Advertisment

Tamil News Highlights: கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்:சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 05 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்:சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 441-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.100 கோடி வருவாய்

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.100 கோடி வருவாய் வந்திருப்பதாக பதிவுத்துறை தகவல்

2-ம் கட்ட முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் இன்று தொடக்கம். இதுவரை 79 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் விண்ணப்பதிவு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:49 (IST) 05 Aug 2023
    திடீர் பயணமாக டெல்லி செல்லும் அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது



  • 22:39 (IST) 05 Aug 2023
    தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

    தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

    காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். மதுறை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 22:14 (IST) 05 Aug 2023
    சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது



  • 21:47 (IST) 05 Aug 2023
    மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் பலி

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் மரணம் அடைந்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹர்சித் என்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்



  • 20:46 (IST) 05 Aug 2023
    சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    சென்னை வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யபட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்



  • 20:22 (IST) 05 Aug 2023
    நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது சந்திரயான் - 3 விண்கலம்

    சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது. கடந்த ஜூலை 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து புறப்பட்ட விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது



  • 19:39 (IST) 05 Aug 2023
    உடற்பயிற்சிக் கூடத்தை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்

    சென்னை, தலைமைச் செயலகத்தில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வரும் உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.



  • 19:19 (IST) 05 Aug 2023
    ஜெயிலர் படத்தின் 3வது பாடல் வெளியீடு

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படத்தின் 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விஷால் மிஸ்ரா குரலில் 'ரத்தமாரே' எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது



  • 19:18 (IST) 05 Aug 2023
    நீர்நிலை நிலங்களுக்கு எந்த தனிநபரும் உரிமை கோர இயலாது - ஐகோர்ட்

    நீர்நிலை நிலங்களுக்கு எந்த தனிநபரும் உரிமை கோர இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது



  • 19:01 (IST) 05 Aug 2023
    ஜெயிலர் படத்தின் 3வது பாடல் வெளியீடு

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படத்தின் 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விஷால் மிஸ்ரா குரலில் 'ரத்தமாரே' எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது



  • 18:43 (IST) 05 Aug 2023
    தொலைபேசி வாயிலாக அர்ச்சனை - பழனி முருகன் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

    பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை என வாட்ஸப்பில் வெளிவரும் தகவல் பொய்யானது. ஆடி கிருத்திகையன்று ஒருகோடி பேருக்கு அர்ச்சனை எனக்கூறி பணம்பறிக்கும் மோசடி கும்பலின் பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • 18:13 (IST) 05 Aug 2023
    என்.எல்.சி. நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பெயர் பட்டியல் - சர்ச்சை

    என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெயர் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக பரிந்துரையின் பேரில் பணி வழங்கியதாக என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 17:55 (IST) 05 Aug 2023
    மைசூரு புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

    நீலகிரி, முதுமலைக் காப்பகத்தில் பொம்மன் - பெள்ளியை சந்தித்துப் பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

    செல்லும் வழியில் நின்றிருந்த பொதுமக்களுக்கு கைகொடுத்து, இனிப்புகளும் வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு



  • 17:19 (IST) 05 Aug 2023
    அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது : உதயநிதி ஸ்டாலின்

    இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!



  • 17:06 (IST) 05 Aug 2023
    திருக்கோவிலூரில் புத்தக கண்காட்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது; தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும்!



  • 17:03 (IST) 05 Aug 2023
    நீலகிரி வந்தடைந்தார் குடியரசு தலைவர்

    நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளியையும் சந்திக்கிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மசினகுடியில் பலத்த பாதுகாப்பு



  • 16:01 (IST) 05 Aug 2023
    போரூர் - கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

    சென்னை போரூர் - கிண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிப்பு. மெட்ரோ ரயில் பணியால் குறுகிய சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்



  • 15:57 (IST) 05 Aug 2023
    மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள் : மு.க.ஸ்டாலின் பேச்சு

    பாஜகவுக்கு இது வாழ்வா சாவா - என்ற தேர்தல்! மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள்” திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • 15:01 (IST) 05 Aug 2023
    'இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோது வெல்லாது': ராமதாஸ் ட்வீட்!

    "ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்தி மொழியை ஏற்றுக் கொண்டாகத் தான் வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது இந்தி மீதான அவரது நம்பிக்கையை காட்டவில்லை;மாறாக, இந்தித் திணிப்பின் மீதான அவரது நம்பிக்கையையே காட்டுகிறது; இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோது வெல்லாது;

    இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட 8வது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 14:54 (IST) 05 Aug 2023
    "இலவச சட்ட ஆலோசனை மையம்": புஸ்ஸி ஆனந்த் பேச்சு!

    விஜய்-யின் அறிவுரைப்படி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வழக்கறிஞர் அணி செயல்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "இலவச சட்ட ஆலோசனை மையம்"அமைக்க இருப்பதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.



  • 14:39 (IST) 05 Aug 2023
    அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் ஆபத்து!

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள 'THE WESTMINSTER' அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது. 2015ம் ஆண்டு 17 மாடிகளுடன் 600க்கும் அதிகமான குடியிருப்புகளுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் அபாயம். விதிகளை மீறி தரமற்ற முறையில் குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்திருப்பதாக குடியிருப்போர் நலச்சங்கம் புகார் கொடுத்துள்ளனர்.



  • 13:57 (IST) 05 Aug 2023
    '9 ஆண்டுகள் ஊழல் இல்லாத ஆட்சி': அண்ணாமலை பேச்சு!

    "என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை. 9 ஆண்டுகள் ஊழல் இல்லாத ஆட்சியாக, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை யாரும் நேரில் சந்திக்கவில்லை என்றாலும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து வருகிறோம்" என்று செல்லூரில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.



  • 13:01 (IST) 05 Aug 2023
    வெயில் அதிகரிக்கும்

    தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 13:00 (IST) 05 Aug 2023
    சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சென்னையில் இதுவரை 98 வார்டுகளில் 4,70,301  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; 2ம் கட்டமாக 724 முகாம்கள் நடைபெறுகின்றன -சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி



  • 12:43 (IST) 05 Aug 2023
    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பு

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை

    நாடாளுமன்ற தேர்தல் பணிகள்,தேர்தல் பரப்புரை குறித்தும் ஆலோசனை



  • 12:40 (IST) 05 Aug 2023
    மீண்டும் வன்முறை வெடித்தது

    மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மீண்டும் வன்முறை வெடித்தது.



  • 12:13 (IST) 05 Aug 2023
    அமித்ஷாவின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சி இது; அமித்ஷாவின் பேச்சை கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல;

    தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்;

    1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் - எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்



  • 12:11 (IST) 05 Aug 2023
    அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி

    அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை;

    பாஜக கட்சியில் இணைந்த ஒரு ஆண்டில் மாநில தலைவராக பதவியேற்றவர் அண்ணாமலை; சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நான் பொது வாழ்வில் இருக்கிறேன்;

    என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்குக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நன்றாக தெரியும் - அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அறிக்கை



  • 12:09 (IST) 05 Aug 2023
    பிரதமர் மோடி பாராட்டு

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

    வீராஙகனைகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்திய அணிக்கு சிறந்த பலனளித்துள்ளதாக பிரதமர் பெருமிதம்!



  • 11:38 (IST) 05 Aug 2023
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

    ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.



  • 11:38 (IST) 05 Aug 2023
    புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிப்பு!

    காலை 6 மணி முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவுள்ளார் முர்மு!

    குடியரசுத் தலைவர் செல்லும் வழிகளில் உள்ள சாலையோர உணவுக் கடை, பழக் கடைகளுக்கும் தடை விதித்துள்ளது போலீஸ்!



  • 11:35 (IST) 05 Aug 2023
    அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் விமர்சனம்

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த கோமாளிகளால் தங்கள் சொந்த பிரச்னையை தீர்த்து கொள்ள முடியாது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.



  • 11:34 (IST) 05 Aug 2023
    திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்;

    ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சித்தூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு;

    வேலூரில் இருந்து திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்; ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் பேருந்துகளும் திருப்பதியில் நிறுத்தி வைப்பு



  • 11:33 (IST) 05 Aug 2023
    திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்;

    ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சித்தூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு;

    வேலூரில் இருந்து திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்; ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் பேருந்துகளும் திருப்பதியில் நிறுத்தி வைப்பு



  • 11:31 (IST) 05 Aug 2023
    டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்

    தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டம்

    உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது

    மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது

    கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்ப்பு



  • 11:31 (IST) 05 Aug 2023
    2ஆம் கட்ட முகாம் தொடக்கம்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2ஆம் கட்ட முகாம் தொடக்கம்

    இன்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடைபெற உள்ளது



  • 10:42 (IST) 05 Aug 2023
    நிலவு சுற்றுவட்ட பாதைக்கு செல்கிறது சந்திரயான்-3

    இன்று இரவு 7 மணிக்கு நிலவு சுற்றுவட்ட பாதைக்கு செல்கிறது சந்திரயான்-3

    நிலவு சுற்றுவட்ட பாதைக்கு இன்று இரவு 7 மணியளவில் சந்திரயான்-3 விண்கலம் செல்கிறது. கடந்த 20 நாட்களாக பூமியில் இருந்து நிலவை நோக்கி 3.84 கி.மீ தூரம் சந்திரயான் பயணித்துள்ளது.



  • 10:32 (IST) 05 Aug 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு தங்கம் ஒரு கிராம் ரூ 5,555க்கும், ஒரு சவரன் ரூ. 44,440க்கும் விற்பனை



  • 09:39 (IST) 05 Aug 2023
    நாடாளுமன்ற குழு பரிந்துரையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு

    தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு

    தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 18-ஆக குறைக்க வேண்டும் எனற நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு. தேர்தல்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க இது உதவும் என கூறப்பட்டது. மிகப்பெரிய பொறுப்புள்ள பதவிகளில் அமர, அனுபவமோ, முதிர்ச்சியோ அந்த வயதில் இருக்காது என தேர்தல் ஆணையம் கருத்து.



  • 09:08 (IST) 05 Aug 2023
    பனிமய மாதா பேராலயத்தில் தங்கத்தேர் பவனி

    தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி

    மாதா கோவிலில் இருந்து 4 ரத வீதிகளில் உலா வரும் தங்கத் தேர்

    தேர் பவனியையொட்டி வெளி மாவட்ட போலீசார் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு



  • 09:06 (IST) 05 Aug 2023
    இன்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    காணொலியில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை



  • 08:48 (IST) 05 Aug 2023
    புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் - ஆளுநர் விளக்கம்

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் ஜூலை 22-ம் தேதி ஆளுநர் மாளிக்கை வந்தது. விடுமுறை தினத்தில் கோப்பு வந்தது. ஆனால் சற்றும் தாமதிக்காமல் கையெழுத்திட்டு உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி விட்டேன். இனி மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை கிடப்பில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்



  • 08:13 (IST) 05 Aug 2023
    தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து - 15 பேர் காயம்

    திருவண்ணாமலை, அத்தியந்தல் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து - 15 பேர் காயம்



  • 08:09 (IST) 05 Aug 2023
    திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.



  • 08:09 (IST) 05 Aug 2023
    தக்காளி விலை ரூ.20 குறைந்து ரூ.100க்கு விற்பனை

    சென்னை, கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 குறைந்தது

    நேற்று கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.100க்கு விற்பனை

    வரத்து அதிகரிப்பால் விலை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment