Advertisment

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் மரணம்; தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Scholar Professor Ka Nedunchezhiyan passes away, Ka Nedunchezhiyan passes away, Ka Nedunchezhiyan dies, Ka Nedunchezhiyan death, Ka Nedunchezhiyan, பேராசிரியர் க நெடுஞ்செழியன் மரணம், பேராசிரியர் க நெடுஞ்செழியன் காலமானார், தமிழறிஞர் பேராசிரியர் க நெடுஞ்செழியன் மறைந்தார். Ka Nedunchezhiyan passed away, Tiruchirappalli, Agivikas, Aasivagam and Ayyanar

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

Advertisment

தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முக்கியமானது.

திருச்சி மாவாட்டம், இலல்குடி வட்டத்தில் உள்ள படுகை கிராமத்தில் ஜூன் 15, 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.ரா பெரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றினார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பெரியாரியல் சிந்தனையாளர், தமிழின அடையாள மீட்பர், தமிழ் மெய்யியல் மீட்பர், சிறந்த தமிழறிஞர், தமிழ்த் தேசப் பேரொளி விருதைப் பெற்றுள்ளார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும், கடந்த மாதம், செம்மொழி நிறுவனத்தின் கலைஞர் பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பெற்றார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், சித்தன்ன வாசல், ஆசீவம் என்னும் தமிழர் அணுவியம், சங்க காலத் தமிழர் சமயம், தமிழரின் அடையாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு ஆசீவகம் பற்றிய ஆய்வில் முக்கியமானது.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர் பேராசிரிய க. நெடுஞ்செழியன். திராவிட இயக்கங்களிலும் தமிழ் அரசியலும் ஈடுபாடு கொண்டவர். மறைந்த திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்.

இவருக்கு மனைவி ஜக்குபாய், மகன் பண்ணன், மகள்கள் நகைமுத்து, குறிச்சி மற்றும் மருமகன்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் வீட்டில் வசித்து வந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் மறைவு தமிழ் ஆய்வாளர்கள், திராவிட இயக்கத்தினர், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைவர்கள், தமிழ் ஆய்வளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் க. நெடுஞ்செழிய மறைவை அறிந்து வருத்தமடைந்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ தான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள். தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்” என்று நான் குறிப்பிட்டேன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு நேரில் சென்று பேராசிரியர் க. நெடுஞ்செழிய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என மதுரை எம்.பி-யும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழர் சிந்தனை மரபை நிலைநிறுத்த கருத்தியல் தளத்திலும், களத்திலும் அவர் நிகழ்த்தியுள்ள போராட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய உடல் திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு, சொந்த கிராமமான படுகையில் சனிக்கிழமை (நவம்பர் 5) நல்லடக்கம் நடைபெற உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment