Advertisment

Tamil News Highlights: அமெரிக்கா, எகிப்து பயணங்களை முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 25 -06-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: அமெரிக்கா, எகிப்து பயணங்களை முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 399வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்“ ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாநாடு குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் .

நீர் நிலவரம்

புழல் ஏரிக்கு நீர்வரத்து, 353 கனஅடியில் இருந்து 283 கனஅடியாக சரிவு; நீர்இருப்பு 2266 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 93 கன அடியில் இருந்து 46 கனஅடியாக சரிவு;  நீர்இருப்பு 346 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 200கனஅடி நீர் வெளியேற்றம். கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 414 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:52 (IST) 25 Jun 2023
    மணப்பாறை சாலை விபத்து; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு

    திருச்சி, மணப்பாறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்



  • 22:01 (IST) 25 Jun 2023
    முஸ்லிம்கள் வாழும் 6 நாடுகள் மீது குண்டு போட்டவர்: ஒபாமாவின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்

    பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பிடன் குறிப்பிட வேண்டிய ஒன்று என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய சில நாட்களுக்குப் பிறகு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலத்தில் குறைந்தது 6 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

    செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர், ஒபாமாவின் அறிக்கைக்கு தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவுக்கான விருப்பத்தை வலியுறுத்தினார். நிர்மலா சீதாராமன், ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் நடந்த குண்டுவெடிப்புகளை எடுத்துக்காட்டி, “ஒருவேளை அவரது (ஒபாமா) காலத்தில் 6 முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் குண்டுவீசித் தாக்கப்பட்டிருக்கலாம். 26,000 க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. என்று கூறினார்



  • 21:41 (IST) 25 Jun 2023
    டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீராங்கனை

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்



  • 20:32 (IST) 25 Jun 2023
    முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவுப் பட்டியல் மாற்றம்

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தினசரி உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவு பட்டியலின்படி, வாரத்திற்கு இரண்டு முறை சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வழங்கலாம்



  • 19:58 (IST) 25 Jun 2023
    சென்னையில் 14 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

    சென்னையில் 14 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்



  • 19:30 (IST) 25 Jun 2023
    இந்தியா திரும்பும் பிரதமர் மோடி

    அமெரிக்கா, எகிப்து பயணங்களை முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார். எகிப்து கெய்ரோவில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.



  • 19:11 (IST) 25 Jun 2023
    இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை

    ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் தாக்கல் செய்த மனுவில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது



  • 18:55 (IST) 25 Jun 2023
    சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் மின்தூக்கியில் சிக்கி ஒருவர் மரணம்

    சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் மின்தூக்கியில் சிக்கி, பெரம்பூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • 18:43 (IST) 25 Jun 2023
    மணப்பாறை அருகே கார், அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் மரணம்

    திருச்சி, மணப்பாறை அருகே கார், அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து கவிழ்ந்த நிலையில், கார் முற்றுலும் சேதமடைந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • 18:35 (IST) 25 Jun 2023
    செந்தில் பாலாஜி வாக்குமூலம்: எடப்பாடி பகீர் கருத்து

    “தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.

    இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.



  • 18:21 (IST) 25 Jun 2023
    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • 17:57 (IST) 25 Jun 2023
    திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக வர வாய்ப்பு: டி. ஜெயக்குமார்

    திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவை தேடிவர வாய்ப்புகள் அதிகம்” என்றார்.



  • 17:54 (IST) 25 Jun 2023
    மக்கள் மீது கல்விக் கொள்கை திணிப்பு: நடிகை ரோகிணி

    மக்கள் வாழ்க்கை முறை மீது கவலை கொள்ளாத கல்வி கொள்கை திணிக்கப்படுவதாக, மத்திய அரசு மீது நடிகை ரோகிணி குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • 17:26 (IST) 25 Jun 2023
    செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் மனு

    செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை.

    எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 17:01 (IST) 25 Jun 2023
    ஆளுனர் பதவி: தயாநிதி மாறன் கேள்வி

    ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததை எல்லாம் தூக்கி எறிகிறோம் என பாஜக சொல்கிறது. அப்போ ஆளுநரையும் தூக்கி எறியலாம் தானே என திமுக எம்.பி தயாநிதிமாறன் கேள்வியெழுப்பி உள்ளார்.



  • 16:53 (IST) 25 Jun 2023
    தூத்துக்குடியில் மல்லிப்பூ விலை வீழ்ச்சி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மல்லி பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.

    ஒரு கிலோ மல்லிப்பூ ₹200க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



  • 16:35 (IST) 25 Jun 2023
    செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலுக்கு எதிராக மனு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு 8 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.



  • 16:03 (IST) 25 Jun 2023
    டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது - அமைச்சர் முத்துசாமி

    ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி: “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளோம். டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும்.” என்று கூறினார்.



  • 16:02 (IST) 25 Jun 2023
    மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி, மாலை 3 மணி வரை நீட்டிப்பு

    மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி, மாலை 3 மணி வரை நீட்டித்து மணிப்பூர் மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.



  • 15:53 (IST) 25 Jun 2023
    டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது - அமைச்சர் முத்துசாமி

    ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி: “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளோம். டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும்.” என்று கூறினார்.



  • 15:18 (IST) 25 Jun 2023
    மோடிக்கு எகிப்தின் உயரிய விருதை அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி

    பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருதை அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி வழங்கினார்.

    கெய்ரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி, நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் நைல்' விருதை வழங்கினார். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துதல், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.



  • 15:16 (IST) 25 Jun 2023
    கெய்ரோவில் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹக்கிம் மசூதியை பார்வையிட்டார் மோடி

    கெய்ரோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹக்கிம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

    கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-ஹக்கிம் மசூதிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார். இது இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது. 1012-ல் கட்டப்பட்ட மசூதியின் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள நுணுக்கமான செதுக்கப்பட்ட கல்வெட்டுகளை பிரதமர் மோடி பாராட்டினார்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அல்-ஹக்கீம் கெய்ரோவில் நான்காவது பழமையான மசூதியாகும், மேலும் நகரத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஃபாத்திமிட் மசூதியாகும். மசூதி 13,560 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, சின்னமான மத்திய முற்றம் 5,000 சதுர மீட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.

    தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள், பாத்திமி இஸ்மாயிலி தையிபி சிந்தனைப் பள்ளியைக் கடைப்பிடிக்கும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் ஒரு பிரிவாகும். அவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு இருப்பை நிறுவுவதற்கு முன்பு, எகிப்தில் இருந்து தோன்றியதாகவும் பின்னர் யேமனுக்கு மாற்றப்பட்டதாகவும் அறியப்படுகிறது.



  • 15:13 (IST) 25 Jun 2023
    கேரள யூடியூபர் வீடுகளில் ஐடி ரெய்டு; ரூ. 25 கோடி வருமான வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

    கேரள மாநிலம் முழுவதும் பிரபல யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், ரூ. 25 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



  • 15:13 (IST) 25 Jun 2023
    சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    முன்னாள் பிரதமர் ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி. சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 15:13 (IST) 25 Jun 2023
    டெல்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு!

    புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியே மழை நீர் தேங்கியிருந்ததால், மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயன்றபோது மின்சாரம் தாக்கி சாக்‌ஷி அஹுஜா என்ற இளம் பெண் உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியே மின்சார வயர்கள் அறுந்து கிடந்த நிலையில், அதை தொட்டதும் மின்சாரம் தாக்கியுள்ளது; ஊழியர்களின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அவரது சகோதரி மாதவி போலீசில் புகார் அளித்துள்ளார்.



  • 15:12 (IST) 25 Jun 2023
    முதல் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார் மோடி

    முதல் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஹெலியோபோலிஸ் போர் கல்லறைக்கு பிரதமர் மோடி சென்றார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைக்குச் சென்று முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் வீரத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ஹெலியோபோலிஸ் (போர்ட் தெவ்பிக்) நினைவகம் மற்றும் ஹெலியோபோலிஸ் (ஏடன்) நினைவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்லறையில் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார், பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    ஹெலியோபோலிஸ் (போர்ட் ட்யூஃபிக்) நினைவுச்சின்னம் முதல் உலகப் போரில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு இறந்த கிட்டத்தட்ட 4,000 இந்திய வீரர்களை நினைவுகூருகிறது.

    ஹெலியோபோலிஸ் (ஏடன்) நினைவுச்சின்னம் முதல் உலகப் போரின்போது ஏடனுக்காக உயிர் தியாகம் செய்த காமன்வெல்த் படைகளின் 600 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

    இந்த கல்லறை காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. காமன்வெல்த் போர் கிரேவ்ஸ் கமிஷன் இணையதளத்தின்படி, இது இரண்டாம் உலகப் போரின் 1,700 காமன்வெல்த் புதைகுழிகள் மற்றும் பிற நாடுகளின் பல போர் கல்லறைகளையும் கொண்டுள்ளது.

    சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் அமைந்துள்ள அசல் போர்ட் ட்யூஃபிக் நினைவுச்சின்னம் 1926 இல் திறக்கப்பட்டது.

    சர் ஜான் பர்னெட்டால் வடிவமைக்கப்பட்ட, அசல் நினைவுச்சின்னம் 1967-1973 இஸ்ரேலிய-எகிப்திய மோதலின் போது சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் இறுதியில் இடிக்கப்பட்டது என்று காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 1980 இல், ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறை கல்லறையில், எகிப்துக்கான இந்தியத் தூதரால் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் பெயர்கள் அடங்கிய பேனல்கள் கொண்ட புதிய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.



  • 13:53 (IST) 25 Jun 2023
    சாலை அமைப்பதில் முறைகேடு புகார்: தி.மு.க எம்.எல்.ஏ ஆய்வு

    காரைக்கால் வடகட்டளை கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு என புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ அளவுகோலுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். கையோடு பெயர்ந்து வந்த சாலையை பார்த்து அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ 4 செ.மீ. உயரத்திற்கு போட வேண்டிய சாலை 2 செ.மீ. கூட இல்லை என புகார் தெரிவித்தார்.



  • 13:26 (IST) 25 Jun 2023
    திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு

    மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைப்பு, வீடு சூறை

    காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு

    கோயில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினர் இடையே தகராறு

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் வீட்டை, திமுக கிளை செயலாளர் அடித்து நொறுக்கியதாக புகார்

    சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார்



  • 13:06 (IST) 25 Jun 2023
    5 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு

    போதைப்பொருள் ஒழிப்பிற்காக காவல்துறையில் 5 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு

    சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி அறிவிப்பு

    கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ்க்கு பதக்கம்

    சேலம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், நாமக்கல் காவல் ஆய்வாளர் முருகனுக்கு பதக்கம்

    நாமக்கல் மாவட்ட முதல்நிலை காவலர் குமார் ஆகியோருக்கும் முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு



  • 12:58 (IST) 25 Jun 2023
    காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு

    2023-ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு. 2 மாவட்ட எஸ்.பி உட்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு

    முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு



  • 12:54 (IST) 25 Jun 2023
    கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழப்பு

    கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழப்பு

    இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

    ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற நிலையில், மாணவன் உயிரிழப்பு

    குளிக்க சென்ற போது உயிரிழப்பா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என லண்டன் போலீசார் விசாரணை

    லண்டன் போலீசாரின் விசாரணை முடிந்த பிறகே உடல் இந்தியா கொண்டுவரப்படும் என தகவல்



  • 12:53 (IST) 25 Jun 2023
    கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

    கோவையில் 8வது வாரமாக கொண்டாடப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட்

    ஆடல் பாடல் என குத்தாட்டம் போட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று உற்சாகம்

    சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் விளையாடி மகிழ்ச்சி



  • 12:12 (IST) 25 Jun 2023
    ஜவ்வாது மலை கிராமங்களில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை

    வேலூர் ஜவ்வாது மலை கிராமங்களில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை - வேலூர் சரக காவல் துணை தலைவர் தலைமையில் அதிரடி

    ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராயத் தேடுதல் வேட்டை

    150க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் தேடுதல் - ஒருவர் கைது

    கள்ளச்சாராயம் குறித்து 89394 73233 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் கூறலாம் என அறிவிப்பு



  • 12:10 (IST) 25 Jun 2023
    வீட்டு உரிமையாளர் மீது வார்டு உறுப்பினர் தாக்குதல் என புகார்

    கிருஷ்ணகிரி பண்ணந்தூரில் சாலையில் மண் கொட்டி, வார்டு உறுப்பினர் இடையூறு என புகார்

    மண் கொட்டியதை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு

    கன்னத்தில் அறைந்து, ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகவும் புகார்

    சமூக வலைதளங்களில் பரவி வரும் வார்டு உறுப்பினரின் வீடியோ

    காயமடைந்த சக்திவேல் என்பவர் மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி



  • 12:03 (IST) 25 Jun 2023
    காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பலுக்கு பொதுமக்கள் தர்ம அடி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்

    ஆடு திருடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி

    பொதுமக்களே இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்களை மடக்கி பிடித்தனர்

    திருடர்களை மீட்க வந்த போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு



  • 12:02 (IST) 25 Jun 2023
    ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக கோலாகலம்

    வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

    கோலாகலம்

    ராஜ கோபுரம் உட்பட 8 கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம்

    3000 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர்

    ஓம் நம சிவாயா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்



  • 11:27 (IST) 25 Jun 2023
    ரயில் தண்டவாளத்தில் கற்கள் - மோப்ப நாய் வரவழைப்பு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்த விவகாரம்

    கல் வைத்த மர்ம நபர்களை கண்டறிய சென்னையில் இருந்து மோப்ப நாய் வரவழைப்பு

    ஜான்சி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு

    ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் நேரில் விசாரணை



  • 10:51 (IST) 25 Jun 2023
    திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதல்

    டிஎன்பிஎல் தொடரில் இன்று மாலை 3.15 மணிக்கு சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதல்



  • 10:17 (IST) 25 Jun 2023
    போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி திரைப்பிரபலங்கள் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்



  • 10:14 (IST) 25 Jun 2023
    அரிக்கொம்பன் யானை உடல் நலமுடன் உள்ளது

    அரிக்கொம்பன் யானை மெலிந்த நிலையில் இருந்தாலும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தகவல் அரிசி சாப்பிட்டு வந்ததால் அரிக்கொம்பனின் உடல் உப்பிசமாக காணப்பட்டது - வனத்துறை . தற்போது காட்டு உணவு, புல் சாப்பிடுவதால் வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளது. தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதை போல தெரிகிறது"



  • 09:19 (IST) 25 Jun 2023
    ரயில் வழித்தடத்தில் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்கள்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் பெங்களூரு - சென்னை செல்லும் ரயில் வழித்தடத்தில் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு



  • 09:18 (IST) 25 Jun 2023
    இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து நேருக்கு நேர் மோதி

    மேற்குவங்க மாநிலம் பங்குராவில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து நேருக்கு நேர் மோதியதில், 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன



  • 07:57 (IST) 25 Jun 2023
    9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 07:56 (IST) 25 Jun 2023
    ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் துவக்கம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் துவக்கம் . தனித்தனி தேர்களில் விநாயகர், நடராஜர், சிவகாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் பவனி அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களும் நான்கு ரத வீதிகளில் வலம் - பக்தர்கள் வழிபாடு தேரோட்டத்தையொட்டி, கடலூர் எஸ்.பி., தலைமையில் 1,160 போலீசார் பாதுகாப்பு .



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment