Advertisment

செந்தில் பாலாஜி பயந்த சுபாவம்; தி.மு.க-வில் நீடிக்க மாட்டார்: டி.டி.வி தினகரன் உறுதி

ஜெயலலிதா ஆட்சியை மீட்டெடுக்க நம்முடன் இணைந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நிதானமாக செயல்படுகிறார்கள்.

author-image
WebDesk
Jun 20, 2023 22:18 IST
New Update
Ammk TTV

டிடிவி தினகரன்

அமலாக்கத்துறையின் நடவடிக்கை செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும் நெஞ்சுவலியை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை தலைவர் அன்பழகன் தலைவமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மார்னங்கள் நிறைவெற்றப்பட்டதை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், சுயநலம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட சிலர் நம்மை விட்டு பிரிந்து சென்விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இவர், ஜெயலலிதா ஆட்சியை மீட்டெடுக்க நம்முடன் இணைந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நிதானமாக செயல்படுகிறார்கள். தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மரியாதை உள்ள கட்சியாக அமமுக உள்ளது. இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. செந்தில்பாலாஜி திமுகவில் நீண்ட காலம் தாங்கமாட்டார் என முன்பே கணித்து சொன்னேன். அதிபுத்திசாலித்தனம் எப்போதும் ஆபத்தில் தான் முடியும்.

செந்தில்பாலாஜி பயந்த சுபாவம். அமலாக்க விசாரணையை நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஆனால் நான் 30 வயதில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறேன். என்னை கைது செய்யும்போது 60 நாட்கள் வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் 30 நாட்களில் அனுப்பிவிட்டார்கள். சட்டம் தன் கடமையை செய்கிறது. அதை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும் நெஞ்சுவலி வந்துவிட்டது. திமுக தலைவரின் பேச்சே அதை காட்டுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. குக்கர் சின்னத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேருங்கள். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் பார்க்கலாம். சின்னத்திற்காக இங்கிருந்து அதிமுகவுக்கு சிலர் சென்றனர். அமமுக இல்லாமல் அதிமுக தேராது அதுதான் உண்மை. கொங்கு மண்டலத்திலும் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. பணம் சின்னம் இருந்தும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து. நம் நிர்வாகிகள் சரியாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment