புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு மேல் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கும்பலாக சேர்ந்து பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரணம்
உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை. டிசம்பர் 31ம் தேதி, இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தபோது அவருக்கு மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தில் ஏற்பட்ட காயத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் 2-க்கும் மேற்பட்ட பேர் கும்பலாக சேர்ந்து பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை நாளை இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்துள்ளார். நள்ளிரவு 1 மணி வரை அனுமதி அளித்து இருந்த நிலையில் கூடுதலாக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை இறையூரில் நடைபெற்ற தீண்டாமை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ்பி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் இறையூர் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும் அவர் காங்கிரஸில் மீண்டும் இணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அண்மையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்க்காவல் படை தலைமை கமாண்டன்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குனராக குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையக ஏடிஜிபி ஆக உள்ள ஜி. வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலக ஐஜி ஆக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்பி ஆக எஸ்.ஆர் செந்தில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வேலூரில் இரு சக்கர வாகனத்தில் சந்தன மரக்கட்டையை கடத்திய ஆரணியை சேர்ந்த ராஜ சேகர் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த மணிகண்டன் (30) என்பவர் தப்பியோடிவிட்டார்.
அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். போலீசாரின் தணிக்கை விசாரணையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
வாட்ஸ்அப்-இல் 5 சார்ட்களை பின்செய்யும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தையொட்டி இரு சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் 48 ஆயிரத்து 600 விவசாயிகளுக்க ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் ஆங் சாங் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆங் சாங் சூகிக்கு 12 வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது” என்றார்.
பிரதமர் மோடி தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க முதல்வர் நாளை டெல்லி செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருந்தார். பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்பவில்லை என்பதால் பயண திட்டம் மாற்றம். நாளை காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்ய உள்ளார்.
மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், திருச்சி மாவட்டம், சூரியூர் அரசு பள்ளி மாணவன் மணிகண்டன் களிமண் சிற்பம் செய்து முதலிடம் பிடித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன்: புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ சிறைப்படுத்த வேண்டும். நீண்டகாலமாக அப்பகுதியில் தலித் மக்கள் அனைவருக்கும் பொதுவாக கோயிலில் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இரு பெண்மணிகளுக்கு பாராட்டுக்குரியவர்கள்.
புதுக்கோட்டை அருகே குடிநீரில் மனிதக்கழிவை கலந்த சம்பவத்தைக் கண்டித்து நாளை (டிசம்பர் 30) புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு எல்லாம் பயப்பட வேண்டிய நிலையில் அரசாங்கம் இல்லை. அதற்கு முதல்வரும் பயப்படுபவர் இல்லை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான், கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.” என்று கூறினார்.
செங்கல்பட்டில் உள்ள கடம்பூரில் 138 ஹெக்ட்ர பரப்பளவில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
லண்டனின் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூ. 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது.
பாமக மாநில பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி: “அ.தி.மு.க நான்காக உடைந்துள்ளது, தி.மு.க மீது கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சியை நோக்கி நாம் செல்வோம், நமக்கான அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. வளர்ச்சியை நோக்கி நாம் செல்வோம், நமக்கான அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக முன்னேறி வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரதமரின் தாயார் ஹீராபென் மறைந்த நிலையில், இந்த கடினமான நேரத்தில் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார்.
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயின் தகனம் முடிந்த உடனேயே பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தென் தமிழக மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இம்ரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை முன்னாள் எம்.பி. மஸ்தான் திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக நாடகம்
உறவினர் இம்ரான் உட்பட ஐந்து பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்
மேற்குவங்கத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ரூ. 7,800 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்
தாயார் ஹீராபென் மறைந்த நிலையிலும், திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
ரிமோட் வாக்குபதிவு முறை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்
பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, இன்று மாலை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் காணொலி வாயிலாக ஆலோசனை
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை
மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கடந்த 22-ம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற போது கூடுவாஞ்சேரி அருகே உயிரிழப்பு
அரிசி, பச்சரிசி, முழு கரும்பு முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது
அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரங்கல் தெரிவித்துள்ளார். ”மோடியின் தாயின் மரணம் வலி நிறைந்ததாக இருக்கிறது. அனைவரின் வாழ்விலும் தாயின் இடம் மிகவும் முக்கியமானது. ”
ஜெ . பி. நட்டா பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் மரணச் செய்தி வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் , எனது ஆழந்த இரங்கலை மோடிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்கிறேன்.
பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்தர படேல் நேரில் அஞ்சலி
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! “பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம்” – முதலமைச்சர் ஸ்டாலின்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்