Advertisment

Tamil News Today: ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்: டிரோன்கள் பறக்கத் தடை

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 17 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Chief Minister M.K. Stalin has been admitted to Apollo Hospital

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 392வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ..102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பா.ஜ.க மாநில செயலாளர் கைது

தமிழக பா.ஜ.க செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தி.நகரில் கைது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த புகாரில் எஸ்.ஜி.சூர்யா கைது. எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பா.ஜ.க குவிந்ததால் பரபரப்பு. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலைமறியல் போராட்டம்.

உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்

இன்று (ஜூன் 17) உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம். மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு,நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. இதனைத் தடுக்க முடியும என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 1994-ம் ஆண்டிலிருந்து உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:58 (IST) 17 Jun 2023
    ரஞ்சிதமே ஸ்டைலில் விழாவை நிறைவு செய்த நடிகர் விஜய்

    ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நிறைவு செய்த நடிகர் விஜய்! 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது!



  • 20:33 (IST) 17 Jun 2023
    ராமநாதபுரத்தில் எம்.பி.-யும், அமைச்சரும் வாக்குவாதம்

    ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது



  • 20:32 (IST) 17 Jun 2023
    குஜராத்தில் புயலின் சேதம் குறித்து அமித்ஷா ஆய்வு

    குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம்; சுமார் 234 விலங்குகள் உயிரிழப்பு என கூறியுள்ளார்.



  • 20:28 (IST) 17 Jun 2023
    பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும் - அண்ணாமலை

    சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.



  • 19:02 (IST) 17 Jun 2023
    டாஸ்மாக் மேற்பார்வையாளரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து

    கடலூர், பனையந்தூரில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளரை சஸ்பெண்ட் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மதுவை கூடுதல் விலைக்கு விற்றதாக, வெளியான செய்தியின் அடிப்படையில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் எந்த விசாரணையுமின்றி நடவடிக்கை எடுத்ததாகக் கூறி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது



  • 18:29 (IST) 17 Jun 2023
    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது



  • 18:28 (IST) 17 Jun 2023
    அதிமுக நிர்வாகி கைது; இ.பி.எஸ் கடும் கண்டனம்

    முதலமைச்சர் பொதுவெளியில் பேசியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக அதிமுக நிர்வாகி கவுதம்-ஐ கைது செய்வதா? என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • 18:15 (IST) 17 Jun 2023
    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது



  • 17:53 (IST) 17 Jun 2023
    மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி

    சென்னை, நீலாங்கரையில் பொதுத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவ - மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கினார். அப்போது சினிமாவை போல, அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு அழைப்பு விடுத்த மாணவி, தான் செலுத்தபோகும் முதல் ஓட்டு விஜய்க்கு தான் எனவும் சொன்னார். மாணவியின் அழைப்பை கடைசி வரை விஜய் கவனமுடன் கேட்டுக்கொண்டார்



  • 17:40 (IST) 17 Jun 2023
    கிரானைட் முறைகேடு – ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    கிரானைட் முறைகேடு தொடர்பாக 180 பேருக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 17:30 (IST) 17 Jun 2023
    பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்

    பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாயமா? என நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்



  • 17:15 (IST) 17 Jun 2023
    சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

    சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மகாபலிபுரத்தில் ஜி20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜி20 பிரதிநிதிகள் தங்குமிடம் உள்ளிட்டவை 'சிவப்பு மண்டலம்'-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது



  • 16:52 (IST) 17 Jun 2023
    ஹிஜாவு நிறுவன மோசடி; மேலும் 2 பேர் கைது

    ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோவிந்தராஜுலு, அவரது மனைவி சுஜாதா காந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். சுஜாதா காந்தா நிறுவனத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது



  • 16:41 (IST) 17 Jun 2023
    டெல்டா மாவட்டங்களை கார்பன் நியூட்ரல் மாவட்டமாக மாற்ற முதல்வர் உத்தரவு

    2030க்குள் கார்பன்-டை-ஆக்சைடு அளவை 40%-ஆக குறைக்க வேண்டும் என ஐபிசிசி குழு கூட்டத்தில் கூறியுள்ளது. தமிழகத்தில் 4 டெல்டா மாவட்டங்களை கார்பன் நியூட்ரல் மாவட்டமாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு வனப்பரப்பை 33%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.



  • 16:41 (IST) 17 Jun 2023
    பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து அமித்ஷா ஆய்வு

    குஜராத் மாநிலத்தில் பிபர்ஜாய் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம், குஜராத் முதலமைச்சருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். புயலால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது



  • 15:57 (IST) 17 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உயர்வு

    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 290 பேர் பலியான நிலையில், கட்டாக் மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்



  • 15:41 (IST) 17 Jun 2023
    சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம்

    சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி ஐஏஎஸ், தமிழக அச்சு - எழுதுபொருள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்



  • 15:11 (IST) 17 Jun 2023
    எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

    பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு பதிவிடப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தர்.



  • 14:15 (IST) 17 Jun 2023
    அடுத்த 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

    "தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.



  • 13:55 (IST) 17 Jun 2023
    நடிகர் விஜய் பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கருத்து!

    ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “நல்ல விஷயம்தானே சொல்லிருக்காரு” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 13:42 (IST) 17 Jun 2023
    'நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்': அன்புமணி ராமதாஸ்!

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

    புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.



  • 13:30 (IST) 17 Jun 2023
    அரசு தரப்பு விளக்கம்!

    மதுபானங்கள் பரிமாற வசதியாக சிறப்பு உரிமம் வழங்குவதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு வழக்கு தொடர்ந்த நிலையில், 'சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



  • 13:29 (IST) 17 Jun 2023
    அமைச்சர்கள் முதல்வரை சந்திப்பு!

    கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



  • 13:07 (IST) 17 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்!

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் கையெழுத்து வாங்கினர். அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளனர்.



  • 12:30 (IST) 17 Jun 2023
    நிதி நுட்பம் நகரம், நிதி நுட்ப கோபுரம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

    "சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில், நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 11:44 (IST) 17 Jun 2023
    மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ்: நடிகர் விஜய் பரிசு

    600/600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய்



  • 11:40 (IST) 17 Jun 2023
    விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய்

    “யாருக்கும் அறிவுரை கொடுக்க விரும்பவில்லை;

    உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருகிறது;

    குணத்தை இழக்கிறீர்கள் என்றால் அனைத்தையும் இழக்கிறீர்கள் என்று அர்த்தம்”

    - விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேச்சு



  • 11:05 (IST) 17 Jun 2023
    மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது வழங்கும் விழாவிற்கு புறப்படும் நடிகர் விஜய்

    நடிகர் விஜய் காரின் முன், இரு சக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்லும் ரசிகர்கள். ரசிகர்கள் படையுடன் விழா அரங்கை நோக்கி செல்லும் நடிகர் விஜய்யின் கார்.

    10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.



  • 11:04 (IST) 17 Jun 2023
    மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது வழங்கும் விழாவிற்கு புறப்படும் நடிகர் விஜய்

    நடிகர் விஜய் காரின் முன், இரு சக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்லும் ரசிகர்கள். ரசிகர்கள் படையுடன் விழா அரங்கை நோக்கி செல்லும் நடிகர் விஜய்யின் கார்.

    10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.



  • 10:28 (IST) 17 Jun 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

    ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கும், சவரன் ரூ,44,360க்கும் விற்பனை



  • 10:15 (IST) 17 Jun 2023
    நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம்

    டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

    டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கண்டனம்.



  • 10:13 (IST) 17 Jun 2023
    விஜய் கல்வி விருது - ரூ.25,000 உதவித்தொகை

    10,12-ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ வழங்க உள்ளார் நடிகர் விஜய். முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.25,000, இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.15,000, மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ,10,000 காசோலையாக வழங்கப்படுகிறது.



  • 09:26 (IST) 17 Jun 2023
    கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது

    எந்த ஒரு நிறுவனமோ, தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை உள்ளே இறக்க கூடாது என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு. மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க உத்தரவு.



  • 09:04 (IST) 17 Jun 2023
    சென்னையில் வெயிலின் தாக்கம் குறையு

    சென்னையை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு



  • 08:45 (IST) 17 Jun 2023
    ஆனி மாத அமாவாசை- முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    இன்று ஆனி மாத அமாவாசை- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடற்கரையில் குவிந்த மக்கள்

    அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, எள், பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம்



  • 08:11 (IST) 17 Jun 2023
    மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார். சென்னை நீலாங்கரை RK Convention மையத்தில் இன்று நடக்கும் விழாவில் ஊக்கத்தொகை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றுகிறார் நடிகர் விஜய்.



  • 08:08 (IST) 17 Jun 2023
    எஸ்.ஜி.சூர்யா கைது - அண்ணாமலை கண்டனம்

    தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு கட்சி தலைவர் அண்ணாமலை கண்டனம். திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியதால் சூர்யா கைது. ஒருவரின் பேச்சுரிமையை குறைக்க அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது தவறு - அண்ணாமலை ட்விட்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment