Advertisment

புதிய தொழில் தொடங்க ஜிஎஸ்டி வரி, மின் கட்டண சலுகை : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதிய தொழில்களை ஈர்க்க புதிய தொழில்கொள்கைக்கான பரிந்துரைகளை செய்ய வல்லுநர் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

author-image
WebDesk
New Update
புதுச்சேரி

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

முதலீட்டாளர்களை ஈர்த்து: புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜிஎஸ்டி வரி, மின் கட்டண சலுகை அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதத்தில்,

சிவசங்கர்(பாஜக), அங்காளன்(சுயே) புதிய தொழில்களை ஈர்க்க புதிய தொழில்கொள்கைக்கான பரிந்துரைகளை செய்ய வல்லுநர் குழுவை  அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? கவர்ச்சிகரமான புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்குமா? முதலீட்டாளர்கள் மாநாடை  அரசு நடத்துமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம் வல்லுநர் குழு அமைக்கப்படும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்தார்..

சிவசங்கர்: புதிய தொழிலுக்காக விண்ணப்பிப்பவர்கள், உரிமம் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். சில தொழிற்சாலைகள் நம்பிக்கையோடு கடன் பெற்று தொடங்கியும், அனுமதி கிடைக்காததால் நஷ்டத்தோடு வெளியேறுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு அரசு முடிவுகட்ட வேண்டும். புதிய தொழில் தொடங்க புதுவைக்கு வருபவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும்.

ஜான்குமார்(பாஜக): எனக்கு தெரிந்த தனியார் நிறுவனத்தினர் தொழில் தொடங்க முன்வந்தனர். அனுமதி கிடைக்க காலதாமதத்தால் அதை  தமிழகத்திற்கு கொண்டுசென்றுவிட்டனர். இதனால் புதுவைக்கு ரூ.360 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அங்காளன்: புதிய தொழில் தொடங்க வருபவர்களுக்கு குஜராத் மாநிலத்தில் சதுர அடி நிலம் ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்குகின்றனர். ஜிஎஸ்டி, மின் கட்டணம் ஆகியவற்றில் பிற மாநிலங்களில் சலுகை அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளை அறிவித்து முதலீட்டாளர்களை அரசு ஈர்க்க வேண்டும். புதிய தொழில்கொள்கையை உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

கல்யாணசுந்தரம்(பாஜக): கடந்த 15 ஆண்டாக புதிய தொழிற்சாலைகள் எதுவும் புதுவைக்கு வரவில்லை. தமிழகம், ஆந்திரா மா நிலங்களுக்கு பல தொழிற்சாலைகள் சென்றுவிட்டது. இதற்கு காரணம் தொழிற்சங்கம் என்ற பெயரிலம், ஜாதி பெயரிலும் சில அமைப்புகள்  தொழில் தொடங்க வருபவர்களுக்கு கடும் இடையூறு விளைவிக்கின்றனர். லெட்டர்பேடு அமைப்பு வைத்துள்ளவர்களால் தொழில்  தொடங்க வருபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இதனால்தான் பல தொழிற்சாலைகள் தொடங்கும் எண்ணத்தை கைவிட்டு  செல்கின்றனர். தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

எதிர்கட்சித்தலைவர் சிவா: 15 ஆண்டாக ஒற்றை சாளர முறை தொழில்துறையில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் வில்லியனுõர்  கொம்யூனில் ஒரு தொழில் தொடங்குவதற்குள் என் செருப்பு தேய்ந்துவிட்டது. விவசாயிகளிடம் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்  செய்து வைத்துள்ளோம். இந்த நிலத்தை தொழில் தொடங்க இதுவரை வழங்கவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களைஅறிவித்தால்தான்  தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

ஆறுமுகம்(என்ஆர்.காங்): என் தொகுதியான மேட்டுப்பாளையத்தில் தொழில்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டை சாலைகளில்  வாகனம் மட்டுமல்ல, நடந்துகூட செல்ல முடியாது. அப்புறம் எப்படி தொழில் முனைவோர் வருவார்கள். அதிகாரிகள் என்ன செ ய்கிறார்கள்? என்றே தெரியவில்லை.

எதிர்கட்சித்தலைவர் சிவா: உழவர்கரை நகராட்சியில் தொழிற்சாலைகளிடம் அனைத்து வரிகளையும் வசூலிக்கின்றனர். ஆனால் சாலை வ சதி கூட செய்துதருவதில்லை.

அமைச்சர் நமச்சிவாயம்: 2016ல் புதிய தொழில்கொள்கை அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில் கொள்கையில் இடம்பெற்றதில்  பாதியளவு கூட அரசாணையாக வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்டி வரியில் சலுகை, மின் கட்டணத்தில் சலுகை ஆகியவற்றில் அரசாணை  வெளியிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்கினால் 3 ஆண்டு எந்த  சான்றிதழும்தேவையில்லை என அறிவித்துள்ளோம். ரூ.100 கோடி முதலீட்டிற்கு மேல் தொழில் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு ஒரு  சதவீதம் வீதம் 5 ஆண்டுக்கு 5 சதவீதம் மானியம் வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

தொழிற்பேட்டைகளில் சாலை, குடிநீர் உட் பட அடிப்படை வசதி செய்ய சில பகுதிகளில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  முதலீட்டாளர்களை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment