Advertisment

ஜி.டி. அருங்காட்சியகத்தில் இந்திய கார்களுக்கு தனி காட்சியகம் : 40 வகையான கார்கள் காட்சி

மூன்று சக்கர கார் என பழமையான கார்கள் முதல் இண்டிகா உள்ளிட்ட 2000"ம் ஆண்டுக்கு முந்தைய கார்கள் முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Old Van

பழைய வாகனம் காட்சியகம்

கோவை அவினாசி சாலை மற்றும்  அண்ணா சிலை பகுதியை அடுத்துள்ள ஜிடி கார் அருங்காட்சியகம் ("GEDEE MUSEUM") கடந்த 2015"ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டு ரக கார்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய ரக கார்களுக்கென தனி காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த இந்திய ரக கார் காட்சியகத்தில், இந்திய நிறுவனங்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பத்மினி, அம்பாசிடர், சிம்பனி நிறுவனத்தின் மூன்று சக்கர கார் என பழமையான கார்கள் முதல் இண்டிகா உள்ளிட்ட 2000"ம் ஆண்டுக்கு முந்தைய கார்கள் முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

publive-image

இந்த காட்சியகத்தில் கூடுதல் சிறப்பாக, ஜி.டி நாயுடுவால் தயாரிக்கப்பட்ட கோவை- உடுமலை வழியாக பழநி வரை செல்லும் பெட்ரோல் மற்றும் வாயுவால் இயங்கும் பேருந்து, பெரியார்க்கு நடிகர் எம்.ஆர்.ராதா வழங்கி, பெரியார் ஜி.டி.நாயுடுக்கு வழங்கிய பிரச்சார பேருந்து உட்பட ஜி.டி.நாயுடு தயாரித்த கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

publive-image

அதுமட்டுமின்றி இந்த போக்குவரத்தின் வரலாற்று குறிப்புகளும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கார்களின் வரலாறு முழு அம்சங்களும் அறிவிப்பு பலகைகளுடன் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் தொலைக்காட்சி வாயிலாக பழமையான புகைப்படங்களும் காண்பிக்கப்படுகிறது. இங்கு வெளிநாட்டு ரக பழமையான கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

publive-image

இந்த அருங்காட்சியத்திற்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 125 ரூ, குழந்தைகளுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.  குழுவாக(30பேர்) சென்றால் ஒரு நபருக்கு 100 ரூபாயும், அரசு பள்ளி மாணவர்கள் குழுவாக வரும் போது 500"ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment