Advertisment

Tamil news today : டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை: பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Chennai Meteorological Center Today report

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

4 தொழிலாளிகள் உயிரிழப்பு

ஆந்திரப்பிரதேசம்,  மேற்கு கோதாவரி மாவட்டம் கடியத்தாவில், பட்டாசு ஆலையில் பெரும் தீவிபத்து தீவிபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 4 தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.

கனமழை விடுமுறை

13 மாவட்டங்களுக்கு  பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



  • 22:43 (IST) 11 Nov 2022
    பிரதமர் மோடியை ஒன்றாக வழியனுப்பி வைத்த இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

    பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இருவரும் அருகருகே நின்று ஒன்றாக வழியனுப்பி வழியனுப்பினர்.



  • 22:11 (IST) 11 Nov 2022
    வேளச்சேரியில் மழை நீர் அகற்றும் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னை வேளச்சேரியில் மழை நீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.



  • 20:57 (IST) 11 Nov 2022
    10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு அ.தி.மு.க ஏற்கிறது - ஜெயக்குமார்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அ.தி.மு.க ஏற்றுக்கொள்கிறது. நாளை முதலமைச்சர் தலைமயில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:04 (IST) 11 Nov 2022
    சென்னை வந்தடைந்தது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்

    தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடைந்தது. பெங்களூரூவில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வந்தே பாரத் ரயிலை வரவேற்றார்.



  • 19:32 (IST) 11 Nov 2022
    சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.



  • 19:29 (IST) 11 Nov 2022
    விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:51 (IST) 11 Nov 2022
    நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: ஜெயலலிதா முயற்சிக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது - சசிகலா

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருப்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிக்கு இன்று ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவரும் சந்தோசமும் நிம்மதியும் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:32 (IST) 11 Nov 2022
    கோயில் அறங்காவலர் நியமனம் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    கோவில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்து கேட்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய வழக்குகள் 2 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ₨10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள 560 கோவில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும். இதுவரை 8 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.



  • 17:32 (IST) 11 Nov 2022
    தோனி அவதூறு வழக்கு... ஐ.பி.எஸ்., சம்பத்குமார் நேரில் ஆஜராக உத்தரவு

    கிரிக்கெட்டர் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:26 (IST) 11 Nov 2022
    தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி.. நேரில் வரவேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வரவழைத்தார்.



  • 15:57 (IST) 11 Nov 2022
    மக்களிடம் கையசைத்துக்கொண்டே திண்டுக்கல் செல்லும் பிரதமர் மோடி

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தப்படி சென்றுள்ளார்



  • 15:30 (IST) 11 Nov 2022
    மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

    பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல், காந்திகிராமம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்



  • 15:28 (IST) 11 Nov 2022
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுவித்து வந்த 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மேலும் அரசின் தீர்மானங்களை, ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு ஆதாரம் என்றும், ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ள முதல்வர், மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி என்று கூறியுள்ளார்.



  • 14:57 (IST) 11 Nov 2022
    ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான முடிவு - ஜெய்ராம் ரமேஷ்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.



  • 14:56 (IST) 11 Nov 2022
    ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான முடிவு - ஜெய்ராம் ரமேஷ்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.



  • 14:45 (IST) 11 Nov 2022
    திமுகவிற்கு கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு - ஆர்.எஸ் பாரதி

    பிரதமரை திருப்திப்படுத்த 10% இட ஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, முதல் முதலில் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்தது திமுக தான்" திமுகவிற்கு கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று கூறியுள்ளார்.



  • 14:01 (IST) 11 Nov 2022
    நளினியின் தாய் பத்மா உருக்கம்

    6 பேர் விடுதலையில், மனிதநேய உள்ளம் கொண்டு எங்களுடன் போராடிய அனைவருக்கும் நன்றி; அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது- நளினியின் தாய் பத்மா.



  • 13:59 (IST) 11 Nov 2022
    6 பேர் விடுதலை.. திருமாவளவன் வரவேற்பு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆதரவளிக்கக் கூடிய தீர்ப்பு. ஆளுநர் வேண்டுமென்றே 6 பேரின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்தார். ஆளுநர் செய்ய வேண்டிய கடமையை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.



  • 13:24 (IST) 11 Nov 2022
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. 6 பேர் விடுதலை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 12:57 (IST) 11 Nov 2022
    ரகசிய விசாரணை

    தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டு, 90 பேரிடம் ரகசிய விசாரணை நடைபெறுகிறது. தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கு முன்னோட்டமாக நேற்று சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • 12:46 (IST) 11 Nov 2022
    கனமழை தொடரும்

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:37 (IST) 11 Nov 2022
    ஊடகங்களிடம் கருத்து கூற உச்ச நீதிமன்றம் தடை

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் சிறை தண்டனை நிறுத்திவைப்பு: ஊடகங்களிடம் கருத்து கூற உச்ச நீதிமன்றம் தடை



  • 11:37 (IST) 11 Nov 2022
    இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

    கரூரில் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 11:33 (IST) 11 Nov 2022
    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது

    மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது , விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை .



  • 11:27 (IST) 11 Nov 2022
    தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது

    தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது: பணப்புழக்கம் அதிகரித்துள்ளது , தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 10:34 (IST) 11 Nov 2022
    தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

    தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம். மைசூரு - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்



  • 09:47 (IST) 11 Nov 2022
    பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு .



  • 09:46 (IST) 11 Nov 2022
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதி காலை தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் . இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 09:46 (IST) 11 Nov 2022
    15ம் தேதி வரை கனமழை

    வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு . 15ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.



  • 09:45 (IST) 11 Nov 2022
    29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் ஏரிகள். 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment