போட்டியில் களமிறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் கணவர்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கணவர் சவுந்தரராஜன், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவை யாரும் வகிக்காமல் உள்ளது. இந்த வெற்றுமையை நிரப்ப, துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 30ம் தேதி நிறைவடைந்தது.

தமிழிசை சவுந்தரராஜன் கணவர் துணை வேந்தர் பதவிக்கு போட்டி

மொத்தம் 41 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவம், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அடிப்படையில் பலரும் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 41 பேர் விண்ணப்பித்திருக்கும் இந்த பட்டியலில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கணவர் சவுந்தரராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது. இவருடன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close