டி.ஆர். பாணியில் கமல்ஹாசனைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ட்விட்டரில் மட்டுமே கருத்துகளைத் தெரிவித்துவந்த கமல்ஹாசன், தற்போது நேரடி அரசியலில் களம் இறங்கியிருக்கிறார். அதை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா மற்றும் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் அடிக்கடி கமல்ஹாசனைப் பற்றியும், அவர் கூறும் கருத்துகள் பற்றியும் ட்விட்டர் மற்றும் பேட்டிகளில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டி.ராஜேந்தரைப் போல அடுக்கு மொழியில் கமல்ஹாசனைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன்.
“ ‘உலக நாயகன்’ தவறான அரசியல் கருத்துகளைக் கூறி, ‘உளறும் நாயகனாக’ மாறி, அரசியலில் ‘வளரும் நாயகன்’ ஆக கனவு காண்கிறார். ஆனால், அரசியலைக் கண்டு ‘மிரளும் நாயகன்’ ஆகப் போகிறார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
மேலும், “தனது ரசிகர்களின் வெள்ள நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்ததாக இப்போது சொல்லும் கமல், ஏன் அதை அப்போது சொல்லும் தைரியம் இல்லை? அம்மா இருந்தார் என்பதாலா? இன்று துணிச்சல் வந்தது அம்மா இறந்தார் என்பதாலா?” எனவும் ரைமிங்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
,
அத்துடன், “இந்து தீவிரவாதம் என்று கொளுத்திப் போடுவது சுயரூபமா? இல்லை ‘விஸ்வரூபம் 2’ புதுப்படம் ஓடவைக்க பொய் விஸ்வரூபமா?” எனவும் டைமிங்காகப் பதிவிட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
,