Advertisment

Tamil news today: தமிழக சட்டசபையில் இன்று ஆளுனருக்கு எதிராக ஸ்டாலின் தீர்மானம்

Tamil Nadu News, Tamil News:அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Secretariate

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 323 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பாடுகிறது

விளையாட்டில் இன்று

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஹைதரபாத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

பெருமிதம் அடைந்த மோடி

கட்சி முகவரை கண்டு பெருமையடைந்த பிரதமர். சென்னையில், தனது கட்சியின் பூத் நிலை முகவரை கண்டு பெருமையடைந்ததாக பிரதமர் மோடி ட்வீட்.  இவரைப் போன்றவர்கள் இருக்கும் கட்சியில், நான் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:15 (IST) 09 Apr 2023
    தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு, ஜனாதிபதி அறிவுரை வழங்க வலியுறுத்தி தீர்மானம்

    தமிழக ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

    ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் பேசியிருந்த நிலையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.



  • 20:09 (IST) 09 Apr 2023
    குஜராத் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!

    குஜராத் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அணியை வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங்.



  • 20:06 (IST) 09 Apr 2023
    நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோட்டம்; போலீஸ் விசாரணை

    நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோடி உள்ளனர். தப்பியோடியவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 19:06 (IST) 09 Apr 2023
    அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் 4வது முறை மீண்டும் நிலநடுக்கம்

    அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் 4வது முறை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 18:49 (IST) 09 Apr 2023
    ஆருத்ரா வழக்கு: தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் அறிவிப்பு

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.



  • 18:13 (IST) 09 Apr 2023
    டி.என்.பி.எல் கிரிக்கெட் ஜூன் 12-ல் தொடங்கும்

    டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது என்று டி.என்.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய 4 நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.



  • 17:39 (IST) 09 Apr 2023
    அந்தமான், நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9, 4.1, 5.3 என நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



  • 16:57 (IST) 09 Apr 2023
    அந்தமான் - நிகோபார் தீவுகளில் 2வது முறையாக நிலநடுக்கம்

    அந்தமான் - நிகோபார் தீவுகளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 4.9 ரிக்டர் அளவில் அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது



  • 16:45 (IST) 09 Apr 2023
    நடிகை குஷ்பு டிஸ்சார்ஜ்

    ஹைதராபாத், தனியார் மருத்துவமனையில் இருந்து நடிகை குஷ்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காய்ச்சல், உடல் வலியால் அவதிப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்பினார்



  • 16:31 (IST) 09 Apr 2023
    பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; விசாரணையை தொடங்கிய அமுதா ஐ.ஏ.எஸ்

    அம்பாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணையை தொடங்கியுள்ளார். தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியருடன் அமுதா ஐ.ஏ.எஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்



  • 16:13 (IST) 09 Apr 2023
    திருப்பூரில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையின் போது இரு தரப்பினரிடையே மோதல்

    திருப்பூரில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் நிர்வாகி பழனிசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை யார் பெறுவது என்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உறுப்பினர் சேர்க்கை பாதியில் நிறுத்தப்பட்டது



  • 15:57 (IST) 09 Apr 2023
    தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை

    தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்



  • 15:39 (IST) 09 Apr 2023
    இன்றைய போட்டியில் குஜராத் கேப்டனாக ரஷித்கான்

    ஹர்திக் பாண்ட்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் கேப்டனாக ரஷித்கான் செயல்படுகிறார்.



  • 15:03 (IST) 09 Apr 2023
    இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

    இந்த மாத தொடக்கத்தில் புலிகள் திட்டம் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன, இது 2018 இல் 2,967 ஆக இருந்தது, கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு வெளியிடப்பட்டது.



  • 14:58 (IST) 09 Apr 2023
    ரயில் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர் மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அவிலாஷ் என்ற இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • 14:57 (IST) 09 Apr 2023
    ரயில் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர் மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அவிலாஷ் என்ற இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • 14:32 (IST) 09 Apr 2023
    வரும் 15ம் தேதி 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம்; தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

    ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரும் 15ம் தேதி தமிழ்நாட்டின் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். ஏப்ரல் 20ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்



  • 14:15 (IST) 09 Apr 2023
    திருநள்ளாறு தீர்த்த குளத்தில் உள்ள கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது - ஆட்சியர் உத்தரவு

    காரைக்கால் திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் உள்ள கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியான நிலையில் ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்



  • 13:49 (IST) 09 Apr 2023
    ஏப்ரல் 24-ல் முப்பெரும் விழா - ஓ.பி.எஸ் அறிவிப்பு

    "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக 51-வது ஆண்டு விழா ஆகியவற்றை சேர்த்து திருச்சியில் மாநாட்டுடன் முப்பெரும் விழா" - ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு



  • 13:48 (IST) 09 Apr 2023
    நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என்று மத்திய அரசு சொல்லவில்லை

    நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என்று மத்திய அரசு சொல்லவில்லை அன்புமணி

    ஏல பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மட்டுமே அறிவித்துள்ளனர்.

    யாரும் ஏலம் எடுக்காததால் ஏல பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்



  • 13:31 (IST) 09 Apr 2023
    திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்

    “திருவண்ணாமலை மாவட்டத்தை 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    தமிழ்நாட்டிலே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. 27 லட்சம் மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்கின்றனர். திருவண்ணாலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதை 4 தொகுதிகள் வீதம் 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.



  • 12:56 (IST) 09 Apr 2023
    தமிழில் சி.ஆர்.எஃப் தேர்வு நடத்த வேண்டும்

    தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி.ஆர்.எஃப் கணினி தேர்வை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

    ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் வேதனை. மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்ப பட உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:46 (IST) 09 Apr 2023
    3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-

    வானிலை ஆய்வு மையம் தகவல்!



  • 12:21 (IST) 09 Apr 2023
    பாஜகவில் புதிதாக 5 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம்

    பாஜகவில் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பாஜகவில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்தார் அண்ணாமலை. ராமநாதபுரம் - முரளிதரன், செங்கல்பட்டு தெற்கு - ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு - வெங்கடேசன், மேற்கு சேலம் - வரதராஜன், தருமபுரி - முனிராஜ் ஆகியோர் மாவட்ட பார்வையாளர்களாக நியமனம்.



  • 11:48 (IST) 09 Apr 2023
    பொம்மன், பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்



  • 11:17 (IST) 09 Apr 2023
    தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை

    தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை . கர்நாடகா பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடி



  • 10:50 (IST) 09 Apr 2023
    கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு கொரோனா தொற்று

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு கொரோனா தொற்று . கொரோனாவுக்கு 32,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 10:18 (IST) 09 Apr 2023
    பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம்

    திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், அரசுப் பேருந்துகள் மோதி விபத்து. முன்னால் சென்ற பேருந்து பிரேக் அடித்த போது, பின்னால் சென்ற பேருந்து மோதி விபத்து . பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு



  • 10:09 (IST) 09 Apr 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

    ' அன்பும், சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து



  • 10:08 (IST) 09 Apr 2023
    போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு

    பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு



  • 09:54 (IST) 09 Apr 2023
    முழு மதிப்பேண் வழங்கியது தேர்வுகள் இயக்ககம்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிதப் பாடத்தில் தவறாக கேட்கப்படிருந்த 5 மதிப்பெண்கள் கொண்ட கேள்விக்கு, முழு மதிப்பேண் வழங்கியது தேர்வுகள் இயக்ககம். இந்த கேள்விக்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால், முழு பதிப்பெண் வழங்கப்படும்



  • 08:52 (IST) 09 Apr 2023
    பிரதமர் மோடி பந்திபூர் புலிகள் காப்பகத்தை பார்வையிட்டு வருகிறார்

    கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி பந்திபூர் புலிகள் காப்பகத்தை பார்வையிட்டு வருகிறார். பந்திபூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் மோடி . பந்திபூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பயணம் செய்யும் பிரதமர் மோடி . பிரதமர் வருகையை ஒட்டி புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை



  • 08:51 (IST) 09 Apr 2023
    ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி ட்வீட்

    'ஈஸ்டர் திருநாள், மக்களுக்கு சேவை செய்ய நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும்'. ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து



  • 08:03 (IST) 09 Apr 2023
    பிரத்தியேக உடையுடன் தயாராகியுள்ள புகைப்படம்

    பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சபாரியில் ஈடுபட உள்ள பிரதமர் நரேந்திர மோடி அதற்காக பிரத்தியேக உடையுடன் தயாராகியுள்ள புகைப்படம்



  • 08:03 (IST) 09 Apr 2023
    இன்று முதுமலை செல்கிறார் பிரதமர் மோடி

    தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி . ஆஸ்கர் தம்பதி பொம்மன்- பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் . பிரதமர் வருகையையொட்டி முதுமலை தெப்பக்காடு முகாமில் 2000 போலீசார் பாதுகாப்பு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment