Advertisment

Tamil news today : சென்னை உள்பட இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 03 Nov 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news today : சென்னை உள்பட இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை

TN Rains

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ராஜராஜ சோழன் சதயவிழா

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (நவம்பர் 3) உள்ளூர் விடுமுறை. மன்னரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

கனமழை - விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:29 (IST) 03 Nov 2022
    மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

    சென்னை, கோயம்பேடு - ஏர்போர்ட் செல்லும் மெட்ரோ ரயில் சேவை ஈக்காட்டுத்தாங்கல் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.



  • 22:28 (IST) 03 Nov 2022
    "சென்னையில் கனமழை நீடிக்கும் என தகவல்

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 22:28 (IST) 03 Nov 2022
    சென்னையில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 22:26 (IST) 03 Nov 2022
    ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

    நாளை மறுநாள் முதல் பாலின் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய இயக்குநர் அறிவித்துள்ளார்.



  • 20:33 (IST) 03 Nov 2022
    சென்னையில் கனமழை : மெடரோவில் அலைமோதும் கூட்டம்

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் பயணிக்க முன்வந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!



  • 19:56 (IST) 03 Nov 2022
    புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர் கனமழையால் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் பள்ளிகள் - கல்லூரிகளுக்கு விடுமுறை அறவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.



  • 19:55 (IST) 03 Nov 2022
    வாரிசு திரைப்படத்தின் 'ரஞ்சிதமே' ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு

    வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் 'ரஞ்சிதமே' ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.



  • 19:54 (IST) 03 Nov 2022
    முதல்வர் ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டு

    எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



  • 17:40 (IST) 03 Nov 2022
    சென்னையில் மீண்டும் கனமழை

    சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, பாரிமுனை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



  • 17:11 (IST) 03 Nov 2022
    பாகிஸ்தானில் பேரணியில் துப்பாக்கிச்சூடு... இம்ரான் கான் காயம்

    பாகிஸ்தானில் இம்ரான் கலந்துகொண்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 16:54 (IST) 03 Nov 2022
    அரசாணையை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

    "தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 45 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த தொழிலாளர்கள் அரசு வெளியிட்ட ஒரே அரசாணையின் மூலம் இன்று நடுத்தெருவில் நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • 16:51 (IST) 03 Nov 2022
    தமிழகம்: வானிலை முன்னறிப்பு!

    அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர்,மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், ராணிப்பேட்டை,வேலூர்,நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 16:43 (IST) 03 Nov 2022
    புதிய தமிழகம் கட்சியின் மாநாடு - தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி!

    வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநாடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்து சமுதாயம் சாதி அடையாளமாக காட்டப்படும் நிலையில், ஒற்றுமையை உருவாக்க, அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில கட்சிகளை நம்பித்தான் இனி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறுவது பிரிவினைவாதத்தின் வேறு வடிம் என்றும், திமுக என்னுடைய அரசியலை முடக்க நினைத்தால் அது வெற்றி பெறாது என்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.



  • 16:19 (IST) 03 Nov 2022
    வகுப்பறையை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை!

    அரக்கோணம் அருகே நெமிலி ஒன்றியம் கண்டிகை அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி மாணவர்கள் வெளியே அமர்ந்து பாடம் கற்று வருகிறார்கள். வகுப்பறையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 15:58 (IST) 03 Nov 2022
    கோடிக்கு மேல் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்!

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம் ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ஊழியர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 15:32 (IST) 03 Nov 2022
    தென் ஆப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு!

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்து வருகின்றன.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், தென்ஆப்பிரிக்கா அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 14:57 (IST) 03 Nov 2022
    ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்

    ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், ஆடவர் பிரிவில் 7 புள்ளிகள் பெற்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.நந்திதா 7.5 புள்ளிகள் பெற்று பெற்று தங்கம் வென்றார்.



  • 13:49 (IST) 03 Nov 2022
    குஜராத் தேர்தல்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் தேர்தலுக்காக முக்கிய வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளார்.



  • 13:23 (IST) 03 Nov 2022
    பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

    டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில், சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.



  • 13:14 (IST) 03 Nov 2022
    குஜராத் சட்டமன்ற தேர்தல்

    குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிச. 1ல் முதற்கட்ட வாக்குப்பதிவும், டிச. 5ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. டிச. 8ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 12:57 (IST) 03 Nov 2022
    கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரம் . அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு



  • 11:58 (IST) 03 Nov 2022
    இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர் பங்கேற்பு

    இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர் பங்கேற்பு மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்பு



  • 10:30 (IST) 03 Nov 2022
    இல.கணேசன் இல்ல விழாவில் மம்தா பங்கேற்பு - செண்டை மேளம் வாசித்து அசத்தல்

    மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா சென்னையில் நடக்கும் விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பு

    விழாவில் செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா பானர்ஜி



  • 10:28 (IST) 03 Nov 2022
    சிங்கபெருமாள் கோவில் - ரெட்டி பாளையம் இடையே தரைப்பாலங்கள் மூழ்கின

    சிங்கபெருமாள் கோவில் - ரெட்டி பாளையம் இடையே இரண்டு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின

    சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செங்கல்பட்டு நகருக்கு செல்லும் அவல நிலை

    20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு வெளியே செல்ல முடியாமல் தவிப்பு

    தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் மாணவர்கள்



  • 10:27 (IST) 03 Nov 2022
    சிதம்பரம் பல்கலையில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மழை காரணமாக மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை

    அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு



  • 10:26 (IST) 03 Nov 2022
    அசோக்நகர் அரசுப்பள்ளிக்கு விடுமுறை

    சென்னை: அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை

    பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு



  • 10:25 (IST) 03 Nov 2022
    ராஜராஜசோழனின் சதய விழா ஆட்சியர் தினேஷ் மரியாதை

    தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037வது சதய விழா

    ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை



  • 09:50 (IST) 03 Nov 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

    2 நாள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்கிறார்

    மத்திய அமைச்சர்களை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல்



  • 09:00 (IST) 03 Nov 2022
    பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இன்று பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது .



  • 08:04 (IST) 03 Nov 2022
    குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

    குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி, அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இன்று மதியம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment