Advertisment

Tamil news today: தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் உள்ளன;அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 24 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Annamalai explained the issue of criticizing journalists as monkeys

தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணீருடன் விடைபெற்ற சகாப்தம்

டென்னிஸ் வாழ்க்கையின் இறுதி போட்டியில் தோல்வியடைந்தார், ரோஜர் பெடரர்.  நடாலுடன் இணைந்து ஆடியதில் தோல்வி கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார்.

இந்தியா அதிரடி வெற்றி

2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 91 ரன்கள் இலக்கை 7.2 ஓவர்களில் எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.  சிக்சர், பவுண்டரி அடித்து வெற்றிக்கு வித்திட்டார் தினேஷ் கார்த்திக்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:56 (IST) 24 Sep 2022
    பாஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

    ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் வரும் 28ஆம் தேதி மாலை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாவட்ட தலைவர்களுடன் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்



  • 21:22 (IST) 24 Sep 2022
    நானே வருவேன் படத்தின் காலை 4 மணி காட்சி ரத்து

    நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படம் வரும் செப்.29ல் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:21 (IST) 24 Sep 2022
    மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு

    கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரையில் பரபரப்பு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.



  • 20:18 (IST) 24 Sep 2022
    அக்.1 முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்

    அக்டோபர் 1ம் தேதி, டெல்லியில் நடைபெறும் "இந்திய மொபைல் மாநாட்டில்" இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி



  • 20:17 (IST) 24 Sep 2022
    “தமிழ் வெறும் மொழியல்ல நம் உயிர்“ – முதல்வர் ஸ்டாலின்

    தமிழ் பரப்புரை கழகத்தின் துவக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வெறும் மொழி அல்ல, அது நம் உயிர் தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்ததில் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

    மேலும் திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என்ற அளவில் வளர்க்கப்பட்டது தான் இந்த இயக்கம் திமுக ஆட்சிக்கு வந்தபோது தான், தமிழகத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறியுள்ளார்.



  • 20:14 (IST) 24 Sep 2022
    “தமிழ் வெறும் மொழியல்ல நம் உயிர்“ – முதல்வர் ஸ்டாலின்

    தமிழ் பரப்புரை கழகத்தின் துவக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வெறும் மொழி அல்ல, அது நம் உயிர் தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்ததில் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

    மேலும் திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என்ற அளவில் வளர்க்கப்பட்டது தான் இந்த இயக்கம் திமுக ஆட்சிக்கு வந்தபோது தான், தமிழகத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறியுள்ளார்.



  • 20:12 (IST) 24 Sep 2022
    ஜூலன் கோஸ்வாமியை கவுரவித்த இங்கிலாந்து அணி

    இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய போது அவரை யை கவுரவித்த இங்கிலாந்து அணி கவுரவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.



  • 20:12 (IST) 24 Sep 2022
    ஜூலன் கோஸ்வாமியை கவுரவித்த இங்கிலாந்து அணி

    இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய போது அவரை யை கவுரவித்த இங்கிலாந்து அணி கவுரவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.



  • 19:17 (IST) 24 Sep 2022
    பள்ளியை அரசு எடுத்து நடத்த கோரி வழக்கு விரைவில் விசாரணை

    கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 19:03 (IST) 24 Sep 2022
    உள்துறை செயலருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

    கோவையில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுடன் பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.



  • 19:01 (IST) 24 Sep 2022
    தம்பதிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து

    தாய், தந்தை, சகோதரனை எரித்து கொன்றதாக மகன் மற்றும் மருமகளுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 2019ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறியுள்ளது.



  • 19:01 (IST) 24 Sep 2022
    தம்பதிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து

    தாய், தந்தை, சகோதரனை எரித்து கொன்றதாக மகன் மற்றும் மருமகளுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 2019ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறியுள்ளது.



  • 18:59 (IST) 24 Sep 2022
    திருப்பூரில் சோதனை சாவடிகள் அமைப்பு

    கோவையில் பாஜக, இந்து அமைப்புகள் அலுவலகம் தக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது



  • 18:59 (IST) 24 Sep 2022
    திருப்பூரில் சோதனை சாவடிகள் அமைப்பு

    கோவையில் பாஜக, இந்து அமைப்புகள் அலுவலகம் தக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது



  • 18:58 (IST) 24 Sep 2022
    பிரதமருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

    இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதாவை மறுபரிசீலனை செய்ய கோரி பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.



  • 18:42 (IST) 24 Sep 2022
    சேலத்தில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் அழிப்பு

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேம்பூர் மலை கிராமத்தில் 13 சாராய பேரல்களில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் அழித்தனர்.



  • 18:18 (IST) 24 Sep 2022
    அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து.



  • 18:18 (IST) 24 Sep 2022
    தமிழ்நாட்டில் 75 கைதிகள் விடுதலை

    தமிழக அரசின் உத்தரவின்படி ஏற்கனவே சுதந்திர தினத்தையொட்டி 70 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



  • 18:02 (IST) 24 Sep 2022
    சிறுமிகள் ஆபாச பட விவகாரம் : 50 இடங்களில் சிபிஐ சோதனை

    சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று (செப்.24) 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.



  • 17:21 (IST) 24 Sep 2022
    கோவை குண்டுவீச்சு ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை: அண்ணாமலை

    கோவையில் 12 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யபடவில்லை.

    பாரதிய ஜனதா அமைதியை விரும்பும் கட்சி. இந்த விவகாரத்தில் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 16:34 (IST) 24 Sep 2022
    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வெடி மருந்து இல்லை - காவல்துறை

    கள்ளக்குறிச்சி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன சீரமைப்பு பணிகளின் போது வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது, கண்டெடுக்கப்பட்டது வெடிமருந்து இல்லை, கருஞ்சீரகம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



  • 16:15 (IST) 24 Sep 2022
    சமூக சேவகர்களுக்கு விருது - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

    சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுபவர்களுக்கு முதல்முறையாக விருதுகளை வழங்க முடிவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை அங்கீகரிக்க விருது சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது. விருதுகளுக்கான பரிந்துரைகள் அல்லது விண்ணப்பங்களை ஆளுநர் மாளிகைக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • 16:08 (IST) 24 Sep 2022
    தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் காவல் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் கோரிக்கை மனு

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சார்பில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்

    தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். சமீப காலமாக தமிழகத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது. பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது



  • 15:33 (IST) 24 Sep 2022
    மக்கள் பதற்றப்பட தேவையில்லை – கோவை ஆட்சியர்

    தேவையான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மக்கள் பதற்றப்பட தேவையில்லை என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



  • 15:29 (IST) 24 Sep 2022
    உத்தரகாண்ட் இளம் பெண் மரணம்; பா.ஜ.க அமைச்சர் மகனின் ரிசார்ட்க்கு தீ வைப்பு

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கால்வாயில் இருந்து சனிக்கிழமையன்று 19 வயதான அங்கிதா பண்டாரியின் உடல் மீட்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உள்ளூர்வாசிகள் அவர் பணியாற்றிய ரிசார்ட்டுக்கு தீ வைத்தனர். இந்த ரிசார்ட் உத்தரகாண்ட் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகனும் இளம்பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியுமான புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது.



  • 15:10 (IST) 24 Sep 2022
    அமைச்சர் பொன்முடி நேரம் குறிப்பிட்டால் விவாதிக்க தயார் - அண்ணாமலை

    தமிழ் மாடலா? திராவிட மாடலா? என்று அமைச்சர் பொன்முடி நேரத்தை குறிப்பிட்டால் விவாதிக்க தயார் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • 15:01 (IST) 24 Sep 2022
    கோவை கலெக்டர் எச்சரிக்கை

    கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில், வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.



  • 14:03 (IST) 24 Sep 2022
    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை

    கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்துகின்றனர்.



  • 13:30 (IST) 24 Sep 2022
    தவறான முறையில் பயிர்க்கடன் தள்ளுபடி

    அதிமுக ஆட்சியில் தவறான முறையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.



  • 13:11 (IST) 24 Sep 2022
    டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

    பைக்கில் ஜி.பி. முத்துவுடன் சாகச பயணம் செய்த டிடிஎஃப் வாசன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



  • 12:58 (IST) 24 Sep 2022
    கோவை சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு - மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனை

    கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனை.

    கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு

    தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை



  • 12:42 (IST) 24 Sep 2022
    டிடிஎஃப் வாசன் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு. ஜி.பி.முத்துவை அமர வைத்து வேகமாக பைக் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நடவடிக்கை

    ஏற்கனவே போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு



  • 12:40 (IST) 24 Sep 2022
    அன்புமணி ராமதாஸ் பேட்டி

    பாட்டாளிகளுக்கு அதிகளவு துணை நின்றவர் சிவந்தி ஆதித்தனார் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி



  • 12:39 (IST) 24 Sep 2022
    20 மாநிலங்களில் சிபிஐ சோதனை

    குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் தரவிறக்கம், பகிர்வு வழக்கு - 20 மாநிலங்களில் சிபிஐ சோதனை

    குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பான வழக்குகள்

    20 மாநிலங்களில், 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை



  • 11:57 (IST) 24 Sep 2022
    பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது -எல்.முருகன்

    பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி



  • 11:56 (IST) 24 Sep 2022
    எளிய மக்களின் கல்விக்காக பாடுபட்டவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

    எளிய மக்களின் கல்விக்காக பாடுபட்டவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவித்தவர். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு வீரவணக்கத்தை செலுத்துவோம் - திருமாவளவன்



  • 11:44 (IST) 24 Sep 2022
    மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் விளம்பர அரசியல் - எல்.முருகன்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை - எல்.முருகன்



  • 11:42 (IST) 24 Sep 2022
    தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் - முதல்வர்

    இயற்கையை காப்பது நம்முடைய இயல்பிலேயே உள்ளது வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும்

    தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 10:53 (IST) 24 Sep 2022
    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னை காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் . அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்



  • 10:52 (IST) 24 Sep 2022
    மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மகிழ மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்



  • 10:52 (IST) 24 Sep 2022
    சீமான் மரியாதை

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாள். சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சீமான் மரியாதை



  • 09:30 (IST) 24 Sep 2022
    புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா

    இந்து அறநிலையத் துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா. சென்னையில் இன்று காலை துவக்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு



  • 09:29 (IST) 24 Sep 2022
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

    ளுநருக்குப் பதில், பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை



  • 09:29 (IST) 24 Sep 2022
    தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் . தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் . ஆங்காங்கே பரவிவரும் டெங்கு, ஃப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சலையும் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என அறிக்கை



  • 09:28 (IST) 24 Sep 2022
    உள்ளூர் மக்களுடன் சிக்கிக் கொண்ட 40 பயணிகள்

    உத்தரகாண்ட்; நஜாங் தம்பா பகுதியில் நிலச்சரிவு காரணமாக தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை மூடல் . ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை பாதை மூடப்பட்டதால், உள்ளூர் மக்களுடன் சிக்கிக் கொண்ட 40 பயணிகள்



  • 09:28 (IST) 24 Sep 2022
    பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.1.70 கோடி

    மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 10 டன் போதைப்பொருள் பறிமுதல் . தூத்துக்குடி துறைமுகத்தில் பாப்பி சீட் என்ற போதைப் பொருட்கள் பறிமுதல் . மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்க . பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.1.70 கோடி



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment