Tamil Nadu News Updates: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றத்தில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் கான் ஆகும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர்
இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 4வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.
ஆர்சிபி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியது பெங்களூர் அணி. சிஎஸ்கே அணியை போலவே, மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர்ந்து 4ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
மழை அப்டேட்
வெப்பச் சலனம் காரணமாகஏப்.10-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ் படங்களை போலதான் மலையாள படமும், மற்ற மொழி படங்களும்; இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை என தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் திங்கள்கிழமை மெய்நிகர் சந்திப்பை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான போரின் விளைவுகள் மற்றும் உலகளாவிய உணவு வழங்கல் மற்றும் பொருட்களின் சந்தைகளில் அதன் ஸ்திரமின்மை தாக்கத்தை தணித்தல்” பற்றிய நெருக்கமான ஆலோசனைகளை அமெரிக்க ஜனாதிபதி பிடன் பேசுவார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்குப் போதுமா? இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? எங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தனித்துவம் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலை நகரில் தெரிவித்துள்ளார்
10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய ஊர் செங்கல்பட்டு. திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி என செங்கல்பட்டு, மறைமலைநகரில் நடைபெற்றுவரும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
மக்களோடு மக்களாக எப்போதும் தன்னை இணைத்துக் கொள்ளும் இயக்கம்தான் திமுக என செங்கல்பட்டு, மறைமலைநகரில் நடைபெற்றுவரும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
ஆந்திராவில் 28 அமைச்சர்களின் ராஜினாமாவை ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்தன் ஏற்றுக்கொண்டார். ஆந்திராவில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 1947-க்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு சதிக்கு எதிரான சுதந்திர போராட்டம் தொடங்கியுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்கள் மட்டுமே என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் செயலகம் முன் கொட்டும் மழையில் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல்லின் இன்றைய பகலிரவு போட்டியில், கொல்கத்தா அணிக்கு 216 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக வார்னர் – 61, பிரித்வி ஷா – 51 ரன்கள் எடுத்தனர்
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பதிவான வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நாளை விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் வரும் 13ஆம் தேதி தனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளலாம் என குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை முதல் 16ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேர்வுக் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.
கேரளாவின் கண்ணூரில் நடந்த சிபிஎம் 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 பேர் கொண்ட மத்திய குழுவின் முதல் கூட்டத்தின் மூலம் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரான் கப்பலில் இருந்தவர்கள் மீனவர்கள்தான் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது. பிடிபட்டவர்களிடம் போதைப் பொருளோ அல்லது ஆயுதங்களோ இல்லை. 11 ஈரானியர்களிடமிருந்து ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக தடயவியல் துறையினர் சோதனையில் தெரியவந்துள்ளது. கப்பலில் 2வது நாளாக சோதனை நடத்திய நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விளக்கம் அளித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைத்து சாதனை படைத்தது. இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியா பட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கர்நாடகத்தில் தும்கூருவில் 161 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி ரயிலில் எடுத்துச் செல்லப்பட இருந்த 18 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பீஸ்ட் படத்துக்கு குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் எஃப்ஐஆர் படத்துக்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது.
நாகை, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்பது ஜாதி பிரச்சனை அல்ல, சமூகநீதி பிரச்சனையே என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் மதுவிலக்குக் கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். இலங்கையில் வாழும் அனைவருக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் விடிய விடிய நடைபெற்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் நாடே ஸ்தம்பித்தது.
சென்னை, மயிலாப்பூரில் உளவுத்துறை டிஎஸ்பி அருளரசு ஜஸ்டினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக பரவிவரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தில் இருந்து இம்ரான் கான் வெளியேறினார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க, பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவெடுத்துள்ளது.
இந்தியை விருப்பப் பாடமாக வைப்பதில் எங்களுக்க எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தி திணிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளையும் அணுகுவோம் என வடகிழக்கு மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ்நாடு மாடலை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் என சீதாராம் யெச்சூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,258 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுச்சேரி, காரைக்கால், சென்னை உட்பட 6 இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் , கேரளா, புதுச்சேரியில் பிரெஞ்சு குடிமக்கள் 4,564 பேர் அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், மேலும் 19 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் டவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்ட நிலையில், யுஜிசி ட்விட்டரை இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.