சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல”…? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று திமுகவினரின் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வந்துள்ளது. இவர்கள் இருவரையும் வரவேற்கும் விதமாக பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் “சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல…?” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அதிகம் கருத்தக்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“