Advertisment

Tamil News Updates: பிரதமர் மோடி பட்டப்படிப்பு முடித்திருப்பது உண்மையானால் சான்றிதழ் ஏன் காட்டப்படவில்லை? அரவிந்த் கெஜ்ரிவால்

Tamil Nadu News, Tamil News , IPL 2023 Today match, CSK, Gold Rate Chennai, Viduthalai movie – 01 APRIL 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Aravind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் அடித்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 182 ரன்களுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:43 (IST) 01 Apr 2023
    ஏப்ரல் 7ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஏப்ரல் 7ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு!



  • 21:24 (IST) 01 Apr 2023
    மெட்ரோ ரயிலில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இலவச பயணம்

    சி.எஸ்.கே அணி விளையாடும் போது மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் "போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம்" மெட்ரோ நிர்வாகம், சி.எஸ்.கே. அணி நிர்வாகம் அறிவிப்பு



  • 20:27 (IST) 01 Apr 2023
    முகேஷ் அம்பானிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

    உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் கலாச்சார மையத்தை மும்பையில் உருவாக்கிய நண்பர் முகேஷ் அம்பானிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நாடகத்தை அரங்கேற்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். நிச்சயம் விரைவில் அது நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



  • 20:23 (IST) 01 Apr 2023
    தமிழகத்தில் புதியதாக 156 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!



  • 19:31 (IST) 01 Apr 2023
    20 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், தருமபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 19:11 (IST) 01 Apr 2023
    நவ்ஜோத் சிங் சித்திக் 10 மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுதலை

    34 வருடத்திற்கு முன்பு பதிவான வழக்கில் சிறை தண்டனை பெற்ற பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்திக் 10 மாத சிறைதண்டனைக்கு பிறகு தற்போது சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.



  • 19:09 (IST) 01 Apr 2023
    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம்!

    “சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை படம் பார்க்க அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது"



  • 18:07 (IST) 01 Apr 2023
    குற்றாலம் மெயின் அருவியின் முன்புறம் உள்ள குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

    குற்றாலம் மெயின் அருவியின் முன்புறம் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. திடீரென இறந்து கிடக்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வாட்டி வதைக்கும் கடும் வெயிலின் தாக்கத்தினால் மீன்கள் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது



  • 17:45 (IST) 01 Apr 2023
    சாலைகளில் மேடு, பள்ளம் இணைய ஆய்வு வாகனம் மூலம் பரிசோதிக்கப்படும் – எ.வ.வேலு

    விபத்தில்லா மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவை செயல்படுத்த, பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய வேண்டியுள்ளது. சாலைகளில் மேடு, பள்ளம் இணைய ஆய்வு வாகனம் மூலம் பரிசோதிக்கப்படும். பரிசோதனைகளுக்கு பின்னரே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்



  • 17:27 (IST) 01 Apr 2023
    மலையாளத்தில் பேசி உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

    கேரளாவில் நடைபெற்று வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை மலையாளத்தில் பேசி தொடங்கினார்



  • 17:12 (IST) 01 Apr 2023
    ஊரடங்கு தகவல் வெறும் வதந்தியே -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தியே. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்



  • 16:55 (IST) 01 Apr 2023
    போபால் - புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

    மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்



  • 16:43 (IST) 01 Apr 2023
    அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு

    அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ2 உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.



  • 16:19 (IST) 01 Apr 2023
    வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின், பினராயி விஜயன் மரியாதை

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் மரியாதை செலுத்தினர்.



  • 16:00 (IST) 01 Apr 2023
    சாலையை விரிவாக்கம் செய்ய மரங்களை வெட்டித் தான் ஆக வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு

    சாலைகளை விரிவுப்படுத்தித்தான் ஆக வேண்டும்: இல்லையென்றால் பொருளாதாரம் எவ்வாறு மேம்படும்? சாலையை விரிவாக்கம் செய்ய மரங்களை வெட்டித் தான் ஆக வேண்டும் ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் 1.50 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்



  • 15:47 (IST) 01 Apr 2023
    பண மோசடி வழக்கு; ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி, அவரது கணவர் கைது

    பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் சுமார் ரூ.4,400 கோடி பெற்று மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீதான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • 15:30 (IST) 01 Apr 2023
    பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதல்!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப், மொகாலியில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.



  • 15:29 (IST) 01 Apr 2023
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநருக்கு உத்தரவு!

    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை அன்று 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. பாலியல் புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேற்று விசாரணை நடத்தியிருந்தார்; அப்போது அவர்கள் இருவரும் விடுமுறையிலிருந்தனர்.



  • 15:19 (IST) 01 Apr 2023
    2 கோடி லாபத்தில் இயங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம்!

    "சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். நெடுஞ்சாலைத் துறையில் மூலதன செலவுக்காக மட்டும் 40% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நஷ்டத்தில் இயங்கிய பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம், 2022-23 நிதியாண்டில் ரூ.2 கோடி லாபத்தில் இயங்கியுள்ளது" என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



  • 15:18 (IST) 01 Apr 2023
    2 கோடி லாபத்தில் இயங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம்!

    "சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். நெடுஞ்சாலைத் துறையில் மூலதன செலவுக்காக மட்டும் 40% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நஷ்டத்தில் இயங்கிய பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம், 2022-23 நிதியாண்டில் ரூ.2 கோடி லாபத்தில் இயங்கியுள்ளது" என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



  • 15:16 (IST) 01 Apr 2023
    பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார்: நெல்லை சார் ஆட்சியர் விசாரணை!

    பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று 6 பேர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.



  • 15:13 (IST) 01 Apr 2023
    ‘வந்தே மாதரம்’ பாடலை கோரஸாக பாடி ரசிகர்கள்!

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த, ஐபிஎல் போட்டியின்போது ‘வந்தே மாதரம்’ பாடலை ரசிகர்கள் கோரஸாக பாடி மகிழ்ந்தனர்.



  • 15:04 (IST) 01 Apr 2023
    ராமேஸ்வரம் - இலங்கை இடையே படகுப் போக்குவரத்து!

    ராமேஸ்வரம் - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:03 (IST) 01 Apr 2023
    தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் இடையே மோதல்!

    ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ காரின் மீது ஆயுதங்களால் தெலுங்கு தேச கட்சியினர் தாக்கியுள்ளனர். காரின் மீது காலணி, கற்கள், தேங்காய் வீசி எறிந்த தெலுங்கு தேசம் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டியடித்தனர். வழக்கு பதிவு செய்து, தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.



  • 15:02 (IST) 01 Apr 2023
    தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் இடையே மோதல்!

    ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ காரின் மீது ஆயுதங்களால் தெலுங்கு தேச கட்சியினர் தாக்கியுள்ளனர். காரின் மீது காலணி, கற்கள், தேங்காய் வீசி எறிந்த தெலுங்கு தேசம் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டியடித்தனர். வழக்கு பதிவு செய்து, தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.



  • 14:07 (IST) 01 Apr 2023
    வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஸ்டாலின் பங்கேற்பு

    கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார். கொச்சின் விமான நிலையத்தில் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் திரு. பி. ராஜீவி, கொச்சின் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.என்.எஸ்.கே. உமேஷ், இ.ஆ.ப., ஆகியோர் வரவேற்றனர்



  • 14:06 (IST) 01 Apr 2023
    ஆழித் தேரோட்டம்: திருவிழாக்கோலம் பூண்ட திருவாரூர் வீதிகள்

    திருவாரூரில் ஆழித் தேரோட்டம் நடந்து வருகிறது. விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர்- ஒரே நாளில் பவனி வரும் 5 தேர் நகர வீதிகளை வலம் வருகின்றனர். ஆழித்தேர் வலம் வரும் வீதியில் ருத்ராட்ச லிங்கத்தை தலையில் பக்தர்கள் சுமந்தாடி வருகிறார்கள்.



  • 13:44 (IST) 01 Apr 2023
    சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பெயர் பலகை!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயர் பலகையுடன் அதிமுக எம்.எல்.ஏ ராஜமுத்து வீரபாண்டி தொகுதி சட்டப்பேரவைக்கு வந்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அறையில் இது வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 13:36 (IST) 01 Apr 2023
    15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம். கரூர், நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:18 (IST) 01 Apr 2023
    15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம். கரூர், நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:59 (IST) 01 Apr 2023
    அறுந்து கிடந்த மின்கம்பி: பெண், பசுமாடு பலி

    விழுப்புரம்: செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு

    மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது

    கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு



  • 12:33 (IST) 01 Apr 2023
    பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டம்

    12-ம் வகுப்பு மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

    பள்ளி கல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டம்



  • 12:14 (IST) 01 Apr 2023
    ஐபிஎல் தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்?

    நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகல் என தகவல்

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது



  • 12:12 (IST) 01 Apr 2023
    காரைக்கால் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் பதவி ஏற்பு

    காரைக்கால் புதிய மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கன் ஐ.ஏ.எஸ் பதவி ஏற்பு

    அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும்.

    அரசு ஊழியர்கள் பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - குலோத்துங்கன் ஐ.ஏ.எஸ்



  • 12:11 (IST) 01 Apr 2023
    கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சூர்யா

    கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்டார் நடிகர் சூர்யா தந்தை சிவக்குமார், மனைவி ஜோதிகா மற்றும் உறவினர்கள் அருங்காட்சியகத்தை பார்த்தன



  • 12:10 (IST) 01 Apr 2023
    காவிரி-குண்டாறு இணைப்பு: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

    காவிரி-குண்டாறு இணைப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

    காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி

    நிலம் கையகப்படுத்திய பிறகு கால்வாய் வெட்ட எந்த நடவடிக்கையையும் அதிமுக எடுக்கவில்லை

    திமுக ஆட்சியில் 64% கால்வாய் வெட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது

    காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி



  • 12:08 (IST) 01 Apr 2023
    தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் பிரிக்க அரசு திட்டம்

    தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை பிரிக்க அரசு திட்டம்

    தனி மாவட்ட கோரிக்கைகள் குறித்து நிதிநிலைக்கேற்ப முதல்வர் முடிவெடுப்பார்- பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்



  • 11:37 (IST) 01 Apr 2023
    காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாக புகார்

    சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு

    பேராசிரியர் சண்முகராஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது



  • 11:36 (IST) 01 Apr 2023
    ஆபரணத் தங்கம் ரூ. 240 குறைந்தது

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

    சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 44,480-க்கு விற்பனை

    ஒரு கிராம் தங்கம் ரூ. 5,560 ரூபாய்க்கு விற்பனை



  • 11:34 (IST) 01 Apr 2023
    2,994 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



  • 11:00 (IST) 01 Apr 2023
    இலவச மின் இணைப்பு

    அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 66 பேரின் தொகுதிகளில், 21,728 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் செந்தில் பாலாஜி



  • 10:55 (IST) 01 Apr 2023
    திருவாரூர் கோயில் தேரோட்டம்

    உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது; இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.



  • 10:17 (IST) 01 Apr 2023
    கூட்டத்தொடர்

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது



  • 09:51 (IST) 01 Apr 2023
    வந்தே பாரத் ரயில்

    மத்திய பிரதேசத்தில், போபால் - டெல்லி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்



  • 09:00 (IST) 01 Apr 2023
    தற்கொலை

    மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின், ஐஐடியில் பி.எச்.டி படித்து வந்தார். இவர் வேளச்சேரியில் நண்பர்களுடன் தங்கியிருந்த நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



  • 08:59 (IST) 01 Apr 2023
    கலாஷேத்ரா விவகாரம்

    கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனை நாளை கைது செய்ய அடையாறு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



  • 08:38 (IST) 01 Apr 2023
    மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

    வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.



  • 08:18 (IST) 01 Apr 2023
    கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது

    வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்தது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 08:18 (IST) 01 Apr 2023
    திருவாரூர் கோயில் தேரோட்டம்

    உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.



  • 08:17 (IST) 01 Apr 2023
    சுங்க கட்டண உயர்வு

    தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ரூ. 10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



  • 08:17 (IST) 01 Apr 2023
    முகக்கவசம் கட்டாயம்

    தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 08:16 (IST) 01 Apr 2023
    139 பேருக்கு கொரோனா

    தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 88 பேர் தொற்றில் இருந்து மீண்டனர். மாநிலம் முழுவதும் 777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment