scorecardresearch
Live

Tamil news today live : மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இறுதிச்சடங்கு, இன்று காலை நடைபெறுகிறது

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 03-05-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today live : மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இறுதிச்சடங்கு, இன்று காலை நடைபெறுகிறது

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலவரம்

புழல் ஏரிக்கு நீர்வரத்து 248 கனஅடியாக அதிகரிப்பு; நீர்இருப்பு 2443 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 771 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 472 மில்லியன் கனஅடியாக உள்ளது.

ஐ.பி.எல் இன்று

மொகாலியில் இரவு 7.30 மணிக்கு மும்பை – பஞ்சாப் அணிகள் மோதல். லக்னோவில் மாலை 3.30க்கு சென்னை – லக்னோ அணிகள் மோதல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Read More
Read Less
Live Updates
22:51 (IST) 3 May 2023
சென்னை வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

நாளை மறுநாள் முதல் வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

சுரங்கப்பாதை அமைப்பதால் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி

கண்ணன் ரவுண்டானாவில் இருந்து செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை

22:06 (IST) 3 May 2023
நடிகர் சரத் பாபு குறித்து போலி தகவல்

பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானதாக தகவல் வெளியான நிலையில் உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என அவருடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21:59 (IST) 3 May 2023
மனோபாலா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

நடிகர் மனோபாலா மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி ட்விட்டரி, “பன்முக நடிகரும் இயக்குநருமான மனோபாலா மறைவு வருத்தம் அளிக்கிறது; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் என்று நினைவுகூரப்படும். ஓம் சாந்தி” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

20:54 (IST) 3 May 2023
பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக் குறைவால் மரணம்

பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 71.

20:44 (IST) 3 May 2023
மனோபாலா உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுத பூச்சிமுருகன்

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பூச்சி முருகன், அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

20:07 (IST) 3 May 2023
மனோபாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

நடிகர் மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

20:05 (IST) 3 May 2023
மனோபாலா மறைவு: கீர்த்தி சுரேஷ் இரங்கல்

நடிகர் மனோபாலா மறைவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

18:58 (IST) 3 May 2023
மனோபாலா மரணம்; நடிகை கஸ்தூரி இரங்கல்

நடிகரும் இயக்குனருமான மனோ பாலா மறைவுக்கு நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் படப் பிடிப்பில் உள்ள இரங்கல் தெரிவித்துள்ளார்.

18:37 (IST) 3 May 2023
மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் மனோ பாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

69 வயதான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

18:36 (IST) 3 May 2023
மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் மனோ பாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

69 வயதான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

18:32 (IST) 3 May 2023
சென்செக்ஸ் திடீர் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் நஷ்டத்தில் புதன்கிழமை (மே3) அமர்வை முடித்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 57.8 புள்ளிகள் அல்லது 0.32% சரிந்து 18,089.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 161.41 புள்ளிகள் அல்லது 0.26% சரிந்து 61,193.3 ஆகவும் இருந்தது.

17:57 (IST) 3 May 2023
மனோபாலா இறப்பை நம்ப முடியவில்லை; நடிகை வித்யுலேகா

நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் உயிரிழந்தார்.

அவரது இறப்பு திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை வித்யுலேகா, “மனோபாலா சாரின் இறப்பு செய்தி பேக் (பொய்) செய்தி என்றுதான் நினைச்சேன். அப்புறம்தான் தெரிந்தது” என உருக்கத்துடன் தெரிவித்தார்.

17:42 (IST) 3 May 2023
தங்க பல்லக்கில் கள்ளழகர்

வைகை ஆறு நோக்கி புறப்பட தயார் நிலையில் கள்ளழகர் உள்ளார். அவருக்காக தங்க பல்லக்கு தயார் நிலையில் உள்ளது.

கள்ளழகர் மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

17:20 (IST) 3 May 2023
இந்திய வீரர் யோகேஸ்வருக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் யோகேஸ்வருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

17:01 (IST) 3 May 2023
மனோபாலா மரணம் – விஜயகாந்த் இரங்கல்

திரையுலகில் தனக்கென தனிமுத்திரையை பதித்தவர் மனோபாலா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

16:58 (IST) 3 May 2023
மனோபாலா மறைவு – வடிவேலு இரங்கல்

மனோபாலா மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

16:52 (IST) 3 May 2023
மனோபாலா மறைவு; சிலம்பரசன் இரங்கல்

மனோபாலா இறந்த செய்தி அறிந்து மனம் உடைந்துவிட்டேன், அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள் என நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

16:41 (IST) 3 May 2023
மனோபாலா மறைவு; பிரபலங்கள் இரங்கல்

பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி மனோபாலா மறைவு, தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

மனோபாலா மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு என நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

16:25 (IST) 3 May 2023
லக்னோ கேப்டனாக க்ருணால் பாண்டியா

சென்னைக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா செயல்படுகிறார். காயம் காரணமாக கே.எல்.ராகுல் விளையாடவில்லை

16:09 (IST) 3 May 2023
கடைசி சீசனா? சி.எஸ்.கே. கேப்டன் தோனி பதில்

இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். நான் கிடையாது என சி.எஸ்.கே. கேப்டன் தோனி கூறியுள்ளார்

15:57 (IST) 3 May 2023
மனோபாலா மரணம்; எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்

நடிகர் மனோபாலா மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

15:45 (IST) 3 May 2023
நடிகர் மனோபாலாவின் உடலுக்கு H.வினோத் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர் H.வினோத் நேரில் அஞ்சலி செலுத்தினார்

15:33 (IST) 3 May 2023
மனோபாலா மரணம்; கமல் இரங்கல்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவிக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்

15:25 (IST) 3 May 2023
நாளை காலை மனோபாலாவின் இறுதி சடங்கு

மனோபாலா உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது என மறைந்த இயக்குனர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் தெரிவித்துள்ளார்

15:00 (IST) 3 May 2023
மனோபாலா மறைக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

14:35 (IST) 3 May 2023
மனோபாலா மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல்

திரையுலகினருக்கு பேரிழப்பு..மனோபாலாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என மனோபாலா மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்

14:32 (IST) 3 May 2023
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்ளே தான் தானியங்கி இயந்திரம் இருக்கு; ஆனால், தவறான தகவல் பரவுது” -சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

14:00 (IST) 3 May 2023
அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திகுத்து

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் பரணி என்ற இளம்பெண்ணின் தலை, கை ஆகிய இடங்களில் கத்தியால் குத்திய காதல் கணவர் சரத்குமார் தப்ப முயன்ற போது பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

13:58 (IST) 3 May 2023
ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு

பிரபல இயக்குநரும், நடிகருமான நண்பர் மனோபாலா இறப்பு வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

13:38 (IST) 3 May 2023
இயக்குனரும் நடிகருமான மனோபாலா மரணம்

தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

13:16 (IST) 3 May 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

13:15 (IST) 3 May 2023
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம்

தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சிறிது காலத்திற்கு அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்று விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

12:50 (IST) 3 May 2023
பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

நெல்லை, அம்பையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்

ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் சிபிசிஐடி வழக்குப் பதிவு

12:35 (IST) 3 May 2023
ஐபிஎல் டிக்கெட்: மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

ஐபிஎல் டிக்கெட் வழங்கவில்லை எனக்கூறி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

டிக்கெட் பெற சேப்பாக்கத்தில் தங்களுக்கு பிரத்யேக கவுன்ட்டர் அமைக்க கோரிக்கை

12:23 (IST) 3 May 2023
விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு

படப்பிடிப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு

நடிகர் விக்ரம் விரைவில் பூரண நலம் பெறுவார்- மேலாளர் சூரியநாராயணன்

12:22 (IST) 3 May 2023
தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தாம்பரத்தில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

12:22 (IST) 3 May 2023
‘தி கேரளா ஸ்டோரி’ – விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

12:21 (IST) 3 May 2023
ஐபிஎல் டிக்கெட் விற்பனை -போலீஸ் தடியடி

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை

டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு

12:18 (IST) 3 May 2023
என்.சி.பி புதிய தலைவர் யார்? : மும்பையில் ஆலோசனை

மும்பையில் உள்ள ஒய்.பி சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை தொடக்கம்

11:30 (IST) 3 May 2023
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் கிராமத்தில் கோவில் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கோயிலின் மின் விளக்கு அலங்கார பணியில் ஈடுபட்டிருந்த போது, விபரீதம்

11:30 (IST) 3 May 2023
அரவான் களப்பலி நிகழ்வு : சடங்குகளை தொடங்கிய திருநங்கைகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா- இன்று அரவான் களப்பலி நிகழ்வு

முன்கூட்டியே சடங்கு, சம்பிரதாயங்களை தொடங்கிய திருநங்கைகள்

11:29 (IST) 3 May 2023
தங்கம் சவரனுக்கு ரூ. 728 அதிகரிப்பு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 728 அதிகரிப்பு

ஒரு கிராம் தங்கம் ரூ. 5,706க்கும், சவரன் ரூ. 45,648க்கும் விற்பனை

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 728 அதிகரிப்பு ரூ. 45,648க்கு விற்பனை

10:34 (IST) 3 May 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: டிக்கெட் விற்பனை தொடங்கியது

சேப்பாக்கத்தில், வரும் 6ம் தேதி சென்னை – மும்பை மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

10:21 (IST) 3 May 2023
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 728 அதிகரிப்பு ஒரு கிராம் தங்கம் ரூ. 5,706க்கும், சவரன் ரூ. 45,648க்கும் விற்பனை

09:58 (IST) 3 May 2023
வங்கி கணக்கை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

09:37 (IST) 3 May 2023
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

08:35 (IST) 3 May 2023
தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை அனுமதிக்க வேண்டாம் உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை

தி கேரளா ஸ்டோரி படம் தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை அலர்ட். இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என எச்சரிக்கை . தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை

08:27 (IST) 3 May 2023
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! நேற்று மாலை 5 மணி உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று மாலை வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

08:26 (IST) 3 May 2023
என்.எல்.சி விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த அரசு முடிவு

என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகளுடன் பேசி முடிவு காணும் வரை நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது- தலைமைச் செயலாளர் இறையன்பு

Web Title: Tamil news today live rain updates pm modi ptr audio ipl