Advertisment

Tamil News Updates: கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு

Tamil Nadu News : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar Magalir Urimai Thogai Scheme

Kalaignar Magalir Urimai Thogai Scheme

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisment

இந்த திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் வரும் 20ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”



  • 22:25 (IST) 17 Aug 2023
    தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார்

    கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்: “தண்ணீர் தட்டுபாடு அதிகம் உள்ளதால் கடும் வறட்சியை சந்தித்து வருகிறோம். தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • 22:20 (IST) 17 Aug 2023
    திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்

    வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் விஜய் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.



  • 21:07 (IST) 17 Aug 2023
    விபத்து ஏற்பட்டால், வீடியோ எடுத்து வெளியில் பரப்புவது தவறு - என்.எல்.சி எச்சரிக்கை

    சுரங்கம், அனல்மின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால், வீடியோ எடுத்து வெளியில் பரப்புவது தவறு என்று என்எல்சி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.



  • 21:03 (IST) 17 Aug 2023
    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு முகாம்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • 20:57 (IST) 17 Aug 2023
    புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வெள்ளிகிழமை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:20 (IST) 17 Aug 2023
    பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி அரசியல் செய்கிறது பா.ஜ.க - ஸ்டாலின் பேச்சு

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு:

    2015-ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் அமைக்க டெல்லியில் இருந்து டெண்டர் வரவே 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியே தி.மு.க-வுக்கு எதிராக பா.ஜ.க அரசியல் செய்கிறது.

    அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் செய்ததைப் போல பேசிக் கொள்வார்கள்.

    அனைவருக்கும் பொதுவான ஆட்சியை வழங்கி வருவதால் மக்கள் நம்மை நிராகரிக்க மாட்டார்கள்.

    வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். வெற்றியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

    தமிழ்நாட்டை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கலைஞரின் கணவை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.



  • 20:15 (IST) 17 Aug 2023
    கலைஞரின் கணவை நிச்சயம் நிறைவேற்றுவோம்; ஸ்டாலின் சூளுரை

    தமிழ்நாட்டை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கலைஞரின் கணவை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.



  • 20:13 (IST) 17 Aug 2023
    மணப்பாறை அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

    மணப்பாறை அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.



  • 19:33 (IST) 17 Aug 2023
    மீனவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின்

    ராமேஸ்வரம், சேதுபதி நகரில் மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, மீனவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று

    குறைகளை கேட்டு அறிந்தார்.



  • 19:32 (IST) 17 Aug 2023
    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி; நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை (ஆக்ஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம். www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:59 (IST) 17 Aug 2023
    கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க திட்டம் இல்லை: நீதிபதி

    விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, “மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் திட்டம் ஏற்படுத்தப்படவில்லை” என நீதிபதி தெரிவித்தார்.



  • 18:55 (IST) 17 Aug 2023
    ரம்மிக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    “தமிழக சட்டத்தில் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டது எப்படி? இதனை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதே” என சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பி உள்ளது.

    இந்த வழக்கு ஆக.21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



  • 18:52 (IST) 17 Aug 2023
    திருப்பதியில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

    திருப்பதியில் கடந்த 11-ம் தேதி பாதயாத்திரை சென்ற 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

    வனத்துறை வைத்த கூண்டில், சிறுத்தை சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    திருப்பதியில் கடந்த 50 நாள்களில் கூண்டு வைத்து 3 சிறுத்தைகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.



  • 18:34 (IST) 17 Aug 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: நீதிமன்றம் முக்கிய மாற்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான

    சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

    சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.



  • 18:16 (IST) 17 Aug 2023
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் ஷங்கர்

    'இந்தியன் 2' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை திரைப்பட இயக்குநர் ஷங்கர் கொண்டாடினார்.

    இயக்குநர் ஷங்கருக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



  • 17:42 (IST) 17 Aug 2023
    கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு

    திண்டுக்கல் மாவ்டடம் கொடைக்கானலில் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் நாளை (ஆக.18) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பைன் மரக் காடுகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்டவை மூடப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.



  • 17:31 (IST) 17 Aug 2023
    திருமாவளவன் பிறந்தநாள்: அண்ணாமலை வாழ்த்து

    விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருமாவளவன் நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆரோக்கியத்துடன் மக்கள் பணி தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:17 (IST) 17 Aug 2023
    தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பா.ஜ.க.: சத்தீஸ்கரில் வேற லெவல் சம்பவம்

    சத்தீஸ்கரில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக இங்கு 21 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் 39 வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு பாஜக ஆட்சியும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறுகிறது.



  • 16:43 (IST) 17 Aug 2023
    மூதாட்டி அளித்த புகாரின் மீது காவல் துணை ஆணையாளர் விசாரணை

    10 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரிடம் கோரிக்கை மனு அளித்த மூதாட்டி அனுசுயா (86) ! காவல் ஆணையரகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில், மூதாட்டி மனு அளித்த நிலையில் காவல் துணை ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் சென்று விசாரணை



  • 16:41 (IST) 17 Aug 2023
    மாமன்னன் படத்தின் வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

    சமூகநீதி - சமத்துவ அரசியலை பேசிய மாமன்னன் படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!



  • 16:00 (IST) 17 Aug 2023
    ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

    ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு சென்னை, ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்



  • 15:23 (IST) 17 Aug 2023
    பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

    சென்னை ஏழு கிணறு பகுதியில் பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த மகிமை ராஜ் (48) போக்சோ சட்டத்தில் கைது; கைது செய்யப்பட்ட மகிமை ராஜ் சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறார்



  • 15:19 (IST) 17 Aug 2023
    திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம்

    ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுகவினருக்கு பிரியாணி விருந்து. சுமார் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் இருந்து திமுக முகவர்கள் வருகை தந்துள்ளனர்



  • 14:56 (IST) 17 Aug 2023
    15 நாட்களுக்கு மேல் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் - சென்னை மாநகராட்சி

    15 நாட்களுக்கு மேல் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்



  • 14:47 (IST) 17 Aug 2023
    சென்னையில் தூய்மை பணியாளர் போக்சோ சட்டத்தில் கைது

    சென்னை ஏழு கிணறு பகுதியில் பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த மகிமை ராஜ் (48) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மகிமை ராஜ் சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறார்



  • 14:41 (IST) 17 Aug 2023
    தென்மண்டல அளவிலான தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம்

    தென்மண்டல அளவிலான தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்றுள்ள தி.மு.கவினர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 உடன் விருந்து வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களில் இருந்து திமுக முகவர்கள் வருகை தந்துள்ளனர்



  • 14:06 (IST) 17 Aug 2023
    சந்திரயான் - 3 லேண்டர் வெற்றிகரமாக விண்கலத்தில் இருந்து பிரிந்தது - இஸ்ரோ

    சந்திரயான் - 3 லேண்டர் வெற்றிகரமாக விண்கலத்தில் இருந்து பிரிந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நிலவை நெருங்க உள்ளது. லேண்டெர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது



  • 13:52 (IST) 17 Aug 2023
    ஜெயிலர் திரைப்படம் ரூ.375 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.375 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியான ஒரு வாரத்தில் ரூ.375 கோடி வசூலை ஈட்டிய ஜெயிலர், "தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிகபட்ச கலெக்‌ஷன்" ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது



  • 13:43 (IST) 17 Aug 2023
    விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் 145 தடை உத்தரவு

    விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, பட்டியலின மக்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை பூட்டி சீல்வைக்கப்பட்டு, 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 145 தடை உத்தரவை நீக்கி, இரு தரப்பிற்கும் சுமூக உடன்பாடு ஏற்படுவதற்கான விசாரணை தொடங்கியுள்ளது. 145 தடை உத்தரவால் கோயிலுக்கு அருகே 5க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட முடியாது



  • 13:19 (IST) 17 Aug 2023
    சிவசங்கர் பாபா வழக்கு; சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    பாலியல் தொல்லை அளித்தாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி, மின்னஞ்சல் மூலமாக அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது என சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • 12:43 (IST) 17 Aug 2023
    செல்லூர் ராஜு பேட்டி

    அதிமுக மாநாடு நடைபெறும் நாளில், திமுக நீட் தேர்வுக்காக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது தரக்குறைவான செயல்;

    நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை; நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும்;

    திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது; மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள், திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்- மதுரையில் அதிமுக செல்லூர் ராஜு பேட்டி



  • 12:37 (IST) 17 Aug 2023
    ஜார்கண்ட் ஆளுநருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

    ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு



  • 12:34 (IST) 17 Aug 2023
    ஆருத்ரா மோசடி வழக்கு

    ஆருத்ரா மோசடி வழக்கில், அதன் நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர். அவர்களை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது.



  • 11:37 (IST) 17 Aug 2023
    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: சிறப்பு முகாம்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.



  • 11:35 (IST) 17 Aug 2023
    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 10,500 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது



  • 11:31 (IST) 17 Aug 2023
    திருமாவளவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின் ட்வீட்

    இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • 10:48 (IST) 17 Aug 2023
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், தகுதிவாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்பத் தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் 2 கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன



  • 10:34 (IST) 17 Aug 2023
    அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

    திருவனந்தபுரம் - மதுரை இடையே இயங்கும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்



  • 09:20 (IST) 17 Aug 2023
    50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது

    திருப்பதி மலைப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 3வது சிறுத்தை சிக்கியது கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது



  • 09:19 (IST) 17 Aug 2023
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 53.38 அடி, நீர் இருப்பு - 19.76 டி.எம்.சி, நீர்வரத்து - 3,260 கன அடி, நீர் வெளியேற்றம் - 6000 கன அடி. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரிப்பு



  • 09:19 (IST) 17 Aug 2023
    2வது நாளாக பரிசல் இயக்க தடை விதிப்பு.

    தருமபுரி, ஒகேனக்கல் பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,000 கன அடியாக அதிகரிப்பு நேற்று 10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து. இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,000 கன அடியாக உயர்வு நீர்வரத்து அதிகரிப்பால் 2வது நாளாக பரிசல் இயக்க தடை விதிப்பு.



  • 09:18 (IST) 17 Aug 2023
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் செப். 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு



  • 08:28 (IST) 17 Aug 2023
    இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது

    மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது 20ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி



  • 08:11 (IST) 17 Aug 2023
    இளைஞரை கொடூரமாக கொலை செய்த அவரின் உறவினர் கைது

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், சத்தீஸ்கரை சேர்ந்த பிரகாஷ்(25) என்ற இளைஞரை கொடூரமாக கொலை செய்த அவரின் உறவினர் ராம்குமார்(35) கைது. இருவரும் ரோட்டில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வருவதாக போலீசார் தகவல்; கொலையாளி உடன் வந்த சிறுவனிடம் ரயில்வே காவல்துறை விசாரணை!



  • 08:10 (IST) 17 Aug 2023
    பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் வீட்டு காவலில் கைது

    ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்ட பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் வீட்டு காவலில் கைது. 2 நாள் சுற்றுபயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை!



  • 08:08 (IST) 17 Aug 2023
    கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான7.5% உள் இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

    இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு. சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது! நாளை பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறவுள்ளது!



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment