Advertisment

Tamil News: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 20th February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Advertisment

பாஜக பூத் முகவர் மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு

வாக்குச்சாவடியில் பிரச்னை செய்த புகாரில் கைதான பாஜக பூத் முகவர் கிரி ராஜன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு - மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அப்டேட்

உலகளவில் இதுவரை 42.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.84 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 59 லட்சம் பேர் உயிரிழப்பு

பெட்ரோல் அப்டேட்

சென்னையில் 108 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உ.பி, பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் சட்டமன்றத்துக்கு ஒரே கட்ட தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற உள்ளன. உ.பி.,யில் 16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைக்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இலங்கை டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டி20 போட்டிகளை தொடர்ந்து டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:22 (IST) 20 Feb 2022
    சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை

    சென்னையில், காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யபட்டார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



  • 19:36 (IST) 20 Feb 2022
    தெலங்கான முதல்வர் கே.சி.ஆர் - சரத் பவார் உடன் சந்திப்பு

    தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தார்.

    சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், “இன்று, நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அது வறுமை அல்லது விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விவாதித்தோம். நாங்கள் அதிக அரசியல் விவாதம் செய்யவில்லை, ஏனென்றால் பிரச்சினை வளர்ச்சி... பின்னர் மீண்டும் விவாதம் நடத்துவோம்” என்று கூறினார்.



  • 18:35 (IST) 20 Feb 2022
    இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு கொரோனா

    இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.



  • 17:55 (IST) 20 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயம் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயம். உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை உறிஞ்சத் துடிக்கும் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.



  • 16:00 (IST) 20 Feb 2022
    5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு; மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த, 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது



  • 15:02 (IST) 20 Feb 2022
    மதியம் 1 மணி நிலவரம்; பஞ்சாபில் 34.10%, உத்தரபிரதேசத்தில் 35.88% வாக்குப்பதிவு

    மதியம் 1 மணி நிலவரப்படி, பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 34.10% வாக்குகளும், உத்தரபிரதேசம் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 35.88% வாக்குகளும் பதிவாகியுள்ளன



  • 14:33 (IST) 20 Feb 2022
    கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை

    கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றி தகவல் தெரிவிக்க அனைத்து பேருந்துகளிலும் இந்த அறிவிப்பை தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது



  • 14:22 (IST) 20 Feb 2022
    டெல்லி குடியரசு தினவிழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் மெரினாவில் காட்சிப்படுத்தல்

    டெல்லி குடியரசு தினவிழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 4 நாட்கள் அலங்கார ஊர்திகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



  • 14:14 (IST) 20 Feb 2022
    மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று மும்பையில் காலமானதாக மம்தா பானர்ஜி தகவல்

    மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானதாக முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 13:54 (IST) 20 Feb 2022
    கோவையில் மழை பெய்ய வாய்ப்பு

    தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.



  • 13:50 (IST) 20 Feb 2022
    மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ம.நீ.ம கட்சியினர் போராட்டம்

    சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.



  • 13:22 (IST) 20 Feb 2022
    கேரளா: பேருந்தில் பயணிகள் செல்போனில் பேச தடை

    கேரளாவில் அரசு பேருந்தில் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசவும், ஸ்பீக்கரில் பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 13:22 (IST) 20 Feb 2022
    கேரளா: பேருந்தில் பயணிகள் செல்போனில் பேச தடை

    கேரளாவில் அரசு பேருந்தில் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசவும், ஸ்பீக்கரில் பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 13:19 (IST) 20 Feb 2022
    ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை

    போரைத் தேர்வு செய்தால் கடும் விளைவுகள் நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 12:59 (IST) 20 Feb 2022
    முக்கிய பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம்

    இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சிறப்பு குழு ஒன்றை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அமைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகைமை தெரிவித்துள்ளது.



  • 12:49 (IST) 20 Feb 2022
    அச்சம் காரணமாக மக்கள் வாக்களிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை. சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்றன என்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.`



  • 12:39 (IST) 20 Feb 2022
    மறுவாக்குப் பதிவு தேவை: அதிமுக புகார்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



  • 12:29 (IST) 20 Feb 2022
    ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அகிலேஷ்

    உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கினை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவு செய்தார்.



  • 12:29 (IST) 20 Feb 2022
    ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அகிலேஷ்

    உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கினை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவு செய்தார்.



  • 12:19 (IST) 20 Feb 2022
    மத்திய அரசு பணி: +2 படித்தவர் விண்ணப்பிக்கலாம்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 5,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  • 12:06 (IST) 20 Feb 2022
    வெற்றி விழாக்களில் பங்கேற்பேன்-முதல்வர் ஸ்டாலின்

    கொரோனா பரவல் காரணமாக அரசு விதிப்படி நேரடி பிரசாரம் செய்யவில்லை; தேர்தல் முடிவுக்குப் பின் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



  • 11:47 (IST) 20 Feb 2022
    மிகப்பெரிய வெற்றியை திமுக பெற உள்ளது-முதல்வர் ஸ்டாலின்

    நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு வரவுள்ள நிலையில், மிகப்பெரிய வெற்றியை திமுக பெற உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக துணை அமைப்புச் செயலாளர் இல்ல திருமண விழாவில் பேசியபோது இதனை அவர் கூறினார்.



  • 11:37 (IST) 20 Feb 2022
    திருவான்மியூரில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டதாக புகார்

    சென்னை திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டதாக கிடைத்த புகார் அடிப்படையில் திமுக பிரமுகர் கதிரவன் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கதிரவன் உட்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.



  • 11:28 (IST) 20 Feb 2022
    பஞ்சாப் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

    பஞ்சாப் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



  • 11:18 (IST) 20 Feb 2022
    புதிய அரசால் சிறந்த எதிர்காலம்: ராகுல் காந்தி

    பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்; புதிய அரசு அமைந்தால் சிறந்த எதிர்காலம் உருவாகும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தார்.



  • 11:12 (IST) 20 Feb 2022
    புடவை அணிந்து உணவு பரிமாறும் ரோபோ!

    கர்நாடக மாநிலம், மைசூரில் முதல்முறையாக தனியார் உணவகத்தில் பணியாளர்களாக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு வாடிக்கையாளர்களிடம் , நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



  • 11:11 (IST) 20 Feb 2022
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்: அதிமுக மரியாதை

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செய்யப்படவுள்ளது. ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 10:50 (IST) 20 Feb 2022
    திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

    திருச்சி விமானநிலையத்தில் கடத்த முயன்ற ரூ66 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 10:13 (IST) 20 Feb 2022
    மக்கள் பார்வைக்கு குடியரசு தின அலங்கார ஊர்தி

    குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • 09:46 (IST) 20 Feb 2022
    பஞ்சாப், உ.பி., தேர்தல் வாக்குப்பதிவு - 9 மணி நிலவரம்

    பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் காலை 9 மணி நிலவரப்படி 5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உ.பி.,யில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.



  • 09:42 (IST) 20 Feb 2022
    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19,968 பேர் பாதிப்பு

    இந்தியாவில் மேலும் 19,968 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 48,847 பேர் குணமடைந்துள்ளனர். 673 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 09:37 (IST) 20 Feb 2022
    வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

    சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 150 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • 08:26 (IST) 20 Feb 2022
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கடைசி 20 ஓவர் போட்டி

    கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.



Tamilnadu Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment