Petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தவிக்கும் நகரம்
சென்னையில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் தண்ணீரில் சூழ்ந்துள்ளது. சுரங்கப்பாதையில் செல்லும் பேருந்துகள் தண்ணீரில் சிக்கிக் கொண்டுள்ளது. மேலும் மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் தண்ணீர் வடியாமல் தொடர்ந்து இருப்பதால் மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானின் பிறந்த நாள்
நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாள் இன்று. இவர் இந்தி சினிமாவின் “ கிங் கான்” என்று அழைக்கப்படுகிறார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். 1992 முதல் தற்போதுவரை தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் மணிரத்தனம் இயக்கத்தில் நடித்த ’உயிரே’ திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் நாளை (நவ.3) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இதனை தெரிவித்தார்.
சென்னை அயனாவரம் மார்க்கெட் ரோட்டில் பிரியாணி கடை நடத்திவந்த நாகூர் கனி (33) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை போரூரில் நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நெதன்யாகு மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
85 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் நெதன்யாகு கட்சிக்கு 65 இடங்கள் கிடைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவுக்கு சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மணிப்பூர், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மம்தா பானர்ஜியை பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். மம்தா பானர்ஜி கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு முன் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். சிறப்பாக சொல்ல வேண்டுமானல், கடந்த முறை கலைஞர் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலக்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களைப் பெருமைப்படுத்தியது. கலைஞரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராக இருக்கக் கூடிய இல. கணேசன் இல்லத்திலே நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில், என்னுடைய இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து என்னை சந்தித்திருக்கிறார். அதே நேரத்தில் நீங்கள் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வர வேண்டும் என்னை அழைப்பு விடுத்திருக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
இது மரியாதை சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு இல்லை. தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகத்தான் சந்திக்க வந்தார்கள். வேறு எதுவும் இல்லை.” என்று கூறினார்.
திருவள்ளூர் புழல் ஏரியில் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியில் உபரிநீர் திறக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாகக் காரணங்களுக்காக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் 01.11.2022 முதல் நிறுத்தப்படுகிறது தற்போதுள்ள 4 சக்கர வாகனங்கள் பாஸ் காலாவதி தேதி ஆகும் வரை அனுமதிக்கப்படும். மேலும், புதிய பாஸ் மற்றும் பாஸ்களை புதுப்பித்தல்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து வங்கதேசத்துக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேச அணியின் வெற்றிக்கு 54 பந்தில் 85 ரன்கள் தேவைப்படுகிறது
டி20 உலகக்கோப்பையில், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது
மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார், பெஞ்சமின் நெதன்யாகு. 85 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் நெதன்யாகு தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உபரிநீரை திறந்து வைத்தார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் புழல் ஏரியில் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்க தயார் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் காவல்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணிக்கு அனுமதி கேட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையா? என ஆர்.எஸ்.எஸ். தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மின் வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு 185 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் விராட்கோலி, கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தனர்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபினுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர்களின் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இலங்கை முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனேவின் சாதனையை கோலி முறியடித்தார்.
ஆளுநரை திரும்பப் பெறுக என்னும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ; மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார்; திருக்குறளை விமர்சிக்கிறார். திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில், அடிலெய்டில் நடைபெறும் இந்தியா – வங்கதேசம் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் ஃபீல்டிங் தேர்வு செய்தது
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் ஆய்வு
மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பருவமழைக்கான மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் பருவமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழப்பு
மக்களை தங்கவைப்பதற்காக 5,093 முகாம்கள் ஏற்பாடு.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அமைச்சர்களும் களத்தில் உள்ளனர்- பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
ஆவின் 'டிலைட்' என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் பாக்கெட் அறிமுகம்
குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்
500 மி.லி. பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 30க்கு விற்பனை
தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் 'விதை' திட்டம்
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நடமாடும் பேருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
ரிப்பன் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு பங்கேற்பு
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்பு
மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை
செம்பரம்பாக்கம் ஏரியில் பிற்பகல் 3 மணிக்கு முதற்கட்டமாக 100 கனஅடி உபரிநீர் திறப்பு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 1,180 கன அடியாக உயர்வு .
திருவள்ளூர், புழல் ஏரிக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு. புழல் ஏரியில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு.
தொடர் கனமழையால் ஆவடி காவல் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் . காவல் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் நாசர் . மழைநீரை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைப்பு *தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் *இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தொடர் மழை-கே.கே.நகர் பகுதியில் உள்ள ராஜ மன்னார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு . கடந்த ஆண்டு பருவமழையின் போது மழைநீர் தேங்கியதால் மூழ்கிய ராஜ மன்னார் சாலை. இம்முறை 2 நாட்கள் கனமழை பெய்த போதும் முழுவதும் வடிந்த மழைநீர்
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு. திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு
வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடல்
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு