Advertisment

Tamil news today: 77-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Tamil Nadu News, Tamil News, Chennai Rains, Rajinikanth, Jailer Movie– 14 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:07 (IST) 14 Aug 2023
    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் தற்பொழுது நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • 21:21 (IST) 14 Aug 2023
    ஜெயலலிதாவுக்கு நல்லது செய்தேன்... ஆனால், அவர் எனக்கு கெடுதல் செய்தார் - திருநாவுக்கரசர்

    காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்: “ஜெயலலிதாவுக்கு நான் நன்றிக்கடன் படவில்லை. எனக்குதான் அவர் நன்றிக்கடன் பட்டுள்ளார்; அவரை நான் காப்பாற்றியதால்தான் பொதுச் செயலாளர் ஆனார், முதலமைச்சரானார்; இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆனார்கள்; ஜெயக்குமார் எப்போது அ.தி.மு.க-வுக்கு வந்தார். எம்.ஜி.ஆரை பார்த்தார் என எனக்கு தெரியவில்லை.

    ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நல்லது செய்தேன்; ஆனால் அவர் எனக்கு கெடுதல்தான் செய்தார்.அவர் மறைந்துவிட்டார், எல்லாம் முடிந்துபோன விஷயம்” என்று கூறினார்.



  • 21:15 (IST) 14 Aug 2023
    இந்திய குடிமகன் என்ற அடையாளம் எல்லாவற்றிற்கும் மேலானது - ஜனாதிபதி திரெளபதி முர்மு

    குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு: “இந்திய குடிமகன் என்ற அடையாளம் எல்லாவற்றிற்கும் மேலானது. சுதந்திர தினம் என்பது நமது அடையாளங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் சமமானவர்கள்; இந்த மண்ணில் சம வாய்ப்பு, உரிமைகள், கடமைகள் உள்ளன; இந்திய குடிமக்களின் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.



  • 21:12 (IST) 14 Aug 2023
    இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நிறைவு

    சீன படையினர் உடனான மோதலையடுத்து, இரு நாட்டு எல்லைகளிலும் படைகல் குவிக்கப்பட்டன. சுஷூலில் நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலன பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.



  • 20:13 (IST) 14 Aug 2023
    மழையால் ராஜ்பவனில் தேனீர் விருந்து ஒத்திவைப்பு; ஆளுநர் மாளிகை அறிவிப்பு

    சென்னை, ராஜ்பவனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட இருந்த தேனீர் விருந்து ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால், ராஜ்பவனின் சில பகுதிகளில்

    தண்ணீர் தேங்கி உள்ளது. நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தேநீர் விருந்து நடைபெறும்

    தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.



  • 20:00 (IST) 14 Aug 2023
    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 40 பேர் உயிரிழப்பு

    இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் மலை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதிவரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



  • 19:53 (IST) 14 Aug 2023
    நீட் தேர்வை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது - அண்ணாமலை

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க மோசமான அரசியலை செய்கிறது. தெலங்கானாவில் அரசு பள்ளிகளி்ல் நீட் தேர்விற்கு தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது; நீட் தேர்வில் ஏராளமான ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:40 (IST) 14 Aug 2023
    எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் உயர வேண்டும் இந்திய பெண்கள் - ஜனாதிபதி முர்மு

    சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேச்சு: “எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் உயர வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:35 (IST) 14 Aug 2023
    வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் கனமழை; சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்

    சென்னை வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • 18:54 (IST) 14 Aug 2023
    காவிரி நீர் திறக்கப்படுமா? டி.கே. சிவக்குமார் பதில்

    எங்களின் குடிநீர் மற்றும் குறைந்தபட்ச விவசாய தேவைக்கான தண்ணீரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.



  • 18:53 (IST) 14 Aug 2023
    ரூ.1.56 கோடி தங்கம் பறிமுதல்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜஸ்தானில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ₹1.56 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    உரிய ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.



  • 18:26 (IST) 14 Aug 2023
    உதான் வழித்தடம்: சி.ஏ.ஜி அறிக்கை

    உதான் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 93% வழித்தடங்களில் விமான சேவையே தொடங்கப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:11 (IST) 14 Aug 2023
    திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி; பக்தர்களுக்கு பிரம்பு கம்பு வழங்க நடவடிக்கை

    திருப்பதி மலைப்பாதையில் வன விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு ‘பிரம்பு கம்பு’ வழங்கப்படும் என தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது



  • 17:46 (IST) 14 Aug 2023
    1 கி.மீ சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு: மல்லிகார்ஜூன கார்கே புகார்

    துவாரகா விரைவுச்சாலையில் 1 கி.மீ சாலை அமைக்க ₹250 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கைகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 17:33 (IST) 14 Aug 2023
    சென்னையில் மழை: விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 3 உள்நாட்டு விமானங்கள், தரையிறங்க முடியாமல் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வானில் தொடர்ந்து வட்டமடித்தன.

    மழை தொடர்ந்து நீடித்தால், திருச்சியிலிருந்து 62 பயணிகளுடனும் கொச்சியிலிருந்து 127 பயணிகளுடனும் மைசூரிலிருந்து 58 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களைப் பெங்களூர் அல்லது திருச்சிக்குத் திருப்பிவிட வாய்ப்பு இருபபதாக கூறப்படுகிறது.



  • 16:56 (IST) 14 Aug 2023
    தேசிய கொடியை கையில் ஏந்தி, நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தின கொண்டாட்டம்

    தேசிய கொடியை கையில் ஏந்தி, நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிஜிகளுடன் இணைந்து ரஜினிகாந்த் தேசிய கொடி ஏந்தினார். மேலும் ஆதி பத்ரிநாத் கோயிலில் 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார்



  • 16:47 (IST) 14 Aug 2023
    ராமநாதபுரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து

    ராமநாதபுரம், கீழக்கரையில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.



  • 16:37 (IST) 14 Aug 2023
    மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்கள் சென்னை வருகை

    மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் சென்னை வந்துள்ளனர். கலவரத்தால் அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று பயிற்சிக்காக அவர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்



  • 16:21 (IST) 14 Aug 2023
    திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 பேர் கைது

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்



  • 16:09 (IST) 14 Aug 2023
    ஆன்லைன் விளையாட்டுகள்; தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

    போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது



  • 15:48 (IST) 14 Aug 2023
    காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது



  • 15:27 (IST) 14 Aug 2023
    நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்டான்லி மருத்துவர்கள்

    நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழு ஆய்வு செய்து வருகிறது.



  • 15:10 (IST) 14 Aug 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை – அமலாக்கத்துறை

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை. 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • 14:46 (IST) 14 Aug 2023
    ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

    சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு "தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறேன்" "7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசுகிறார்" "ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலையை உணர மறுக்கிறார் ஆளுநர் ரவி" "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி குடியரசு தலைவருக்கு இன்று கடிதம் அனுப்புகிறேன்" "பல சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல், பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும் வருகிறார் ஆளுநர் ரவி" "நீட் தேர்வு மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது" "ஆளுநரின் செயலை தமிழ்நாடு கல்வித்துறையின் மீது நடத்தும் சதியாகவே பார்க்கிறோம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 14:12 (IST) 14 Aug 2023
    தேர்வு முடிவில் குளறுபடி : அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

    திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு



  • 14:10 (IST) 14 Aug 2023
    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

    சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி



  • 13:22 (IST) 14 Aug 2023
    சென்னையில் பரவலாக மழை

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்



  • 13:19 (IST) 14 Aug 2023
    விளையாட்டு பயிற்சிக்காக தமிழ்நாடு வந்த மணிப்பூர் வீரர்கள்

    மணிப்பூர் கலவரத்தால், அங்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதால், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக தமிழ்நாடு வந்தனர்!



  • 13:01 (IST) 14 Aug 2023
    திருப்பதி மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்- பக்தர்கள் ஓட்டம்

    திருப்பதி மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

    இன்று காலையில் ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்

    சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

    சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டம்

    திருப்பதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு



  • 12:48 (IST) 14 Aug 2023
    மாணவன் சின்னதுரைக்கு கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

    நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை

    சென்னையில் இருந்து நெல்லை வந்தடைந்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் மாணவன் கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளனர்.

    அறுவை சிகிச்சை தொடர்பான முதற்கட்ட பணிகள் தீவிரம்

    நெல்லை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை



  • 12:42 (IST) 14 Aug 2023
    ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் இனியாவது மாறுமா?

    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

    ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் இனியாவது மாறுமா? நீட் மசோதாவை அங்கீகரிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். ஆளுநர் ரவி தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும் - திருமாவளவன்



  • 12:40 (IST) 14 Aug 2023
    உயிரிழந்த மாணவன் ஜெகதீஸ்வரன் உடலுக்கு திருமா அஞ்சலி

    சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி



  • 12:18 (IST) 14 Aug 2023
    அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

    பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் காயமடைந்தவர்களுக்கு பூதலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கூட்டுக் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து



  • 12:18 (IST) 14 Aug 2023
    குடியரசு தலைவர் விருது: 21 காவலர்களுக்கு அறிவிப்பு

    சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது

    தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு விருது அறிவிப்பு

    காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐஜி பவானீஸ்வரி ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது

    தமிழகத்தை சேர்ந்த 19 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது அறிவிப்பு



  • 11:48 (IST) 14 Aug 2023
    கோவில்களில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்

    கோவில்களில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய பணிகளுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் பக்தர்கள் தங்கும் விடுதி, முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு அடிக்கல்



  • 11:47 (IST) 14 Aug 2023
    செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத் தாக்கல்

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும்,

    செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 3 ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் மனு

    செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் தர கோரி நீதிபதி அல்லியிடம் முறையீடு

    குற்றப்பத்திரிகை, கைது மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்க கோரி மனு

    மனு குறித்த தகவலை அமலாக்கத்துறை தரப்பிற்கு தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல்



  • 11:47 (IST) 14 Aug 2023
    உயர்கல்வித் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

    உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    பல்வேறு மாவட்டங்களில் ரூ.87.76 கோடி செலவில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் திறப்பு



  • 11:46 (IST) 14 Aug 2023
    மா.நன்னன் நூல்கள்: நூலுரிமை தொகை ரூ.10 லட்சம் வழங்கிய ஸ்டாலின்

    நாட்டுடைமையாக்கப்பட்ட பேராசிரியர் மா.நன்னன் நூல்கள் மா.நன்னன் நூல்களுக்கான நூலுரிமை தொகை அவரது துணைவியாரிடம் வழங்கப்படுகிறது

    நூலுரிமை தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 11:24 (IST) 14 Aug 2023
    15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம்

    சுதந்திர தின விழாவையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு. மக்கள் சேவை மற்றும் புலன் விசாரணையில் சிறப்பான பணியாற்றிய 15 காவலர்களுக்கு நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் 8 கிராம் எடையில் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது.



  • 10:55 (IST) 14 Aug 2023
    சவரனுக்கு ரூ. 40 குறைந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ. 5,496க்கும், ஒரு சவரன் ரூ. 43,960க்கும் விற்பனையாகிறது.



  • 10:54 (IST) 14 Aug 2023
    மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • 10:48 (IST) 14 Aug 2023
    இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • 10:47 (IST) 14 Aug 2023
    ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

    மதுரையில் நடைபெற உள்ள, அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி



  • 10:46 (IST) 14 Aug 2023
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ. 5,496க்கும், ஒரு சவரன் ரூ. 43,960க்கும் விற்பனையாகிறது.



  • 10:17 (IST) 14 Aug 2023
    நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்

    நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த மாணவர் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்துகொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்

    ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் உயிரை மாய்த்துகொண்டுள்ளார். அந்த குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை

    ஒரு முறையல்ல, 2 முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்; ஆனால் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பது தான் ஆளுநரின் எண்ணம்

    சமீபத்தில் 'நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்' என்று ஆளுநர் சொல்லி இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது

    இன்னும் சில மாதங்களில் அரசியல் மாற்றம் நடக்கும் நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்; கையெழுத்து போடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்

    அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள்.உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 10:16 (IST) 14 Aug 2023
    காவிரி விவகாரம் - அதிகாரிகள் ஆலோசனை

    காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.



  • 09:10 (IST) 14 Aug 2023
    திருப்பதியில் சிக்கிய சிறுத்தை

    திருப்பதி மலைக்கு பாதயாத்திரை ஆக நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை புலி ஒன்று கடித்து குதறி கொன்ற நிலையில், அதனை பிடிப்பதற்காக மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டு ஒன்றில் புகுந்து சிக்கிக்கொண்டது.அந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவிப்பதற்கான முயற்சிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்..



  • 09:03 (IST) 14 Aug 2023
    சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை

    திருப்பதி திருமலை பகுதியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருமலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி சிறுத்தை ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியது. இந்த சம்பவத்தில் சிறுமி லக்ஷிதா உயிரிழந்தார்.



  • 09:00 (IST) 14 Aug 2023
    சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது - தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.



  • 08:59 (IST) 14 Aug 2023
    ராதாகிருஷ்ணன் ஆய்வு

    சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.



  • 08:09 (IST) 14 Aug 2023
    அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 08:07 (IST) 14 Aug 2023
    சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

    விடிய விடிய பெய்த மழையால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன; துபாய், சார்ஜா, துருக்கி நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூரு சென்றன.



  • 07:57 (IST) 14 Aug 2023
    நீட் தேர்வு தோல்வி: மாணவரின் தந்தையும் தற்கொலை

    சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீசன், நீட் தேர்வு தோல்வியால் நேற்று தற்கொலை செய்த நிலையில், மகன் இறந்த துக்கம் தாளாமல், மாணவரின் தந்தை செல்வம் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • 07:56 (IST) 14 Aug 2023
    பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல்

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.

    கலைஞர் பிறந்த தினத்தையொட்டி ஜுன் 3ல் பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அன்று கோடை விடுமுறை என்பதால் இன்று பொங்கல் வழங்கப்படுகிறது.



  • 07:46 (IST) 14 Aug 2023
    இன்றைய ராசிபலன்! (14/08/2023)

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளுங்கள்

    https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-today-monday-14-august-2023-738603/



  • 07:45 (IST) 14 Aug 2023
    தாம்பரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் இன்று மின்தடை

    சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-power-cut-today-14-august-monday-tambaram-738536/



  • 07:44 (IST) 14 Aug 2023
    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 07:44 (IST) 14 Aug 2023
    நாஞ்சில் K.S. கோலப்பன் நீக்கம்

    கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, அமைப்புச் செயலாளர், நாஞ்சில் K.S. கோலப்பனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



  • 07:43 (IST) 14 Aug 2023
    சென்னையில் விடிய விடிய கனமழை

    சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், கடற்கரை சாலை, கோயம்பேடு, கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    அதிகபட்சமாக ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரியில் 10.3 செ.மீ மழை, நந்தனத்தில் 6.6 செ.மீ., காட்டுப்பாக்கத்தில் 7.7 செ.மீ மழை பதிவானது.

    அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு பகுதிகளில் கனமழை பெய்தது.



Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment