Advertisment

Tamil News Today: செந்தில் பாலாஜி வழக்கு- மேல் முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Balaji Case

Senthil Balaji Case

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு -  மேல் முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Advertisment

ஆட்கொணர்வு மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில் இன்று விசாரணை துவக்கம்

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 429-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:27 (IST) 25 Jul 2023
    2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - பொன்முடி

    தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 22:21 (IST) 25 Jul 2023
    கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

    கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.



  • 22:19 (IST) 25 Jul 2023
    தெலங்கானாவில் கனமழை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை

    தெலங்கானாவில் அநேக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 22:15 (IST) 25 Jul 2023
    இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆசிய கோப்பையில் முதல் 2 போட்டிகளில் விளையாடத் தடை

    வங்கதேச தொடரில் ஸ்டெம்பை சேதப்படுத்தி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆசிய கோப்பையில் முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.



  • 22:05 (IST) 25 Jul 2023
    மலக்குழியை சுத்தம்செய்த போது 339 பேர் உயிரிழப்பு - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடை மற்றும் மலக்குழியை சுத்தம் செய்தபோது 339 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:32 (IST) 25 Jul 2023
    மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது? - ஐகோர்ட் கேள்வி

    மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது? மது அருந்துவோரே பாட்டிலை கவனமாகக் கையாளும்போது சாதாரண மக்கள் பாட்டிலை கையாள முடியாதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதற்கு பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



  • 21:29 (IST) 25 Jul 2023
    பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்ற மக்களிடமிருந்து ஆதரவு இல்லை - ஆவின் நிறுவனம்

    பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



  • 21:26 (IST) 25 Jul 2023
    மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு பணிகளை நிரப்ப தமிழக அரசு அரசாணை

    மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 21:06 (IST) 25 Jul 2023
    டெல்லி குறித்து மத்திய அரசு அவசரச் சட்டம்; ராஜ்யசபாவில் கூட்டணி கட்சிகள் ஆதரவு தேவை

    டெல்லியில் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என ஒன்றிய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது.

    இச்சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இதற்கான சட்ட மசோதாவை மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது,

    மாநிலங்களவையில் இது நிறைவேற NDA அரசுக்கு பிஜு ஜனதா, YSR காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழல் உள்ளது.



  • 21:01 (IST) 25 Jul 2023
    மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ. 908 கோடி ஊழல் வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ. 908 கோடி ஊழல் நடந்ததாக பதிந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

    லஞ்சஒழிப்புத்துறை பதிந்த வழக்கை ரத்து

    செய்யக் கோரி சவுத் இந்தியா கார்ப்பரேஷன்

    நிறுவனம் அளித்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 20:12 (IST) 25 Jul 2023
    திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்று ஓராண்டை நிறைவு; மோடி வாழ்த்து

    குடியரசுத் தலைவராக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.



  • 19:58 (IST) 25 Jul 2023
    பெண் பத்திரிகையாளர் தொடர்பான வழக்கு; எஸ்.வி. சேகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



  • 19:55 (IST) 25 Jul 2023
    5ஆவது சுற்றை தொடங்கிய சந்திரயான்

    நான்காவது சுற்றை முடித்து, 5வது சுற்றை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது சந்திரயான் - 3 விண்கலம். பூமிக்கு அருகே 236 கி.மீ. தூரத்திலும், பூமிக்கு அப்பால் 1,27,609 கி.மீ. தூரத்திலும் சுற்றி வருகிறது.

    ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புவியில் இருந்து சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்ற உந்துவிசை அளிக்கப்பட உள்ளது.



  • 19:52 (IST) 25 Jul 2023
    பீடி இலைக்கு ஜிஎஸ்டி வாபஸ்? மத்திய அரசு விளக்கம்

    தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில், பீடி சுற்ற பயன்படுத்தப்படும் தெண்டு இலைகள் மீதான ஜி.எஸ்.டி-யை (18%) திரும்ப பெறுவதற்கான பரிசீலனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிலுவையில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிர் செய்யப்படும் தெண்டு இலைகள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.



  • 19:38 (IST) 25 Jul 2023
    மக்கள் தொகையில் சீனா முதலிடம்

    ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி, மக்கள் தொகையில் சீனாவே முன்னிலையில் தொடர்கிறது.

    இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது. ஜூலை 1ம் தேதி படி, சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரமாக உள்ளது.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் பதிலளித்தார்.



  • 19:37 (IST) 25 Jul 2023
    தெலங்கானா: சிமெண்ட் ஆலையில் லிஃப்ட் அறுந்து 5 பேர் உயிரிழப்பு

    தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் சிமெண்ட் ஆலையில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் மை ஹோம் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் 4வது யூனிட் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்காக உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சிமெண்ட் ஆலையில் 500 அடி உயரத்தில் கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது.

    இதில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.



  • 19:35 (IST) 25 Jul 2023
    வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

    வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 19:34 (IST) 25 Jul 2023
    செந்தில் பாலாஜிக்கு சிறப்பு சலுகை; ரகுபதி விளக்கம்

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை; முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.



  • 19:30 (IST) 25 Jul 2023
    சென்னை வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்.

    கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை வந்தது. தற்போது மீண்டும் குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் வழியில் சென்னையில் எரிபொருள் நிரப்பிச் சென்றது.



  • 19:05 (IST) 25 Jul 2023
    ஹர்மன்ப்ரீத் கவுர் 2 போட்டிகளில் ஆடத் தடை

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை 2 போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 18:48 (IST) 25 Jul 2023
    -முதலமைச்சர் ஸ்டாலின் உரை

    முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா "விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்த பிள்ளையை பார்த்து சிலர் நினைப்பது உண்டு" "விளையாட்டு வீரர்களோடு எப்போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்" "விளையாட்டு துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது"



  • 18:47 (IST) 25 Jul 2023
    லிப்டுக்குள் சிக்கித்தவித்த பெண் வழக்கறிஞர்கள்

    தேனி மாவட்டம் பெரும்பாவூர் நீதிமன்ற கட்டிடத்தில் திடீரென பழுதாகி நின்ற லிப்ட் லிப்டுக்குள் சிக்கித்தவித்த பெண் வழக்கறிஞர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர்



  • 18:02 (IST) 25 Jul 2023
    மண்டபம் மீனவர்களுக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    இலங்கை கடற்படை கைது செய்த மண்டபம் மீனவர்களுக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு



  • 18:01 (IST) 25 Jul 2023
    மணிப்பூரில் பிராட்பேண்ட் சேவைகள் நிபந்தனைகளுடன் மீண்டும் தொடக்கம்

    மணிப்பூர் கலவரத்தால் முடக்கப்பட்ட பிராட்பேண்ட் சேவைகள் நிபந்தனைகளுடன் மீண்டும் தொடக்கம் மொபைல் டேட்டா சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு அறிவிப்பு



  • 18:01 (IST) 25 Jul 2023
    கோவை டாடாபாத் பகுதியில் மணிப்பூர் மக்கள் போராட்டம்

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் கோவை டாடாபாத் பகுதியில் போராட்டம். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்



  • 17:58 (IST) 25 Jul 2023
    தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு ₹60 லட்சம் ஊக்கத்தொகை

    சென்னை: தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு ₹60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!



  • 17:58 (IST) 25 Jul 2023
    பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பாஜக கூட்டணி கட்சி

    பாஜக கூட்டணி ஆளும் நாகலாந்து மாநிலத்தின் எரிசக்தி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கென்யே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை எங்கள் மக்கள் ஏற்கவில்லை; அச்சட்டம் போன்ற யோசனைக்கு கூட எதிராக உள்ளார்கள் என கூறியுள்ளார்.



  • 17:21 (IST) 25 Jul 2023
    முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள, முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழாவில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்துள்ளனர். முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்க உள்ளார்!



  • 17:05 (IST) 25 Jul 2023
    அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு; தாசில்தார் ஆஜராக உத்தரவு

    2006-2011 திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் பூத்துறையில் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் 8ம் தேதி தாசில்தார் குமாரபாலன் ஆஜராக வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:56 (IST) 25 Jul 2023
    கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

    கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது



  • 16:47 (IST) 25 Jul 2023
    இரட்டை கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து

    மதுரை மாவட்டம் குன்னத்தூரில் 2020 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது



  • 16:34 (IST) 25 Jul 2023
    திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்

    திண்டுக்கல் அருகே பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்



  • 16:23 (IST) 25 Jul 2023
    இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம்

    இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது. ஜூலை 1ம் தேதி படி, சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரமாக உள்ளது என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது



  • 16:08 (IST) 25 Jul 2023
    கர்நாடகாவில் கனமழையால் இதுவரை 7 பேர் மரணம்

    கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லை மாவட்டமான பெலகாவியில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது



  • 15:54 (IST) 25 Jul 2023
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்; 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்



  • 15:34 (IST) 25 Jul 2023
    மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

    பழங்குடியினர் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச முயன்ற போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்



  • 15:33 (IST) 25 Jul 2023
    மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

    பழங்குடியினர் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச முயன்ற போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்



  • 15:12 (IST) 25 Jul 2023
    மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • 15:05 (IST) 25 Jul 2023
    சந்திரயான் - 3 கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி

    சந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி - இஸ்ரோ

    தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தகவல்!



  • 14:40 (IST) 25 Jul 2023
    நீதிபதி நிஷா பானு அறிவிப்பு

    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் - ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு அறிவிப்பு



  • 14:32 (IST) 25 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது

    அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

    நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரிக்கிறது

    செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை

    செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர்



  • 14:31 (IST) 25 Jul 2023
    தொடர் அமளியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

    மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மாநிலங்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமளிக்கு மத்தியில் தொடரும் அவையின் அலுவல் பணி தொடர்கிறது.



  • 14:27 (IST) 25 Jul 2023
    மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய IRCTC

    ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான IRCTC திடீரென முடங்கிய நிலையில், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.



  • 14:18 (IST) 25 Jul 2023
    கனமழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 14:17 (IST) 25 Jul 2023
    மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவிக்க வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்; இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்



  • 14:15 (IST) 25 Jul 2023
    மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

    மணிப்பூர் விவகாரம் குறித்து 267வது விதியின்கீழ் விவாதிக்க பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;

    நாங்கள் மணிப்பூர் பிரச்னை குறித்து பேசுகிறோம்; ஆனால், பிரதமர் நரேந்திரமோடி கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்- மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்



  • 14:14 (IST) 25 Jul 2023
    நாங்கள் இந்தியா கூட்டணிதான்- ராகுல்காந்தி

    நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி;

    நாங்கள் இந்தியா கூட்டணிதான்; மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்;

    மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்; இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்-ராகுல்காந்தி



  • 13:30 (IST) 25 Jul 2023
    மோடிக்கு, மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்

    பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே



  • 13:29 (IST) 25 Jul 2023
    தமிழ்நாடு தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது

    தொழில்நுட்பம்தான் இந்த உலகை வெல்வதற்கான சரியான கருவி; தமிழ்நாடு தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது.. -UMAGINE மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக பேச்சு.



  • 13:29 (IST) 25 Jul 2023
    காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    கர்நாடகா கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து மொத்தம் 17,688 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.



  • 13:29 (IST) 25 Jul 2023
    பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

    அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த புகாரில், தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில், 2வது முறையாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.



  • 13:28 (IST) 25 Jul 2023
    விழுப்புரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர்.



  • 13:28 (IST) 25 Jul 2023
    ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள்

    IRCTC இணையதளம் முடங்கியதை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.



  • 13:28 (IST) 25 Jul 2023
    கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியது

    எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியது.



  • 13:28 (IST) 25 Jul 2023
    பிரதமருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது - ஷோபா ஓசா

    கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் கூட 'இந்தியா' இருப்பதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார், ஆனால் பல திட்டங்களுக்கு அவர் இந்தியாவின் பெயரை சூட்டினார்.

    எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளதால் பிரதமருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது - காங். மூத்த தலைவர் ஷோபா ஓசா



  • 13:27 (IST) 25 Jul 2023
    கடந்த 5 ஆண்டுகளில் 3,867 வழக்குகள் பதிவு

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 3,867 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.



  • 13:03 (IST) 25 Jul 2023
    மணிப்பூர் சம்பவம் - விழுப்புரம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

    விழுப்புரம் எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்



  • 13:01 (IST) 25 Jul 2023
    நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

    தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

    2வது முறையாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

    கடந்த ஜூன் 24-ம் தேதி சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் சோதனை

    அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார்



  • 12:52 (IST) 25 Jul 2023
    காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து மொத்தம் 17,688 கன அடி நீர் தமிழகத்திற்கு திறப்பு



  • 12:46 (IST) 25 Jul 2023
    'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி கடும் தாக்கு

    இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து பிரதமர் மோடி கடும் தாக்கு

    பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது

    பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு



  • 12:33 (IST) 25 Jul 2023
    மாநிலங்களவை தொடங்கியது

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மாநிலங்களவை தொடங்கியது

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

    மாநிலங்களவையில் தொடர் அமளிக்கிடையே நடைபெற்று வரும் கேள்வி நேரம்



  • 12:32 (IST) 25 Jul 2023
    ஆகஸ்ட் 18 மீனவ சங்கங்களின் மாநில மாநாடு - ஸ்டாலின் பங்கேற்பு

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் மீனவ சங்கங்களின் மாநில மாநாடு

    மீனவ சங்க மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    மீனவ சங்கங்களின் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்



  • 12:18 (IST) 25 Jul 2023
    ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

    ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடரின் விலையை உயர்த்தியது ஆவின் நிர்வாகம்

    ஒரு கிலோ பன்னீர் ரூ.450க்கு விற்க்கப்பட்ட நிலையில் ரூ.550க்கு விற்பனை

    பாதாம் பவுடர் 200கிராம் ரூ.100க்கு விற்க்கப்பட்ட நிலையில் ரூ.120க்கு விற்பனை



  • 12:16 (IST) 25 Jul 2023
    மணிப்பூர் சம்பவம்: சி.பி.ஐ கட்சி ரயில் மறியல் போராட்டம்

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்

    தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்



  • 12:14 (IST) 25 Jul 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைவு; ஒரு சவரன் ரூ. 44,280க்கு விற்பனை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைவு

    தங்கம் ஒரு கிராம் ரூ. 5,535க்கும், ஒரு சவரன் ரூ. 44,280க்கும் விற்பனை



  • 11:52 (IST) 25 Jul 2023
    நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு

    மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்



  • 11:52 (IST) 25 Jul 2023
    இரு அவைகளும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - இரு அவைகளும் ஒத்திவைப்பு மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைப்பு



  • 11:51 (IST) 25 Jul 2023
    'கக்கன்' திரைப்படப் பாடலை ஸ்டாலின் வெளியிட்டார்

    வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் பாடல் வெளியீடு பாடல் மற்றும் முன்னோட்ட காட்சியை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் நேர்மைக்கு பெயர் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் கக்கன்

    முதல் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார் கக்கன்

    காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார் கக்கன்



  • 11:00 (IST) 25 Jul 2023
    குரோம்பேட்டையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

    சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நடு ரோட்டில் முழுவதுமாக எரிந்து தீக்கிரையான BMW கார் ஓட்டுநர் உடனடியாக வெளியே குதித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்



  • 10:24 (IST) 25 Jul 2023
    சென்னை விமானநிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்

    சென்னை விமானநிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் . சென்னையில் இருந்து அபுதாபி புறப்படும் விமானம் குறித்து முறையான அறிவிப்பு இல்லை. விமானநிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமான பயணிகள் பயணிகளை சமாதானம் செய்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள்



  • 10:17 (IST) 25 Jul 2023
    மற்ற காய்கறி விலை குறைந்தது

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி தவிர்த்து மற்ற காய்கறி விலை குறைந்தது வரத்து அதிகரிப்பால் மற்ற காய்கறிகளின் விலை குறைந்தாலும் தக்காளி விலை மீண்டும் உயர்வு தக்காளி விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.100ஐ எட்டியது சில்லறை விற்பனையில் மீண்டும் தக்காளி விலை 120 ரூபாய் வரை விற்பனை கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்ததால் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வு



  • 10:13 (IST) 25 Jul 2023
    கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

    கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் . எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி



  • 10:12 (IST) 25 Jul 2023
    கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

    கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி



  • 09:47 (IST) 25 Jul 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி



  • 09:38 (IST) 25 Jul 2023
    லி நிவாரண மாத்திரையை, போதைக்காக விற்பனை செய்தவர் கைது

    ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியில் வலி நிவாரண மாத்திரையை, போதைக்காக விற்பனை செய்து வந்த ஸ்ரீநாத் (19) கைது; தலைமறைவாக உள்ள ஹரிஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து 10 Tapentadol மாத்திரை அட்டைகள் பறிமுதல்.



  • 09:25 (IST) 25 Jul 2023
    அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

    வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • 09:24 (IST) 25 Jul 2023
    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.



  • 08:10 (IST) 25 Jul 2023
    15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர்,அரியலூர்,பெரம்பலூர்,நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 08:08 (IST) 25 Jul 2023
    தக்காளி விலை

    சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100க்கு விற்பனை நேற்று ரூ. 85க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 15 உயர்வு .



  • 08:06 (IST) 25 Jul 2023
    தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

    இலங்கை, நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தது இலங்கை கடற்படை 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டகாசம்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment