Advertisment

Tamil News Update:அமைச்சராக உதயநிதி இன்று பதவியேற்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Update:அமைச்சராக உதயநிதி இன்று பதவியேற்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil Nadu news update

அமைச்சராகிறார் உதயநிதி

முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி

கத்தாரில் நடந்து வரும் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:40 (IST) 13 Dec 2022
    “யார் இப்போது பப்பு..?” லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு

    லோக்சபாவில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “2014 முதல் 12.5 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்; கடந்த 10 மாதத்தில் மட்டும் 2 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். இதுதான் ஆரோக்கியமான வலுவான பொருளாதார சூழலா? யார் இப்போது பப்பு?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.



  • 22:37 (IST) 13 Dec 2022
    ஹெத்தையம்மன் கோவில் பண்டிகை: நீலகிரி மாவட்டத்தில் ஜன. 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 21:15 (IST) 13 Dec 2022
    ‘கலைத்துறையில் வருவது போல வாரிசுகள் அரசியலில் வருவது என்ன தவறு?’ ஆர்.எஸ். பாரதி கேள்வி

    சென்னை, தி.நகரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறினார்.



  • 20:43 (IST) 13 Dec 2022
    சென்னை பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவைகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் சுமார் 25,000 மாணவிகள் பயனடைவார்கள்.



  • 20:12 (IST) 13 Dec 2022
    திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு சிறை - ஆந்திர ஐகோர்ட் தீர்ப்பு

    திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 3 ஊழியர்களுக்கு பணி உயர்வு தொடர்பான வழக்கில், பணி உயர்வு வழங்க நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், திருமலை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை, ரூ.2,000 அபதாரம் விதித்தது ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 19:32 (IST) 13 Dec 2022
    அரவிந்தரின் தபால்தலை - நாணயம் வெளியிட்டார் மோடி

    ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அரவிந்தரின் தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக வெளியிட்டார்.



  • 18:58 (IST) 13 Dec 2022
    மனைவியை தாக்கிய வழக்குரைஞர் மீது புகார்

    டெல்லியில் பேறுகால விடுமுறையில் உள்ள பெண் போலீசை தாக்கிய அவரது கணவர் வழக்குரைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மனைவியை வழக்குரைஞர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகின்றன.



  • 18:54 (IST) 13 Dec 2022
    ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

    ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்திவந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 18:50 (IST) 13 Dec 2022
    துணிவு அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்

    அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.



  • 18:48 (IST) 13 Dec 2022
    சென்னையில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

    சென்னையில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்துவந்த 2 பயணிகளிடம் இந்தத் தங்கம், சிகரெட் பண்டல்கள் மற்றும் மின்னணு பொருள்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் மதிப்பு ரூ.52.76 லட்சம் ஆகும். இது குறித்து கைது செய்யப்பட்ட பயணிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.



  • 18:47 (IST) 13 Dec 2022
    சென்னையில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

    சென்னையில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்துவந்த 2 பயணிகளிடம் இந்தத் தங்கம், சிகரெட் பண்டல்கள் மற்றும் மின்னணு பொருள்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் மதிப்பு ரூ.52.76 லட்சம் ஆகும். இது குறித்து கைது செய்யப்பட்ட பயணிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.



  • 18:37 (IST) 13 Dec 2022
    வேந்தர் பதவியில் இருந்து ஆளுனரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்

    கேரளாவில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுனரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.



  • 18:28 (IST) 13 Dec 2022
    2021இல் 2,877 இளைஞர்கள் கடத்தல்

    நாட்டில் கடந்த ஆண்டு (2021) 18 வயதுக்கு உட்பட்ட 2877 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உறுப்பினரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்.

    அப்போது மனித கடத்தலை தடுக்க மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.



  • 18:13 (IST) 13 Dec 2022
    தென்காசியில் 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

    தென்காசி அருகே புளியரை சோதனை சாவடியில் 300 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.



  • 18:02 (IST) 13 Dec 2022
    புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.



  • 17:42 (IST) 13 Dec 2022
    என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து ரூ.20 லட்சம் திருட்டு

    சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் நபரிடம் என்ஐஏ அதிகாரிகள் போல் நடத்தி ரூ.20 லட்சம் திருடிச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.



  • 17:27 (IST) 13 Dec 2022
    மதுரை ஆதினத்தின் 1191 ஏக்கர் நிலங்களை மீட்க உத்தரவு

    மதுரை ஆதினத்தின் 1191 ஏக்கர் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 17:20 (IST) 13 Dec 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



  • 17:02 (IST) 13 Dec 2022
    பீகாரில் ஆசிரியர்கள் போராட்டம் - போலீசார் தடியடி

    பீகார் அரசை கண்டித்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.



  • 16:49 (IST) 13 Dec 2022
    பா.ஜ.க நிர்வாகி மீது செந்தில் பாலாஜி புகார் மனு

    தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், மதுபான கொள்கை, விற்பனை குறித்து நீதிமன்றம் தடை விதித்ததையும் மீறி அவதூறு பரப்புவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்



  • 16:37 (IST) 13 Dec 2022
    இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி மனு –விசாரிக்க மறுப்பு

    இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவை, விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்



  • 16:17 (IST) 13 Dec 2022
    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - பாரிவேந்தர் எம்.பி

    ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தை தேசிய தினமாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் பாரிவேந்தர் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்



  • 16:01 (IST) 13 Dec 2022
    தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டம்; கேபிள் டிவி நிறுவன ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை

    தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, புதிய தொழில்நுட்பங்களான ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது, TACTV OTT APP உருவாக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் இந்த ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளது



  • 15:45 (IST) 13 Dec 2022
    தமிழக கேபிள் டிவி நிறுவன செயல்பாடு குறித்து முதல்வர் ஆய்வு

    தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



  • 15:24 (IST) 13 Dec 2022
    ஐகோர்ட்டில் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு - 3 பேர் கைது

    சென்னை, உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிச்சைக்காரன்-2 திரைப்படத்திற்காக அனுமதியின்றி படம் பிடித்ததாக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்



  • 15:12 (IST) 13 Dec 2022
    அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி – ஜெயக்குமார்

    அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி, ஸ்டாலின் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்



  • 14:59 (IST) 13 Dec 2022
    விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்

    பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார் நடிகர் விஜய்

    மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்

    அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



  • 14:03 (IST) 13 Dec 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 14:03 (IST) 13 Dec 2022
    அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு

    மேல்முறையீடு மனு மீது உரிய பதில் அளிக்க அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு



  • 13:59 (IST) 13 Dec 2022
    கோவை கார் வெடி விபத்து: 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்



  • 13:43 (IST) 13 Dec 2022
    கேரள - கர்நாடகா: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • 13:42 (IST) 13 Dec 2022
    காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

    உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

    உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர் சடலமாக மீட்பு - ஒருவரை தேடும் பணிகள் தீவிரம்



  • 13:30 (IST) 13 Dec 2022
    சீனாவின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர் - ராஜ்நாத் சிங்

    இந்திய - சீன படையினர் இடையேயான மோதல் குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

    கடந்த 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன படையினர் எல்லையை தாண்டி உள்ளே நுழைய முயன்றனர்.

    இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

    மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, வீரர்கள் யாருக்கும் தீவிர காயம் ஏற்படவில்லை.

    சீன வீரர்களின் முயற்சியை நமது ராணுவத்தினர் திறமையுடன் எதிர்கொண்டனர் - ராஜ்நாத் சிங்



  • 13:28 (IST) 13 Dec 2022
    தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்

    தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்

    தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தாத பட்சத்தில், தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிவிடும்.

    மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

    மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்



  • 12:33 (IST) 13 Dec 2022
    ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும்

    2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு



  • 12:32 (IST) 13 Dec 2022
    விரைவில் தடை விதிக்கப்படும்

    தற்கொலைக்கு காரணமாக இருக்கும் சாணிப்பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 12:31 (IST) 13 Dec 2022
    கண்டன ஆர்ப்பாட்டம்

    மக்களின் ஒட்டுமொத்த குரலாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது" "உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டும் விழா நடைபெற உள்ளது" "சாதாரண தொண்டன் கூட அதிமுகவில் முதலமைச்சர் ஆகலாம்" சேலம், ஆத்தூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 12:00 (IST) 13 Dec 2022
    வழக்கில் இருந்து விடுவித்தது நீதிமன்றம்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது தொடரப்பட்ட வழக்கு. கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது தொடரப்பட்ட வழக்கு. வழக்கில் இருந்து விடுவித்தது விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்



  • 11:59 (IST) 13 Dec 2022
    அதிநவீன ஐஸ் கிரீம் ஆலை

    சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 12.26 கோடி செலவில் அதிநவீன ஐஸ் கிரீம் ஆலை. கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 11:42 (IST) 13 Dec 2022
    சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு

    நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட காலவரம்பு தடை இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு . அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவு



  • 11:42 (IST) 13 Dec 2022
    தள்ளாடிய மாணவனை சக மாணவன் பள்ளிக்குள் அழைத்து செல்லும் காட்சி பதிவு

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போதையில் தள்ளாடி சாலையில் விழுந்த பள்ளி மாணவன் பள்ளி சீருடையில் மாணவன் தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது தள்ளாடிய மாணவனை சக மாணவன் பள்ளிக்குள் அழைத்து செல்லும் காட்சி பதிவு



  • 11:41 (IST) 13 Dec 2022
    எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்



  • 11:02 (IST) 13 Dec 2022
    அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

    திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகாசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 10:40 (IST) 13 Dec 2022
    ராஜா பட்டேரியா கைது

    மோடியை கொல்லுங்கள்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 10:40 (IST) 13 Dec 2022
    3 பேர் சடலமாக மீட்பு

    உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயமான நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி நடந்து வருகிறது.



  • 09:56 (IST) 13 Dec 2022
    வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்

    ஆனிக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்று திரும்பியபோது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயமாகினர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் தீயணைப்பு, காவல் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 09:54 (IST) 13 Dec 2022
    ஏரி கரை உடைந்தது

    மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரை உடைந்தது, விளைநிலங்களில் தேங்கும் நீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



  • 09:05 (IST) 13 Dec 2022
    கர்நாடகாவில் ஜிகா வைரஸ்

    கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கர்நாடகாவில் முதல்முறையாக ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 08:18 (IST) 13 Dec 2022
    வெள்ள அபாய எச்சரிக்கை

    வேலூர் மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 08:18 (IST) 13 Dec 2022
    மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்

    நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் இன்று விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்.



  • 08:17 (IST) 13 Dec 2022
    சென்னை புத்தக கண்காட்சி

    சென்னையில் 46வது புத்தக கண்காட்சி 2023 ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.



  • 08:17 (IST) 13 Dec 2022
    பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய் கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 08:17 (IST) 13 Dec 2022
    அண்ணா பல்கலை. தேர்வுகள்

    மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு அண்ணா பல்கலை. தேர்வுகள், டிசம்பர் 24 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 08:16 (IST) 13 Dec 2022
    அதிமுக தலைமை அறிவிப்பு

    திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் செவ்வாய்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் வரும் 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment