அனிதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திருநாவுக்கரசர் அறிவிப்பு

அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest Tamil News Live: thirunavukkarasar, congress, MK Stalin

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு திணித்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின்படி 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மன உளைச்சல் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் தான் பொறுப்பாகும்.

மிக மிக ஏழ்மை குடும்பத்தில் பிறந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக, அனிதாவின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸ் அனிதா குடும்பத்துக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். மேலும், பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை அனிதா குடும்பத்துக்கு செய்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Neet Anitha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: