மாவோயிஸ்ட் பத்மாவை கைது செய்யவில்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

தமிழக, ஆந்திர காவல் துறையால் பெண் மாவோயிஸ்ட் பத்மா கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக, ஆந்திர காவல் துறையால் பெண் மாவோயிஸ்ட் பத்மா கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு, ரயிலில் சென்ற பெண் மாவோயிஸ்ட் பத்மாவை ஆந்திர மாநில காவல் துறையினர் ஜூலை மாதம் 3-ஆம் தேதி, ஈரோடு சென்னிமலை அருகில், போலீஸார் கைது செய்ததாகவும், இதனையடுத்து அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி அவரது கணவர் விவேக், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது தமிழக மற்றும் ஆந்திர மாநில டி.ஜி.பி.-க்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவேயிஸ்ட் பத்மாவை தமிழ்நாடு காவல் துறையோ, ஆந்திரா போலீசாரோ கைது செய்யவில்லை எனவும், அவர் தலைமறைவாக இருக்கிறார் எனவும் தமிழக கியூ பிராஞ்ச் காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாவோயிஸ்ட் பத்மாவை கண்டுபிடித்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

×Close
×Close