Tamil Nadu News Updates: கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் இன்றி 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பொது மக்கள் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொரோனா அப்டேட்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 26.85 கோடியைக் கடந்துள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 55.61 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேயர் பதவிகள்
மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், சென்னை,தாம்பரம் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
75 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கடற்படையின் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று கடற்படை வீரர்கள் இறந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா சோதனை குறைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சகம், கேஸ் பாசிட்டிவிட்டி போக்கைக் கருத்தில் கொண்டு சோதனை விகிதங்களை அதிகரிக்க மாநில சுகாதாரத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக அயலக அணி செயலாளராக இருந்து வந்த எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா தகவல் தொழில் நுட்ப செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி எம்,எம்.அப்துல்லா அயலக அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்
அபுதாபி வான்வழி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் உறுதுணையாக இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
நிறைய மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை குறைத்திருப்பது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வந்திருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை குறைக்கவும் பரிசோதனை செய்வது என்பது மிகவும் அவசியமானதாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் இருக்கக் கூடிய நபர்களுக்கு மற்றும் கொரோனா உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்த தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நபர்களுக்கும் கட்டாயம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
“தேவாஸ் மல்டி மீடியா, ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற ஒப்பந்தம் ஒரு ஏமாற்று வேலை. அலைக்கற்றை, கனிம வளம், செயற்கைக்கோள் போன்றவற்றை தனியாருக்கு கொடுத்து முறைகேடு செய்வதே காங். ஆட்சியின் சிறப்பம்சம். முதலாளித்துவத்தை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அபுதாபி வான்வழி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் உறுதுணையாக இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் தவறான தொலைபேசி எண்களை தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். தவறான தகவல் வழங்குவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்க ஆய்வுக்கூட்டத்தில் முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ் -தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் மோசடியானது என்பதால் 2011ல் மத்திய அரசு ரத்து செய்து என்று மத்திய நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமித்தால் பெருமைமிக்க உணர்வாக இருக்கும். ஜோகன்னர்ஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 5 கோடியை தாண்டியுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பிற்காக ராஜபாதையை சுற்றி முகத்தை துல்லிய அடையாளம் காணும் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தபட்டுள்ளது. மேலும், ராஜபாதை பகுதியை சுற்றி 1,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தபட்டுள்ளது.
டெல்லி ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கு தூய்மை பணியாளர்கள், கட்டட தொழிலாளர்கள், முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
கோவை, வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிப்பொடி தூவி அவமரியாதை செய்த வழக்கில் அருண் கார்த்திக், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: பிரதமர் மோடி, தமிழர் போல் செயல்படுகிறார்;தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார். தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை.” என்று கூறினார்.
இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளர்
டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ள”தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன” * “தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது”
ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது” என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் வினோத்(24) என்பவர் பலியாகியுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 பார்வையாளர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழகம், மேற்கு வங்கத்தின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன
திட்டங்களை உருவாக்குவதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மனிதவள மேம்பாடு, வாழ்க்கை தரம், கல்வி, குழந்தை வளர்ப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை சோதனை மூலம் தனக்கு அழுத்தம் தர முயற்சிப்பதாக, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் மேற்குவங்கத்தை தொடர்ந்து பஞ்சாப்பிலும் தொடரும் இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் சரண்ஜித் சிங் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்று வாரணாசி தொகுதி பாஜக தொண்டர்களுக்கான காணொலி உரையாடலில் பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்தின் வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 20ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. இன்று ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு தமிழகம், மகாராஷ்டிரா, ம.பி, டெல்லி ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகின்ற 31ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறாவின் போது குடலில் உணவு இல்லாத காரணத்தால் பட்டினியால் மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டில் பட்டினிசாவே இல்லையா என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்
தேசிய கொடிக்கு மதிப்பளிப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம். மாநிலங்களில் நடைபெறும் அனைத்து கலாச்சார பொது நிகழ்வுகளிலும் காகிதத்தாலான தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் அறிவிப்பு
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் குறித்த காட்சிகள் மற்றும் இயக்குநர் ஞானவேலின் விளக்கத்துடன் படம் ஒலிபரப்பட்டுள்ளது. ஆஸ்கர் சேனலில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சாதனையை பெற்றது ஜெய்பீம்
சென்னை எழிலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிலான, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கட்டமைப்பு மேம்பாடு குறித்து நடத்தப்பட்ட மாநில திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
நாகை வேதாரண்யம் அருகே புதுப்பள்ளியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 குறைந்து ரூ36,256க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ5 குறைந்து, ரூ4,532க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் 84 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 200 வார்டுகளில் பட்டியலின பொது வார்டாக 16, பட்டியல் இன மகளிர் வார்டாக 16 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 310 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
மாநில திட்டக்குழுவுடன் சென்னை எழிலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனையில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.