கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வர் ட்விட் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். பொய்யான தமிழ் பற்றை சொல்லி சொல்லி எமற்றினோம் இனிமேலும் நாம் ஏமாற்ற வேண்டும் என்ற ஒரு அவசரம் தெரிகிறது அவருடைய ட்விட்டரில். அப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் இருக்கிறது.
மொழி அரசியலை தி.மு.க விட வேண்டும் .இவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் இரட்டை வேடத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ப.சிதம்பரம் ஹிந்தி தினத்தை வாழ்த்து பேசி விட்டு அதை எதிர்த்து பதிவு போடுகிறார்.மொழி அரசியலை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் தமிழில் மாணவர்கள் அதிகமாக தோல்வியடைந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உருது மொழியில் பலகையில் எழுதுகிறார்.இனிமேலாவது இந்த மொழி அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான அரசியலுக்கு திமுக வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் தாய் வாழ்த்து குறையோடு பாடுவது யாருக்கும் ஒப்புதல் கிடையாது உடனே அதற்காக ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைப்பது சரியானது அல்ல. உதயநிதி நேற்றைய தினம் கிரிவலம் சென்றுள்ளார். மகிழ்ச்சி தான். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது கவலை அளிக்கிறது.காவல்துறை அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு அதிகம் மொழிகளை கிரகித்துக் கொள்ளும் தன்மை இருக்கும் அதை ஏன் தடுக்கிறீர்கள்.உங்கள் நிறுவனத்திற்கு எல்லாவற்றிற்கும் ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது நீங்கள் தமிழ் பற்று உள்ளவர்களா? அல்லது ஆங்கில பற்று உள்ளவர்களா? நீட்டை குறை சொல்வதை விட பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துங்கள் இன்றைக்கு பயிற்சி மையம் செல்லாமலே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
மழை சொன்னதை விட அரை சதவீதம் கூட வரவில்லை. குழந்தை தனமான மழைக்கு ஏதோ பெரியதாக செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். தீபாவளிக்கு விடுமுறை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்யாண் சொன்னது போல் இவர்கள் உணர நினைத்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கப்பட வேண்டும், பாடப்பட வேண்டும், பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து.இன்னும் மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பது நினைப்பதுதான் தவறு என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“