Advertisment

Tamil Nadu Budget Updates: திராவிட மாடலுக்கு எடுத்துக் காட்டாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் 2023-24 தொடர்பான எல்லா அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news Updates

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர்  ஆர்.என்.ரவி  உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் , தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023- 34ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கு கூட்டம்  நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட், மீதான விவாதத்திற்கு பேரவை  கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.

குடும்பத் தலைவிக்கான மாதம் ரூ.1,000 திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 18:01 (IST) 20 Mar 2023
    மு.க.ஸ்டாலின் அறிக்கை

    எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும்; திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது- மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • 18:01 (IST) 20 Mar 2023
    தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன்

    தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன் ரூ. 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி; 2023 - 24ம் ஆண்டுக்கான கடன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி- தமிழ்நாடு பட்ஜெட்டில் தகவல்



  • 16:02 (IST) 20 Mar 2023
    கமல்ஹாசன் வரவேற்பு

    மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளது.



  • 14:56 (IST) 20 Mar 2023
    அன்புமணி ராமதாஸ்

    மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம் வரவேற்கத்தக்கவை; வேலைவாய்ப்பு, நீர்மேலாண்மை திட்டம் இல்லாதது ஏமாற்றம்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை



  • 14:09 (IST) 20 Mar 2023
    அண்ணாமலை வலியுறுத்தல்

    தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும். இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000 ஆக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.



  • 14:00 (IST) 20 Mar 2023
    கே.எஸ். அழகிரி பாராட்டு

    தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதை மனதார பாராட்டுகிறேன் - கே.எஸ். அழகிரி



  • 14:00 (IST) 20 Mar 2023
    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

    மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை



  • 13:59 (IST) 20 Mar 2023
    டாஸ்மாக் வருவாய்

    டாஸ்மாக் வருவாய் வரும் நிதி ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வரும் என்று எதிர்பார்க்கிறோம்; இந்த ஆண்டு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது- நிதித்துறை செயலாளர் முருகானந்தம்



  • 13:52 (IST) 20 Mar 2023
    நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டி

    வருவாய் பற்றாக்குறை குறைந்து வருகிறது; வருவாய் பற்றாக்குறையை பூஜ்ஜியமாக்குவதே இலக்கு ஆகும். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - நிதித்துறை செயலாளர் முருகானந்தம்



  • 13:52 (IST) 20 Mar 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

    வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். மக்கள் மீது நலன் கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், முழு நிதி நிலை அறிக்கையையும் கேட்டு அதன் பிறகு தன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி



  • 13:19 (IST) 20 Mar 2023
    ஏப்ரல் 21- ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறும்

    சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு

    பட்ஜெட் மீதான விவாதம் வரும் 24, 27, 28ஆம் தேதிகளில் நடைபெறும்

    மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம்

    காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு



  • 13:18 (IST) 20 Mar 2023
    ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் காலணி தொழிற்சாலைகள்

    ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:55 (IST) 20 Mar 2023
    "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது"

    "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    வதந்தி வீடியோ பரப்பில் சமூக விரோதிகள் 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 12:47 (IST) 20 Mar 2023
    நில பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு

    நில பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    நிலம் வாங்குபவர்கள் செலுத்தும் பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு



  • 12:46 (IST) 20 Mar 2023
    பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்

    இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை

    பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்



  • 12:46 (IST) 20 Mar 2023
    17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு"

    17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.



  • 12:35 (IST) 20 Mar 2023
    அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன் உயர்வு

    அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன் உயர்வு - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்வு



  • 12:30 (IST) 20 Mar 2023
    ரூ. 1000 உரிமை தொகை - இ.பி.எஸ் விமர்சனம்

    அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள் - ரூ.1000 உரிமைத் தொகை - இ.பி.எஸ்

    ரூ.7000 கோடி ஒதுக்கி விட்டு 1 கோடி பேருக்கு ரூ. 1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை - இ.பி.எஸ் விமர்சனம்



  • 12:28 (IST) 20 Mar 2023
    2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

    சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:20 (IST) 20 Mar 2023
    ரூ. 485 கோடியில் கோயில் பெருந்திட்ட பணிகள்

    "ரூ. 485 கோடியில் கோயில் பெருந்திட்ட பணிகள்" - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:12 (IST) 20 Mar 2023
    பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்

    வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி, பணிமனைகள் மேம்படுத்தப்படும்- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:04 (IST) 20 Mar 2023
    ஈரோடு, நெல்லையில் ஐடி பார்க்

    "ஈரோடு, நெல்லையில் ஐடி பார்க்" - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:03 (IST) 20 Mar 2023
    ரூ.800 கோடியில் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்

    கிராமப்புறங்களில் ரூ.800 கோடியில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 12:02 (IST) 20 Mar 2023
    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: செப். 15 முதல் வழங்கப்படும்

    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு



  • 11:49 (IST) 20 Mar 2023
    TNTECH CITY அமைக்கப்படும்

    புதிதாக TNTECH CITY அமைக்கப்படும் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    தகவல் தொழில்நுட்ப புரட்சியின் 2-வது கட்டமாக சென்னை, கோவை, ஒசூரில் TNTECH CITY அமைக்கப்படும்



  • 11:49 (IST) 20 Mar 2023
    தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்

    "தீவுத்திடலில் வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி" - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க ரூ. 50 போடி ஒதுக்கீடு



  • 11:45 (IST) 20 Mar 2023
    500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்

    500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.

    பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 11:44 (IST) 20 Mar 2023
    இலவச wi-fi சேவை

    "முக்கிய இடங்களில் இலவச wi-fi சேவை" - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 11:29 (IST) 20 Mar 2023
    மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி

    மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 11:28 (IST) 20 Mar 2023
    கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில்

    கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ரூ. 9000 கோடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.



  • 11:25 (IST) 20 Mar 2023
    உயர்தர சிறுவர் பூங்கா

    கோவையில் உயர்தர சிறுவர் பூங்கா அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 11:15 (IST) 20 Mar 2023
    ரூ. 434 கோடியில் வெள்ள தடுப்பு பணி

    ரூ. 434 கோடியில் வெள்ள தடுப்பு பணி - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் ரூ. 434 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.



  • 11:00 (IST) 20 Mar 2023
    தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்

    கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் .



  • 10:58 (IST) 20 Mar 2023
    மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ. 320 கோடி ஒதுக்கீடு.

    பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மாணியத்திற்காக ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ. 320 கோடி ஒதுக்கீடு.



  • 10:57 (IST) 20 Mar 2023
    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக்கடன் வழங்க முடிவு

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • 10:53 (IST) 20 Mar 2023
    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக்கடன் வழங்க முடிவு

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • 10:47 (IST) 20 Mar 2023
    மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிப்பு

    மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது



  • 10:40 (IST) 20 Mar 2023
    காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.



  • 10:38 (IST) 20 Mar 2023
    54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்

    54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ. 80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்



  • 10:36 (IST) 20 Mar 2023
    ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்

    பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.



  • 10:34 (IST) 20 Mar 2023
    சென்னையில் நினைவிடம்

    மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம்.



  • 10:34 (IST) 20 Mar 2023
    பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்

    இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.



  • 10:28 (IST) 20 Mar 2023
    மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு

    தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு.



  • 10:25 (IST) 20 Mar 2023
    வருவாய் பற்றாக்குறை ரூ. 30,000 கோடியாக குறைப்பு

    வருவாய் பற்றாக்குறையை ரூ. 62,000 கோடியில் இருந்து ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்.



  • 10:19 (IST) 20 Mar 2023
    இலங்கை மறுவாழ்வு முகாம்: வீடுகள் கட்ட ரூ. 223 கோடி ஒதுக்கீடு

    இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு .



  • 10:18 (IST) 20 Mar 2023
    தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும்: நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு

    போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ. 20 லட்சம் நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு .



  • 10:16 (IST) 20 Mar 2023
    தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

    வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்



  • 10:16 (IST) 20 Mar 2023
    சென்னை சங்கமம் கலைவிழா : 11 கோடி ஒதுக்கீடு

    சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்



  • 10:14 (IST) 20 Mar 2023
    அம்தேக்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

    அம்தேக்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.



  • 10:08 (IST) 20 Mar 2023
    அதிமுகவினர் வெளிநடப்பு

    நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் நிலையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.



  • 10:06 (IST) 20 Mar 2023
    பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். திருக்குறளை மேற்கொள் காட்டி உரையாற்ற தொடங்கினார்.



  • 09:56 (IST) 20 Mar 2023
    சட்டபேரவைக்கு இ.பி.எஸ் வருகை

    சட்டப்பேரவைக்கு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி .



  • 09:26 (IST) 20 Mar 2023
    வேளாண் துறையில் எதிர்பார்ப்புகள்

    நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலையை மாற்ற கொள்முதல் நிலையங்கள் அதிகரித்தல் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.



  • 09:12 (IST) 20 Mar 2023
    சுகாதாரத்துறை சார்ந்த எதிர்பார்ப்புகள்

    மருத்துவத்தை பொருத்தவரை, அரசு மருத்துமனைகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது. காலிப்பணியிடங்களை நிரப்புதல். மேலும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களை பணியில் அமர்த்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 09:01 (IST) 20 Mar 2023
    கல்வி துறை எதிர்பார்ப்புகள்

    கல்வியை பொருத்தவரையில், அரசு பள்ளிகளின் கட்டிடங்களை புதுப்பிப்பது. மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டங்கள் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதும், பகுதிநேர ஆசியர் பணி நிரந்தரம் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.



  • 08:24 (IST) 20 Mar 2023
    சுகாதாரத்துறை சார்ந்த எதிர்பார்ப்புகள்

    மருத்துவத்தை பொருத்தவரை, அரசு மருத்துமனைகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது. காலிப்பணியிடங்களை நிரப்புதல். மேலும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களை பணியில் அமர்த்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 08:10 (IST) 20 Mar 2023
    வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள்

    கடந்த பட்ஜெட்டில் , தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 4.69% ஆக இருந்தது. இந்நிலையில் இந்த பற்றாக்குறை 3.80% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 07:42 (IST) 20 Mar 2023
    மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை அறிவிப்பு வெளியாகுமா?

    தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் . பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் . மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்ப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment