சோனியா காந்தி நாளையும் ஆஜராக உத்தரவு
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் அவர் நாளையும் (புதன்கிழமை) ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள் சோனியா காந்தியிடமும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் வருகை- ட்ரோன் பறக்க தடை
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
இதையடுத்து 28-29ஆம் ஆகிய இரு தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாணவி மரணம் 3 சிறப்பு தனிப்படை அமைப்பு
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை. டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு.
இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil3.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டில் 109 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 501 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ. 28,732 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்கு ராஜ்நாத் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதப் படைகளின் மூலதன கையகப்படுத்தல் திட்டங்களுக்கான தேவையை ஏற்றுக்கொண்டு ஆயுதக் கொள்முதல் வாங்குவது தொடர்பாக ரூ. 28,732 கோடிக்கு பாதுகாப்பு அமைசக் குழு ஒப்புதல் அளித்தது. இது பாதுகாப்பில் 'ஆத்ம நிர்பர்தா'வுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை வீட்டில் விபச்சாரம் – தலைமறைவாக இருந்த மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக், உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மராக்கின் பண்ணை வீட்டில் இருந்து 5 சிறார்கள் மீட்கப்பட்டனர். ஆண், பெண் என 73 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 168 லிட்டர் சாராயமும் போதை மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவைக்கு ராம்சர் அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக வனத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1450 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 31 வீடுகள், 19 வீட்டு மனைகள், 5 கடைகள் முடக்கப்பட்டு 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை தென்மண்டல ஜஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் பட்டப்பகலில் இளைஞரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கள் வைத்திருந்த அறிவாளால் இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
திருவள்ளூரில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் உடலுக்கு சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின், மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு, மாற்று வகுப்புகள் குறித்து பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என சில பெற்றோர் கருத்து கூறியுள்ளனர்.
இலங்கையின் 8வது அதிபராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு குடும்ப நல நீதிமன்றங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடும்ப நல வழக்குகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என மக்களவையில் அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார்
டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசியுள்ளார். இதில் தமிழ்நாட்டில் விமானி பயிற்சி பள்ளி அமைப்பது குறித்து கோரிக்கை விடுத்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்க பணிகள் குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் 28 மற்றும் 29ம் தேதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
லக்கீம்பூர் வன்முறை வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துள்ளது
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர். மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் மாநிலங்களவை துணைத் தலைவர் சஸ்பெண்ட் செய்தார்
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான ராஜேந்திரன் என்பவரின் கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ராஜேந்திரனின் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி வரும் கட்டிடங்களில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள துவக்க விழாவுக்கான அழைப்பிதழை அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்.
குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 28 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை. சசிகலா இன்னும் அதிமுகவில் நீடிக்கிறார் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ரஞ்சீத் ரஞ்சன், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மத்திய அரசை சர்வாதிகார அரசு என விமர்சித்த ராகுல், இந்தியா போலீஸ் ராஜ்ஜியம், மோடி அதில் ராஜா என சாடினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், ஆயர்மடம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை.
மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரண்டாவது கட்ட விசாரணைக்கு வந்தார். அவருடன் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியும் சென்றனர்.
திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது. அரசு தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலெட்சுமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசனை கள்ளக்குறிச்சிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ட்விட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம், கலவரம் குறித்து வதந்தி பரப்பியவர்களின் விவரங்களை கோரும் காவல்துறை.
கன்னியாகுமரி வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி. விவேகானந்தர் மண்டபத்தில் கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸிடம் ஒலிம்பியாட் ஜோதி ஒப்படைப்பு. அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
மாணவி மரணம் – பிரேத பரிசோதனை தொடங்கியது. திருவள்ளூர் 12 ஆம் வகுப்பு மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியது.