Advertisment

செப்.,14-ல் நீட் ஆதரவு ஆர்ப்பாட்டம்: தமிழிசை அறிவிப்பு

அனிதா சாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு லாயக் கற்றவர்கள் எனக் கூறி விலக்கு கேட்கின்றனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP, BJP Meeting

நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வருகிற 14-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Advertisment

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்.

அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக சார்பில் நேற்று முன்தினம் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய - மாநில அரசுகளை விமர்சித்து பேசினார். மேலும், இரண்டாவது கட்டமாக வருகிற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தொடர் போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அப்போது அறிவித்தார்.

இதனிடையே, "எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரசாரத்தை முறியடிக்கவும், நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவும் பாஜக சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தப்படும்" என அக்கட்சுயின் தலைவர் தமிழிசை அறிவித்தார்.

அதன்படி, திருச்சியில் நேற்று மாலை பாஜக சார்பில் போட்டி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை, வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

publive-image

அதில் பேசிய தமிழிசை, அரசியல் சூழ்ச்சிகளால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அனிதாவின் மருத்துவப் படிப்பு தடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளில் கொட்டி மருத்துவம் படிப்பது மட்டுமே தடுக்கப்பட்டிருக்கிறது. நீட்டுக்கு ஏற்கனவே ஓராண்டு விலக்கு கொடுத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கு விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என சென்னை வந்திருந்த போது சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறினார். தமிழக பாஜக சார்பில் நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், பாஜக சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வருகிற 14-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், அனிதா சாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு லாயக் கற்றவர்கள் எனக் கூறி விலக்கு கேட்கின்றனர் என கடுமையாக விமர்சித்தார். அதேபோல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனிதா தற்கொலை விவகாரத்தில் ஏன் விசாரணை கேட்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய எச்.ராஜா, அனிதா மரணம் தூண்டப்பட்டதே என்பது எனது கருத்து என்றார்.

மாணவி அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இதுகுறித்து விசாரணை நடத்தாமல் இருந்தால், மாநில அரசும் இந்த விஷயத்தில் உடந்தையாக இருக்கிறது என்று கருத வேண்டிய நிலை வரும் என்றார். மேலும் பேசிய அவர், அனிதாவால் நீட் தேர்வில் வென்றிருக்க முடியும். அவரை திமுக நம்ப வைத்து கழுத்தறுத்ததால் வெற்றி பெற முடியவில்லை என கடுமையாக சாடினார்.

Bjp Mk Stalin Dmk Neet Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment