Advertisment

Tamil news Highlights: மழை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 18 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news Highlights: மழை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 393-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி, நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மோடி அரசுக்கு நம்பிக்கை இல்லையா? 7 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 3.84 லட்சம் வேலைகளை மோடி அரசு பறித்தது ஏன்? மத்திய அரசின் வேலைகளின் பெண்களுக்கான வாய்ப்பு 42 குறைந்தது ஏன் எனவும் கேள்வி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 22:46 (IST) 18 Jun 2023
    முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? வேல்முருகன் கேள்வி

    தலைமைச்செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்

  • 21:32 (IST) 18 Jun 2023
    உதயநிதி ஸ்டாலினுக்கு காளை பொறித்த செங்கோல் பரிசு

    புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை பொறித்த செங்கோல் பரிசு வழங்கப்பட்டது

  • 20:40 (IST) 18 Jun 2023
    நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் EDக்கும் பயப்பட மாட்டோம் - உதயநிதி

    நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் EDக்கும் பயப்பட மாட்டோம் என புதுக்கோட்டை நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

  • 20:37 (IST) 18 Jun 2023
    நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் EDக்கும் பயப்பட மாட்டோம் - உதயநிதி

    நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் EDக்கும் பயப்பட மாட்டோம் என புதுக்கோட்டை நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

  • 20:10 (IST) 18 Jun 2023
    முதல்வர் நடத்திய போராட்டத்தால், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டது - உதயநிதி

    முதல்வர் நடத்திய போராட்டத்தால், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டது. தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்படும் என புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

  • 20:01 (IST) 18 Jun 2023
    மது குடித்தவர்கள் பலி; விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • 19:41 (IST) 18 Jun 2023
    தஞ்சாவூரில் பாஜக கார்ல்மார்க்ஸ் உள்பட 2 பேர் கைது

    தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதாக பாஜக பிரமுகர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஹரிதாஸை போலீசார் கைது செய்தனர்.

  • 19:28 (IST) 18 Jun 2023
    டெல்லி மெட்ரோ வீடியோ வைரல்

    டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணி ஒருவர், Hair Straightener பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!

  • 19:15 (IST) 18 Jun 2023
    சென்னையில் ராட்சத சுறா

    சென்னையில் ஸ்கூபா டைவிங்கின் போது ராட்சத புள்ளி சுறாவை இளைஞர் ஒருவர பார்த்த வீடியோ வைரலாகிவருகிறது.

  • 18:46 (IST) 18 Jun 2023
    முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு நன்றி

    திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு நன்றி. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான நீக்க நடவடிக்கை மகிழ்ச்சி அவதூறாக பேசியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்துள்ளார்

  • 18:45 (IST) 18 Jun 2023
    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது. குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் வழக்குப்பதிந்த நிலையில் கைது. கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை

  • 17:47 (IST) 18 Jun 2023
    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்

    திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • 17:19 (IST) 18 Jun 2023
    பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதுதான் திராவிட மாடலா? - குஷ்பு பேட்டி

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சென்னை ஆர்.ஏ. புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒரு பேச்சாளர் ஒரு மேடையில் என்னைப் பற்றி ரொம்ப அவதூறாக, கேவலமாக, அருவெறுப்பாக, தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். ஒரு போராட்ட தளத்தில் இருக்கிற பேச்சாளர் இப்படி அடிக்கடி இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்தில் கேவலமாகப் பேசுறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும், ஏற்கெனவே கட்சியில் சஸ்பெண்ட் ஆகி, மறுபடியும் கெஞ்சி கூத்தாடி கட்சியில் சேர்ந்ததுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி பேசியிருக்கிறார். இதே மாதிரி இதற்கு முன்னாடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதற்காக, அப்போது நான் மகளிர் ஆணையத்தில் கிடையாது. அந்த நேரத்தில் மகளிர் ஆணையத்தில் புகார் பதிவு செய்து அவர் டெல்லி வரைக்கும் போய், எழுதி மன்னிப்பு கேட்டார். எந்த பொண்ணுங்களப் பத்தியும் இப்படி அவதூறாகப் பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார். இப்போது இவர் இப்படி பேசுவதனால், போனால் போகிறது விட்டுவிடலாம், திராவிட மாடல் இதுதான், பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவது, இழிவாகப் பேசுவது, புது திராவிட மாடல் இதுதான் என்று நான் புரிஞ்சுக்கிறேன். இதற்கு மேல இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

    ஆனால், ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, ஒரு தேசத்தோட உறுப்பினராக நான் இருக்கும்போது என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசும்போது நான் போனா போகிறது என்று விட்டுவிட்டால் நம்ம நாட்டில் இருக்கிற மற்ற பெண்களை நினைத்துப் பாருங்கள், நம்ம நாட்டில் எங்கே ஒரு பிரச்னை நடந்தாலும் அந்த புகார் எனக்கு வரும். சமீபத்தில் டிஜிபி, ஏடிஜிப் இருக்கிற கம்ப்ளைண்ட் என்ன ஆச்சு என்று கேட்பதற்கு நான் போயிருந்தேன்.

    பெண்களைப் பாதுகாப்பதற்காக நான் வேலை செய்யும்போது என்னைப் பற்றி ஒருவர் அவதுறாக பேசும்போது அதை தெரியாத மாதிரி போனா போகிறது என்று விட்டுவிட்டால், பொதுவில் பெண்கள் உங்களுக்காக நீங்கள் சண்டை போடாவிட்டால் நீங்கள் எப்படி எங்களுக்காக சண்டை போட முடியும் என்ற சந்தேகம் வரும். ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு இழிவாக, தரைக்குறைவாகப் பேசுவதற்கு யாருக்குமே அனுமதி கிடையாது.

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல. பென்களை அவதூறாகப் பேச உரிமை கொடுத்தது யார்? ஒரு பெண்ணாக யாரும் என்னை சீண்டிப் பார்க்காதீர்கள். பெண்களை கொச்சைப் படுத்துவதுதான் திராவிட மாடலா? பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது. பெண்களை இழிவுபடுத்துவோர் எந்த கட்சியினராக இருந்தாலும் அது தவறுதான். பெண்களை அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

  • 17:15 (IST) 18 Jun 2023
    இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பிடித்த கோவை மாணவர்

    கோவை: ராமாயணத்தின் முழு இதிகாசங்களை 1 மணி நேரம் 37 நிமிடங்களில் சொற்பொழிவாற்றி, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் 3ம் வகுப்பு மாணவன் சௌரவ் சிவகுமார்!

  • 16:36 (IST) 18 Jun 2023
    பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதுதான் திராவிட மாடலா? - குஷ்பு பேட்டி

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சென்னை ஆர்.ஏ. புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒரு பேச்சாளர் ஒரு மேடையில் என்னைப் பற்றி ரொம்ப அவதூறாக, கேவலமாக, அருவெறுப்பாக, தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். ஒரு போராட்ட தளத்தில் இருக்கிற பேச்சாளர் இப்படி அடிக்கடி இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்தில் கேவலமாகப் பேசுறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும், ஏற்கெனவே கட்சியில் சஸ்பெண்ட் ஆகி, மறுபடியும் கெஞ்சி கூத்தாடி கட்சியில் சேர்ந்ததுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி பேசியிருக்கிறார். இதே மாதிரி இதற்கு முன்னாடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதற்காக, அப்போது நான் மகளிர் ஆணையத்தில் கிடையாது. அந்த நேரத்தில் மகளிர் ஆணையத்தில் புகார் பதிவு செய்து அவர் டெல்லி வரைக்கும் போய், எழுதி மன்னிப்பு கேட்டார். எந்த பொண்ணுங்களப் பத்தியும் இப்படி அவதூறாகப் பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார். இப்போது இவர் இப்படி பேசுவதனால், போனால் போகிறது விட்டுவிடலாம், திராவிட மாடல் இதுதான், பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவது, இழிவாகப் பேசுவது, புது திராவிட மாடல் இதுதான் என்று நான் புரிஞ்சுக்கிறேன். இதற்கு மேல இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

    ஆனால், ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, ஒரு தேசத்தோட உறுப்பினராக நான் இருக்கும்போது என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசும்போது நான் போனா போகிறது என்று விட்டுவிட்டால் நம்ம நாட்டில் இருக்கிற மற்ற பெண்களை நினைத்துப் பாருங்கள், நம்ம நாட்டில் எங்கே ஒரு பிரச்னை நடந்தாலும் அந்த புகார் எனக்கு வரும். சமீபத்தில் டிஜிபி, ஏடிஜிப் இருக்கிற கம்ப்ளைண்ட் என்ன ஆச்சு என்று கேட்பதற்கு நான் போயிருந்தேன்.

    பெண்களைப் பாதுகாப்பதற்காக நான் வேலை செய்யும்போது என்னைப் பற்றி ஒருவர் அவதுறாக பேசும்போது அதை தெரியாத மாதிரி போனா போகிறது என்று விட்டுவிட்டால், பொதுவில் பெண்கள் உங்களுக்காக நீங்கள் சண்டை போடாவிட்டால் நீங்கள் எப்படி எங்களுக்காக சண்டை போட முடியும் என்ற சந்தேகம் வரும். ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு இழிவாக, தரைக்குறைவாகப் பேசுவதற்கு யாருக்குமே அனுமதி கிடையாது.” என்று கூறினார்.

  • 16:34 (IST) 18 Jun 2023
    பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதுதான் திராவிட மாடலா? - குஷ்பு பேட்டி

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சென்னை ஆர்.ஏ. புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒரு பேச்சாளர் ஒரு மேடையில் என்னைப் பற்றி ரொம்ப அவதூறாக, கேவலமாக, அருவெறுப்பாக, தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். ஒரு போராட்ட தளத்தில் இருக்கிற பேச்சாளர் இப்படி அடிக்கடி இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்தில் கேவலமாகப் பேசுறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும், ஏற்கெனவே கட்சியில் சஸ்பெண்ட் ஆகி, மறுபடியும் கெஞ்சி கூத்தாடி கட்சியில் சேர்ந்ததுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி பேசியிருக்கிறார். இதே மாதிரி இதற்கு முன்னாடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதற்காக, அப்போது நான் மகளிர் ஆணையத்தில் கிடையாது. அந்த நேரத்தில் மகளிர் ஆணையத்தில் புகார் பதிவு செய்து அவர் டெல்லி வரைக்கும் போய், எழுதி மன்னிப்பு கேட்டார். எந்த பொண்ணுங்களப் பத்தியும் இப்படி அவதூறாகப் பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார். இப்போது இவர் இப்படி பேசுவதனால், போனால் போகிறது விட்டுவிடலாம், திராவிட மாடல் இதுதான், பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவது, இழிவாகப் பேசுவது, புது திராவிட மாடல் இதுதான் என்று நான் புரிஞ்சுக்கிறேன். இதற்கு மேல இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

    ஆனால், ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, ஒரு தேசத்தோட உறுப்பினராக நான் இருக்கும்போது என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசும்போது நான் போனா போகிறது என்று விட்டுவிட்டால் நம்ம நாட்டில் இருக்கிற மற்ற பெண்களை நினைத்துப் பாருங்கள், நம்ம நாட்டில் எங்கே ஒரு பிரச்னை நடந்தாலும் அந்த புகார் எனக்கு வரும். சமீபத்தில் டிஜிபி, ஏடிஜிப் இருக்கிற கம்ப்ளைண்ட் என்ன ஆச்சு என்று கேட்பதற்கு நான் போயிருந்தேன்.

    பெண்களைப் பாதுகாப்பதற்காக நான் வேலை செய்யும்போது என்னைப் பற்றி ஒருவர் அவதுறாக பேசும்போது அதை தெரியாத மாதிரி போனா போகிறது என்று விட்டுவிட்டால், பொதுவில் பெண்கள் உங்களுக்காக நீங்கள் சண்டை போடாவிட்டால் நீங்கள் எப்படி எங்களுக்காக சண்டை போட முடியும் என்ற சந்தேகம் வரும். ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு இழிவாக, தரைக்குறைவாகப் பேசுவதற்கு யாருக்குமே அனுமதி கிடையாது.

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல. பென்களை அவதூறாகப் பேச உரிமை கொடுத்தது யார்? ஒரு பெண்ணாக யாரும் என்னை சீண்டிப் பார்க்காதீர்கள். பெண்களை கொச்சைப் படுத்துவதுதான் திராவிட மாடலா? பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது. பெண்களை இழிவுபடுத்துவோர் எந்த கட்சியினராக இருந்தாலும் அது தவறுதான். பெண்களை அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

  • 16:01 (IST) 18 Jun 2023
    2 லட்சம் வேலைகளை அழித்துள்ளார்கள்; ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: “இந்தியாவின் பெருமையாக கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெறுவது இளைஞர்களின் கனவாக இருந்தது; ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மொத்தமாக மறந்துவிட்டது; 2014 ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் 16.9 லட்சமாக இருந்த வேலைகளின் எண்ணிக்கை 2022 இல் 14.6 லட்சமாக குறைந்துள்ளது. முன்னேறும் நாட்டில் வேலைகள் குறையுமா? பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1,81, 127 வேலைகளும், செய்ல் நிறுவனத்தில் 61, 928, எம்.டி.என்.எல் - 34, 997, இ.சி.எல் - 29, 140, எஃப்.சி.ஐ - 28, 063, ஓ.என்.ஜி.சி - 21,120 வேலைகள் குறைந்துள்ளன. 2 கோடி வேலைகள் உருவாக்குவோம் என பொய் வாக்குறுதி கொடுத்து, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகளை அழித்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வை இரட்டிப்பாக்கியுள்ளனர்; இது அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையான இடஒதுக்கீட்டை மறுப்பதற்கான நடவடிக்கையா” என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 15:18 (IST) 18 Jun 2023
    கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

    வங்கக்கடல் பகுதியில் மோசமான சூழல் நிலவும் என்பதால் கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • 14:50 (IST) 18 Jun 2023
    “திரைக்கவர்ச்சி மிகப்பெரிய பேராபத்து; இதற்காக வருத்தப்படுகிறேன்” - சீமான்

    கோவில்பட்டியில் சீமான் பேட்டி: “தமிழ்நாட்டு அரசியல், சினிமா நோக்கி செல்வது சாபக்கேடான விஷயம்; திரைக்கவர்ச்சி மிகப்பெரிய பேராபத்து; படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்த தலைவனாகி விடலாம் என்று நினைப்பதே அவமானம்” என்று கூறியுள்ளார்.

  • 14:46 (IST) 18 Jun 2023
    ஜூன் 20-ல் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் நிதிஷ்குமார்!

    திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஜூன் 20-ம் தேதி திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு தி.மு.க-வினர் திரண்டு வருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

  • 14:32 (IST) 18 Jun 2023
    பேருந்து நடத்துனர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “பேருந்துகளின் நடத்துனர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள், பேருந்துகளில் டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்பதற்கு மாறாக பயணச்சீட்டு, பயணச்சீட்டு என்று கேளுங்கள்; சிறிய முயற்சி கூட பெரிய மாற்றங்களுக்கு வித்தாகும், அன்னைத் தமிழுக்கு உங்களாளும் சேவை செய்ய முடியும்” என்று நடத்துனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 14:29 (IST) 18 Jun 2023
    ஜூன் 20-ம் தேதி தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 20ம் தேதி தமிழகம் வருகிறார். தாம்பரம் இரும்புலியூரில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

  • 14:03 (IST) 18 Jun 2023
    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • 13:17 (IST) 18 Jun 2023
    செந்தில் பாலாஜி உடல் நிலை தொடர்பாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறையினர் விவரங்களை சேகரித்து வருகிறது

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி; செந்தில் பாலாஜி கைதான முதல் 2 நாட்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான மருந்து கொடுக்கப்பட்டது; அவரது உடல்நிலை 4வது நாளாக தொடர்ந்து காவேரி மருத்துவமனை மருத்துவர்களால் கண்காணிப்பு; காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்

  • 13:10 (IST) 18 Jun 2023
    ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்டவர் கைது

    ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்ட எம்.பி. நவாஸ் கனியின் ஆதரவாளர் கைது. சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஜயராமு என்பவரை கைது செய்த போலீசார்.

  • 12:39 (IST) 18 Jun 2023
    இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

    காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை. வழக்கு ஒன்றிற்காக காரைக்குடி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற போது சம்பவம். காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல் தனது கூட்டாளிகளுடன் சென்ற மதுரையை சேர்ந்த வினீத் என்பவரை வழிமறித்து கொலை செய்த மர்ம கும்பல் சம்பவ இடத்தில் இருந்த வினீத்தின் கூட்டாளிகள் 3 பேரிடம் போலீசார் விசாரணை பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தால் காரைக்குடியில் பரபரப்பு

  • 12:03 (IST) 18 Jun 2023
    உணவில் பாதி உடைந்த பிளேடு துண்டு கண்டறியப்பட்ட சம்பவம்

    ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள கெளரி கங்கா உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பாதி உடைந்த பிளேடு துண்டு கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனையிட்டு உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்!

  • 11:57 (IST) 18 Jun 2023
    பிபர்ஜாய் புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள கட்ச் மாவட்டம் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும்

    "பிபர்ஜாய் புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள கட்ச் மாவட்டம் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும்; இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் அதிலிருந்து விரைவாக மீள முடியும்; இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள சூழலில், ஒவ்வொரு துளி மழை நீரையும் நாம் சேகரிக்க வேண்டும்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

  • 11:38 (IST) 18 Jun 2023
    அரசியலாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, தோல்வி என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம்

    "அரசியலாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, தோல்வி என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம்; உடல்நிலை சரியாக இருந்தால் தான் மனநிலை சரியாக இருக்கும், அப்படி இருக்கும் போது எந்த சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும்; கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலுமே முதன்மையாக வர வேண்டும் என மாணவர்கள் கருத வேண்டும்" - விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பொன்முடி உரை

  • 11:35 (IST) 18 Jun 2023
    11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • 10:22 (IST) 18 Jun 2023
    ஆட்சியரை தள்ளிவிட்ட எம்.பி உதவியாளர் மீது வழக்கு

    ஆட்சியரை தள்ளிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவு

    ராமநாதபுரம் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்ட எம்.பி உதவியாளர் மீது வழக்கு பதிவு.

    ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு. அரசு நிகழ்ச்சியில் அமைச்சர்- எம்.பி இடையே ஏற்பட்ட மோதலில் ராமநாதபுரம் ஆட்சியர் கீழே தள்ளிவிடப்பட்டார்.

  • 10:18 (IST) 18 Jun 2023
    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பி.எஸ்

    நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது என்ற ஆய்வின் அடிப்படையில், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்"

    மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

  • 09:09 (IST) 18 Jun 2023
    ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் பயணம்

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் பயணம்

    காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதல்வர் பயணம்

    காட்டூரில் ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோட்டத்தில் அருங்காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது

  • 09:07 (IST) 18 Jun 2023
    பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர்

    பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர் - அமைச்சர் எ.வ.வேலு

    தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் - அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

  • 09:05 (IST) 18 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைபாஸ் சர்ஜரி?

    செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதால் பைபாஸ் சர்ஜரி செய்ய ஏற்பாடு.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment