Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு ஒப்புதல்
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் இந்த மருந்து, முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தமாக 80 வீரர்களை ரூ.167 கோடி செலவழித்து 10 அணிகளும் வாங்கியுள்ளன.
அதில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சேம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சேம் கரண் படைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தேனி – குமுளி மலைச்சாலையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்ராவின் டெல்லியில் தனது தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியுடன் இணைந்து கொண்ட படத்தைப் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரிடமிருந்து பெற்ற அன்பை நாட்டில் பரப்புவதாகக் கூறினார். ராகுலின் ட்வீட், தனது தாயுடனான தனது உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் காட்டியுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
जो मोहब्बत इनसे मिली है,वही देश से बांट रहा हूं। pic.twitter.com/y1EfLqxluU
— Rahul Gandhi (@RahulGandhi) December 24, 2022
“சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல்” மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல – நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது டெ்ல்லியில் நுழைந்துள்ள நிலையில், செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு இந்து-முஸ்லீம் வெறுப்பு பரப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாகி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை டிசம்பர் 26ஆம் தேதிவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“நடிகர் விஜய் அரசியல் பேசமாட்டார், வாரிசு வசூலில் சாதனை புரியும் என படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து பள்ளி மாணவன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சகாயராணி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் சகாயராணி கையில் இருந்த விஷமருந்தும், மாணவன் வயிற்றில் இருந்த விஷமும் ஒன்று என தெரியவந்துள்ளது.
நடிகை மீரா மிதுனுக்கு எதிரான பணமோசடி வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மீரா மிதுன் மீது, மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ₨50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டுள்ள கமல்ஹாசன், “தேச ஒற்றுமைக்காக இங்கு வந்ததாகவும், தன்னுடைய தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்” என்றும் கூறினார்.
மேலும், ராகுல் காந்தி நேருவின் பேரன் என்றும் நான் காந்தியின் பேரன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் சோபா ஆகியோரும் வந்துள்ளனர்.
“அனைத்து இடங்களில் வெறுப்புணர்ச்சி மேலோங்கி காணப்படுகிறது. வெறுப்புணர்ச்சியை நீக்கவே யாத்திரையை தொடங்கினேன்.
கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் நிறைந்ததுதான் இந்தியா” என பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தி கூறினார்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள வந்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்ததும் உள்ளே தலை தெறிக்க ஓடினார். முன்னதாக அந்தப் பகுதியில் லேசான தடியடி நடத்தப்பட்டது.
ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் ஹர்திதா குழந்தை பெற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக இங்குதான் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் பங்கேற்று வருகின்றனர்
ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவதை குறிப்பிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வைத்த கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது
எனது அம்மாவிடம் பெற்ற அன்பையே இந்த தேசத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆவடி பகுதியில் உள்ள தேவாலயம், மார்க்கெட் பகுதி, பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் ந ம்ம ஸ்கூல்திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழாவிற்காக ஒரேநாளில் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என கூறுவதெல்லாம் ஆதாரமற்றது. திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி கிடைத்துள்ளதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் இது. ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வு கூட்டங்களுக்கும் சேர்த்தே ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கந்தூரி கொடி ஊர்வலம் நாகையில் இருந்து பேண்டு வாத்தியங்கள் இசைக்க கப்பல் வடிவ ரதத்தில் கொண்டு செல்லப்படுகிறது. கொடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். நாகை எஸ்பி ஜவகர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக-வுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது.
அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே நடக்கும் – எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு சசிகலா பேட்டி
ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உருமாறிய கொரோனா முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை
சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்
கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
நடிகை மீரா மிதுனுக்கு எதிரான பணமோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு.
வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ரூ. 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்லிணக்கத்தை வழங்கட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து
எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது.
எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.
கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும்.
அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ்”
“அமையும், அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
டெல்லியில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவரது தாய் சோனியா, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்பு
ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் இன்று பங்கேற்க உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
தமிழகத்தில் 25, 26 ஆம் தேதிகளில் தென் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோயில் சொத்துகளை பொது ஏலம் மூலம் 5 ஆண்டுகளுக்கு குத்ததைக்கு விட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பது தான். அவர்கள் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்; நாங்கள் அன்பை பரப்புகிறோம்; அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதுதான் இந்த நடை பயணத்தின் நோக்கம்- டெல்லி எல்லையில் ராகுல் காந்தி
நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புழல் ஏரிக்கு 225 கன அடியாக இருந்த நீர்வரத்து 360 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 15 கன அடியாக உள்ளது. ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 455 அடியாக இருந்த நீர்வரத்து 533 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் 11ம் தேதி வரைக்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை தலைநகர் டெல்லியில் நுழைந்தது. ராகுல் காந்தியின் யாத்திரையில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதியும், மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.