக எம்.பி.கனிமொழி
சென்னையில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடங்களில், 20 கூடுதல் பேருந்தை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் – 3.04 கோடி, பெண் வாக்காளர்கள் – 3.15 கோடி
மூன்றாம் பாலினத்தவர்கள் – 8,027 பேர், வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் – 3,310 பேர்
தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேர்காணல் நடத்த விரும்புகிறேன் – அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா? – பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் ட்வீட்
திருப்பூர் பெத்தாம்பாளையம் அருகே தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் காதலி பூஜாவை(19) உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் லோகேஷ் கைது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்துள்ளனர்.
ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தவும் முடிவு
பாரத் ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று நடக்கிறது.
ஜனவரி 15-ம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை.
புதுச்சேரியில் அரசு நல திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவிப்பு.
துணை நிலை ஆளுநார் தமிழிசை உத்தரவுப்படி அனைத்து துறை தலைவர்கள், செயலர்கள், இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜனவரி 5) கர்நாடகாவுக்கு வருகை தரும் போது பெங்களூரு-மைசூரு மற்றும் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலைத் திட்டங்களை வான்வழி மூலம் ஆய்வு செய்கிறார்.
ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை.
வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடக்கம்
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20, இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு