Advertisment

Tamil News Highlights: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 20 July 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
செந்தில் பாலாஜி வழக்கு

செந்தில் பாலாஜி வழக்கு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 425-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உரிமைத் தொகை விண்ணப்ப விநியோகம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இன்று முதல் விண்ணப்பம், டோக்கன் வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடு தேடிச் சென்று நியாய விலைக் கடை பணியாளர்கள் விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட உள்ளனர். வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு முகாம்களிலேயே வங்கிக் கணக்கு ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம். அனைத்தையும் விவாதிக்க தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:17 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது



  • 21:48 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ; இதுவரை 4 பேர் கைது

    மணிப்பூர் கொடூரம் தொடர்பாக இதுவரை மொத்தம், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது



  • 21:14 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ; மேலும் ஒருவர் கைது

    மணிப்பூரில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக நடக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியான ஒரு நாள் கழித்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் என் பிரேன் சிங் கூறினார். முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரேம் ஹெரோடாஸ் மெய்டே கைது செய்யப்பட்டார், மற்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.



  • 20:37 (IST) 20 Jul 2023
    வேலூரில் பாம்பு கடித்து ஒருவர் மரணம்; சாலை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

    வேலூர், ஆட்டுக்காரன்துரையில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலைகள் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவை இருந்தும் மக்கள் உபயோகிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்



  • 20:07 (IST) 20 Jul 2023
    ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு: அமர்வு அறிவிப்பு

    அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பு ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரிக்க அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பி.ஆர் கவாய் மற்றும் பி.கே மிஸ்ரா அமர்வு விசாரிக்க உள்ளது



  • 19:49 (IST) 20 Jul 2023
    நடுவானில் விமானத்தில் பாலியல் தொல்லை புகார் – காரைக்குடி இளைஞர் கைது

    நடுவானில் விமானத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயணி புகார் அளித்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 19:32 (IST) 20 Jul 2023
    2வது டெஸ்ட்; டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு

    இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது



  • 19:10 (IST) 20 Jul 2023
    ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி - கோப்பை அறிமுகம்

    சென்னை, மெரினா கடற்கரையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். போட்டிகள் ஆக. 3 முதல் 12 வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது



  • 18:48 (IST) 20 Jul 2023
    தமிழ் மண்ணெடுத்து தமிழ் தாய்க்கு சிலை

    வரும் 28 -ஆம் தேதி 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்குகிறார்.

    இந்தப் பயணத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் மண் சேகரிக்கப்பட்டு தமிழ்தாய்க்கு சிலை அமைக்கப்பட உள்ளது.



  • 18:43 (IST) 20 Jul 2023
    நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    கடும் அமளி காரணமாக இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • 18:29 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வீடியோ - முக்கிய குற்றவாளி கைது

    மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக துனபுறுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் 77 நாள்களுக்கு பின்னர் முக்கிய குற்றவாளி ஹீராதாஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



  • 18:29 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வன்முறை: கடும் தண்டனை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

    பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

    இவை அனைத்திற்கும் மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க உளவியல் கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:22 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வன்கொடுமை: ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

    மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலம் மற்றும் இந்திய அரசின் கடமை என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



  • 18:01 (IST) 20 Jul 2023
    மராட்டிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை உயர்வு

    மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சம்பவ இடத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.



  • 17:32 (IST) 20 Jul 2023
    மு.க. ஸ்டாலினுக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    அதில், “தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில்5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொண்டனர்.

    சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகள் தொடர்கின்றது. 3.50லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் பல இடங்களில் முளைப்பதற்கு கூட தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

    சில இடங்களில் தண்ணீர் பாய்ந்து உரம் இடுவதற்கு வழியில்லாமல் கருக தொடங்கி இருக்கிறது. இழப்பிற்கு முழு பொறுப்பேற்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 16:48 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை: தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணை

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது; வன்கொடுமை சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மணிப்பூர் டி.ஜி.பி.-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.



  • 15:55 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் கலவரம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

    “மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; 3 மாதங்களுக்கும் மேலாக ச்ட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏறுக்கொள்ள முடியாது; அங்கு அமைதியை மீட்டெடுக்கவும் பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 15:39 (IST) 20 Jul 2023
    நிலவை நெருங்கும் சந்திரயான் 3 வின்கலம்

    சந்திரயான் 3 வின்கலத்தின் 4வது சுற்றுப்பாதையை உயர்த்தும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அடுத்த சுற்றுக்கு உயர்த்தும் பணி ஜூலை 25-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.



  • 15:33 (IST) 20 Jul 2023
    லஞ்ச ஒழிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் லஞ்ச ஒழிப்பு வழக்கில் இருந்து வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி திலகம் உத்தரவிட்டார்.



  • 15:19 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வன்முறை: முதல்வர் பைரன் சிங் வேதனை!

    "மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, மணிப்பூர் கலவரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.



  • 15:08 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க நோட்டீஸ்: திருச்சி சிவா எம்.பி!

    'மணிப்பூர் விவகாரம் மற்றும் தமிழக ஆளுநர் தொடர்பாக விவாதிக்க நோட்டீஸ் அளித்து இருந்தோம். பொது சிவில் சட்டம் தொடர்பாக அவையில் எதிர்ப்பு தெரிவித்தோம்' என்று திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.



  • 14:59 (IST) 20 Jul 2023
    சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் விடுவிப்பு

    வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஸ்ரீவில்லிப்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அமைச்சரின் மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:47 (IST) 20 Jul 2023
    'மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துங்கள்': தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ட்வீட்

    "மணிப்பூரில் பெண்களை மானபங்கம் செய்து நிர்வாணமாக அணிவகுத்து நடத்திய வீடியோவால் தேசமே வெட்கமடைந்துள்ளது. மனசாட்சியே இல்லாத விஸ்வகுரு என்று அழைக்கப்படும் ஒருவர், பல மாதங்கள் வெட்கமற்ற மௌனத்துக்குப் பிறகு 36 வினாடிகள் மட்டுமே பேசுகிறார். உச்சநீதி மன்றம் அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது.

    பிரதமரே, உங்கள் இதயம் நாட்டுக்காக துடிக்கவில்லையா?. தேசமும் வரலாறும் உங்களை மன்னிக்காது. மணிப்பூரில் உங்கள் கட்சியின் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள். ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துங்கள். வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

    உங்களின் வெளிநாட்டுப் பயணங்கள், ஆடம்பரமான உடைகள், பதவியேற்பு விழாக்கள் மற்றும் தேர்தல் பேச்சுக்கள் போன்றவைகள் இப்போதைக்கு தேவையில்லை. அவை எப்போதும் காத்திருக்கும்." என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



  • 14:37 (IST) 20 Jul 2023
    சசிகலா அறிக்கை!

    மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:34 (IST) 20 Jul 2023
    இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • 14:27 (IST) 20 Jul 2023
    2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:20 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் கலவரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

    மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

    மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளை தப்பவிட மாட்டோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.



  • 14:18 (IST) 20 Jul 2023
    'பால் உற்பத்தி அதிகரிப்பு': அமைச்சர் மனோ தங்கராஜ்

    'ஆவினில் 4 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. நிர்வாக நடவடிக்கையாக 2.40 லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. பாலின் தரம் பொருத்து உடனடியாக பாலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மானியம் மற்றும் வங்கி கடன் மூலமாக 2 லட்சம் கறவை மாடுகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.



  • 14:06 (IST) 20 Jul 2023
    டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்!

    “மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது;

    மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.



  • 14:05 (IST) 20 Jul 2023
    'நெஞ்சு பதைபதைக்கிறது': ஓ.பி.எஸ் ட்வீட்!

    "மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள்மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 14:00 (IST) 20 Jul 2023
    'கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்தது': ஸ்டாலின் ட்வீட்!

    "மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்தது. வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 14:00 (IST) 20 Jul 2023
    'கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்தது': ஸ்டாலின் ட்வீட்!

    "மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்தது. வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 13:38 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வன்முறை: "இந்தியா" கூட்டணி கட்சி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்!

    மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகி வரும் நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு "இந்தியா" கூட்டணி கட்சி பிரதிநிதிகள் செய்ய திட்டம்.

    ஏற்கனவே ராகுல் காந்தி மணிப்பூர் சென்று மக்களை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் செல்கிறது

    மணிப்பூரில் வன்முறை 2 மாதத்திற்கும் மேலாக நீடித்து வருவது குறிப்பித்தக்கது.



  • 13:38 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் வன்முறை: "இந்தியா" கூட்டணி கட்சி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்!

    மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகி வரும் நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு "இந்தியா" கூட்டணி கட்சி பிரதிநிதிகள் செய்ய திட்டம்.

    ஏற்கனவே ராகுல் காந்தி மணிப்பூர் சென்று மக்களை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் செல்கிறது

    மணிப்பூரில் வன்முறை 2 மாதத்திற்கும் மேலாக நீடித்து வருவது குறிப்பித்தக்கது.



  • 13:31 (IST) 20 Jul 2023
    பாம்பு கடித்து மரணம்: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!

    வேலூர் மாவட்டம் அள்ளேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்தவரின் உடலை மண் சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர் தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில் சோக நிகழ்வு நடந்துள்ளது.



  • 13:29 (IST) 20 Jul 2023
    'ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்': அமைச்சர் ரகுபதி பேச்சு!

    'மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம். நேரடியாக மற்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கு வேறுபாடு உள்ளது. மத்திய அரசின் ஒழுங்கு முறை விதிகள் வலுவானதாக இல்லை' என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.



  • 12:43 (IST) 20 Jul 2023
    நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

    "நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன" "ஏ.பி.ஜே.அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை" "இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எம்.ஐ.டி விளங்குகிறது" "படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக எம்.ஐ.டி. வளர்த்தெடுக்கிறது" மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • 12:39 (IST) 20 Jul 2023
    செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

    கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அமலாக்கத்துறை தரப்பில் ஒரு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் - அமலாக்கத்துறை மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் பலனற்றதாகிவிடும் - செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கத்துறை வாதத்தை நிராகரித்த நீதிபதி நாளை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்



  • 12:38 (IST) 20 Jul 2023
    2 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் வேதனை

    மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் வேதனை தெரிவித்தார் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய அரசுக்கும், மணிப்பூர் அரசுக்கும் உத்தரவு



  • 12:21 (IST) 20 Jul 2023
    தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா பங்கேற்பு காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை



  • 11:59 (IST) 20 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு - நாளை அவசரமாக விசாரணை

    செந்தில் பாலாஜி வழக்கு - நாளை அவசரமாக விசாரணை கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்



  • 11:35 (IST) 20 Jul 2023
    மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு மாநிலங்களவை பகல் 12 மணி, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு



  • 11:17 (IST) 20 Jul 2023
    மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது

    "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம்”- பிரதமர் மோடி



  • 11:15 (IST) 20 Jul 2023
    காவிரி விவகாரம் : மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்

    காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கினார் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்-ஐ சந்தித்த நிலையில் கடிதம் வழங்கினார் தண்ணீரை உடனடியாக வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவுரை



  • 10:58 (IST) 20 Jul 2023
    காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனம்

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி

    நதிநீர் பங்கிட்டு வழங்குவதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்த வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்



  • 10:58 (IST) 20 Jul 2023
    தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை - துரைமுருகன்

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்"

    "ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை"

    "கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை"

    "காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது"

    டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி



  • 10:57 (IST) 20 Jul 2023
    தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை - துரைமுருகன்

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்"

    "ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை"

    "கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை"

    "காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது"

    டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி



  • 09:54 (IST) 20 Jul 2023
    பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.

    இன்று இலங்கை அதிபர் டெல்லி வருகை தர உள்ள நிலையில் முதல்வர் கடிதம்



  • 09:52 (IST) 20 Jul 2023
    31-ம் தேதி முதல்வர் கள ஆய்வு கூட்டம்

    வரும் 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம்

    வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு



  • 09:39 (IST) 20 Jul 2023
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை

    சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம்

    மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு ரயிலில் வியாபாரம் செய்யும் ஆண், பெண் வியாபாரிகள் அனைவரையும் போலீசார் விசாரணைக்கு அழைப்பு



  • 09:38 (IST) 20 Jul 2023
    பிரதமருடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

    டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்திப்பு



  • 09:38 (IST) 20 Jul 2023
    வெறுப்பும் விஷமும் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது - ஸ்டாலின் கண்டனம்

    மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம், பாலியல் வன்கொடுமை

    மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து போனது.

    வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது.

    இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்

    மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்



  • 09:30 (IST) 20 Jul 2023
    மத்திய அமைச்சரை இன்று சந்திக்கும் துரைமுருகன்

    மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கிறார்

    அமைச்சர் துரைமுருகன் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை சந்தித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன்



  • 09:29 (IST) 20 Jul 2023
    மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பிக்கும் பணி துவக்கம்

    பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் விநியோகம் வீடு, வீடாக சென்று டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கும் பணி துவக்கம்

    சென்னையில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்

    தமிழகத்தில் 1 கோடி பெண்களுக்கு வழங்க திட்டம். 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என தகவல்



  • 08:04 (IST) 20 Jul 2023
    வேலூர் அள்ளேரி மலை: பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் பலி

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அள்ளேரி மலை பகுதியில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

    ஏற்கனவே அதே பகுதியில் ஒன்றரை வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலி

    பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முறையான சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு



  • 08:03 (IST) 20 Jul 2023
    கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

    கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஏமாற்றம்

    தைவான் வீராங்கனையிடம் தோல்வியடைந்த நிலையில் தொடரிலிருந்து வெளியேற்றம்



  • 08:02 (IST) 20 Jul 2023
    விலைவாசி உயர்வு - அ.தி.மு.க இன்று ஆர்ப்பாட்டம்

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பாக இன்று ஆர்ப்பாட்டம்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment