நாளை முதல் 4 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்த்தொடர் 6 மாத இடைவெளிக்கு பிறகு நாளை (அக்டோபர் 14) மீண்டும் கூடுகிறது. இது குறித்து சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்த்தொடர் 6 மாத இடைவெளிக்கு பிறகு நாளை (அக்டோபர் 14) மீண்டும் கூடுகிறது. இது குறித்து சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Assembly tamilnadu

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், நாளை (அக்டோபர் 14) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 17-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு என அரசியல் தலைவர்கள் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜவரி மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆளுனர் உரையுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதன்பிறகு தார்ச் மாதம் 14-ந் தேதி மீண்டும் சட்டசபை கூடியது. இதில் 2025-2-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் வோளன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 17-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் பொது மற்றும் வேளான் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அதன்பிறகு மார்ச் 24-ந் தேதி முதல், ஏப்ரல் 29-ந் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. 

இதன்பிறகு, சட்டசபை மீண்டும் எப்போது கூடும் என்பது குறித்த தேதி அறிவிக்கப்படாமல், சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை கூட்டம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவையின் அடிப்படை விதியின் கீழ், தமிழக சட்டசபை கூட்டம் நாளை (அக்டோபர் 14) கூடுகிறது. 17-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில், முதல் நாளான நாளை, மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். 

Advertisment
Advertisements

இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் அதன்பிறகு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படும். அடுத்து வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 

அதன்பிறகு அக்டோபர் 15-ந் தேதி மானியகோரிக்கை முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதற்கான விவாதம் நடைபெறும் அப்டோபர் 17-ந் தேதி முதல்வர் இந்த விவாதங்கள் தொடர்பாக பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Assembly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: