Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெ. மரணம் தொடர்பாக ஆணைய தலைவர் ஆறுமுகசாமி கேள்வி
சர்க்கரை 228 மி.கி, பி.பி. 160 பாதிப்பு இருந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா ?” -ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கிறிஸ்துமஸ் விழா
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா. சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு. விவசாயி கதையை சொல்லி எடப்பாடி பழனிசாமி பேச்சு
கரூரில் அதிமுக நிர்வாகி சிவராஜ் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அரசு பேருந்துகளை முற்றுகையிட்டு அதிமுகவினர் செய்த போராட்டம் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுமுறையை அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜன.11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார்.
நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது தவறான ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் குறித்து முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்புரிந்த எவரும் தப்பிவிடக் கூடாது எனவும் சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி கொண்டுவரப்பட்ட ₨5.35 கோடி மதிப்புள்ள போதை பவுடர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து 2.19 கிலோ எடை கொண்ட மேத்தோ குயிலோன், ஹெராயின் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கபோவதாக எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளன.
“அன்று எம்.ஜி.ஆரிடமும் இதேபோன்று கேட்டார்கள். நாம் அவரின் நகதூசிக்கு கூட வரமாட்டோம். இந்த சாமானியனிடமும் பில் கேட்கிறார்கள்.
என் வருமானம், நான் வாங்கிய பொருள்களின் பில்-ஐ வெளியிடுவேன். அதேபோல் முதலமைச்சர், அவரது குடும்பம், ஊழல் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள், பினாமிகள் ஆகிய தகவலையும் வெளியிடுவேன்” எனத் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2023 ஜன.4ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
“பிரதமர் நரேந்திர மோடி எங்கே ஓ.பி.எஸ் என்று அழைத்தார். தற்போதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அடிவயிறு கலங்குகிறது. இனி எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து காணாமல் போவார்” என ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “காப்புக் காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அர்சானை பிறப்பித்திருப்பதற்கு கடும் கண்டனத்துக்குரியது. சுற்றுச்சூழலைக் காக்க்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல, அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க-வினரின் உண்மை முகம் இதுதான்” என்று விமசித்துள்ளார்.
காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 20, 2022
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு!
சென்னை, நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: “எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் சொந்த கார் இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் சொன்னார். எந்த கார் வைத்துள்ளார் என்பதை சொல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரி 4ம் தேதி காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது!
பரந்தூரில் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப்பின் பேட்டி அளித்தனர். விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள நீரோடைகளை மறித்தால் பெரும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும். விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், முற்றிலும் விளை நிலங்கள் என்று தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு பள்ளியின் ஒப்பந்த பெண் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி ஆசிரியை தரகுறைவாக பேசியதால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் வந்தால் ஏற்படும் பாதிப்புகளை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தோம்; விமான நிலைய கட்டுமானத்தால் ஓடை தடுக்கப்பட்டால் 13 கிராமங்கள் பாதிக்கப்படும். அரசின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்து சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாக பதவியிறக்கம் செய்து, அவர்களுக்கான ஊதியத்தை குறைத்த விவகாரத்தில், பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேர் நேரில் ஆஜரானார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடியை கொடுத்துள்ளேன்” என்று சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்
இதற்கு முன் ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.60 கோடி கொடுத்ததாக டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது
அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களை தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
TNPSC ஆண்டு தேர்வு அட்டவணை கடந்த சில நாட்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வுகள் நவம்பரில் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2023ம் ஆண்டு நவம்பரில் குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணை அடுத்தாண்டு ஆகஸ்டில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது
இந்தியாவில் 2021-22ம் ஆண்டில், 82 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில், தமிழ்நாட்டில் 11 யானைகள் உயிரிழந்துள்ளன
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல்
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறும் – இ.பி.எஸ் அறிவிப்பு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு
நாளை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஈபிஎஸ் அறிவிப்பு
ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை.
நுரையீரல் செயல்பாடு, அறுவை சிகிச்சைக்கான தேவையை பரிசீலித்தே சிகிச்சை.
தொற்று பாதிப்பு, நோய் பாதிப்பின் தன்மையை பரிசீலனை செய்தே அறுவை சிகிச்சை நடந்தது – அமலோற்பவநாதன்
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமியின் கருத்துக்கு மருத்துவர் அமலோற்பவநாதன் பதில்
36 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்து உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்
லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு .
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
குண்டர் தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் – உயர் நீதிமன்றம்
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா என ராஜஸ்தான் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சுக்கு மாநிலங்களவையில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக தமிழ்சங்கத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்த கோரிய பொதுநல வழக்கில் தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மூடுபனி காரணமாக அரியானாவின் அக்ரோஹா என்ற பகுதியில் அம்மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் விபத்துக்குள்ளானது. அவர் காயமின்றி தப்பிய நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
சென்னையில் பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கில், குப்பை லாரிகளை இயக்கும் நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22ம் தேதி வரை செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு மசினகுடி வனப்பகுதியில் சுற்றித் திரியும் PM2 யானையை விரட்ட முதுமலை யானைகள் காப்பகத்தில் இருந்து வந்த விஜய், சுஜய் என்ற கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன.
தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 23 மற்றும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22ம் தேதி வரை செல்ல வேண்டாம் – இந்திய வானிலை மையம்
சென்னை, லயோலா கல்லூரியில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கிருஸ்துமஸ் விழா
ஜம்மு காஷ்மீர் : ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் என்கவுண்டரில் லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் 125 கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள் திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக நடவடிக்கை