Advertisment

‘8 நாள்களுக்கு ஊரடங்கு!’ - முன்னாள் பொது சுகாதார இயக்குநர் சொல்வது என்ன?

அனைவருக்கும் சிறிது ஓய்வுக் காலம் தேவை. அதற்காக, குறைந்தது 8 நாள்களாவது முழு ஊரடங்கு கட்டாயம் தேவை. ஊரடங்கு முதலாவதாக தொற்று பரவலை குறைக்க வழி வகுக்கும். அடுத்ததாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கலாம்.

author-image
Gokulan Krishnamoorthy
New Update
‘8 நாள்களுக்கு ஊரடங்கு!’ - முன்னாள் பொது சுகாதார இயக்குநர் சொல்வது என்ன?

Former Public Health Director Dr.Kulanthaiswamy Interview, Covid Lockdown : தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சமடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு முழு ஊரடங்கு விதிக்காமல் கட்டுப்பாடுகளை மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக அரசின் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளும், வார இறுதி ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Advertisment

தற்போதைய சூழலில், இதே நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து வந்தால், தமிழகத்தின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் திணறத் தொடங்கி விடும். சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் பொது சுகதாரத்துறை இயக்குநர் மருந்துவர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

பொது மக்கள் அதிகம் கூடும் பொது மற்றும் தனியார் இடங்களில் கை கழுவுவதற்கான வசதிகளில் குறைவில்லாமல் கட்டாயம் இருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை இயக்கநராக இருந்த போது, சுற்றறிக்கை அனுப்பினேன். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய ஆயுதமாக உள்ள முகக் கவசம் அணிவதை மக்கள் மத்தியில் கட்டாயப்படுத்தினோம். மக்களும் பொது சுகாதார நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலைக்கு பிறகு, காற்றோட்ட் வசதிகள் இல்லாத சினிமா தியேட்டர்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், பெரிய துணிக்கடைகள், மூடிய, காற்றோட்டம் இல்லாத சூழலில் ஏசி வசதியுடன் அமைந்திருக்கும் காய்கறி கடைகள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தும் திறக்கப்பட்டன. போதிய காற்றோட்ட வசதிகள் இல்லாததால், கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டுகளாக இந்த இடங்கள் உருவெடுத்துள்ளன. காற்றோட்டம் இல்லாத சூழலில் அமைந்திருக்கக் கூடிய இந்த இடங்களை மீண்டும் திறக்கவே அனுமதித்திருக்கக் கூடாது. 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதித்தில் பயனில்லை. பெரிய துணிக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் என்பதை எவ்வாறு கடை நிர்வாகம் நிர்ணயிக்கும்?

publive-image

மருத்துவமனைகளை முக்கிய கொரோனா பரவல் மையங்களாக உருவெடுத்துள்ளன. பிறப்பு, விபத்து காயம் என்றாலே 40 - 50 பேர் பார்வையாளர்களாக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். பிற நோயாளிகளை கவனித்துக் கொள்ள்க் கூடியவர்கள் காலை, மதியம், மாலை என ஆள் மாறி வருகிறார்கள். அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களாகவோ, முழுமையான கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. இதனால், இவர்களுக்கும் கொரோனா பரவும் சூழல் அதிகம் உள்ளது. மூடிய, காற்றோட்ட வசதி இல்லாத வணிக மையங்களும், மருத்துவமனைகளுமே தற்போதைய கொரோனா ஹாட்பாஸ்ட் பகுதிகள்.

கொரோனா தொற்று உழவர் சந்தை, வார சந்தை என திறந்த வெளியில் மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் பரவுவதில்லை. மூடிய, ஏசி வசதி கொண்ட மளிகை கடைகளில் நாமே பொருள்களை தேடி எடுக்கிறோம். தேவையானவை, தேவையில்லாதவை என எல்லாவற்றிலும் கை வைக்கிறோம். பில் செய்து பணம் கொடுக்க காத்திருக்கிறோம். குறைந்தது ஒரு மணி நேரமாவது இதற்காக செலவுடுகிறோம். இது மாதிரியான நேரங்களில் தொற்று உள்ளவர்களிடம் இருந்து தொற்று எளிதில் நமக்கு பரவிவிடுகிறது.

இப்படி இருக்கும் சூழலில், திறந்த வெளியில் மளிகை பொருள்களை வாங்குவது மிகவும் பாதுகாப்பானதாகும். கடையில் பணிபுரிவோர் நமக்கு தேவையான பொருள்களை பைகளில் போட்டு கொடுத்தவுடன், காசை கொடுத்துவிட்டு வந்து விடுகிறோம். இந்த சூழலில் தொற்று பரவுவதற்கான சாத்தியமும் மிகவும் குறைவாக உள்ளது.

publive-image

முகக் கவசம் பயன்பாட்டை அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க சேண்டும். சாலையில் செல்பவர்கள் முகக் கவசம் போடுவதில் என்ன பயன் ? மகக்ள் தொகை இல்லாத இடத்தில் முகக் கவசம் போடுவதில் பயன் இல்லை. கூட்ட நெரிசலான இடங்களில் முகக் கவசம் இல்லாமல் மகக்ள் சுற்றி திரிவதை அரசு தடுக்க வேண்டும். மூடிய, குளிரூட்ட வசதி கொண்ட இடங்களில் முகக் கவசத்தை பயன்படுத்த வலியிறுத்த வேண்டும். அரசு வலியுறுத்தல்களும் விழிப்புணர்வும் ஒரு புறம் இருக்க, மக்களும் சுகாதார நிலைமையை உணர்ந்த்து தனி மனித ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பொது சுகாதார நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளவும், அரசு முறையாக கடைபிடிக்கவும் வலியிறுத்தி வந்தோம். ஆனால், தற்போதைய சூழலில், ஆக்சிஜன் நிரப்புவது கடினமாகி உள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராடி வருகின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதிலிருந்து, அனைவருக்கும் சிறிது ஓய்வுக் காலம் தேவை. அதற்காக, குறைந்தது 8 நாள்களாவது முழு ஊரடங்கு கட்டாயம் தேவை. ஊரடங்கு முதலாவதாக தொற்று பரவலை குறைக்க வழி வகுக்கும். அடுத்ததாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கலாம்.

தற்போது நான் பரிந்துரைக்கும் 8 நாள்கள் ஊரடங்கில், திறந்த வெளியில் காய்கறி விற்பனை செய்வது, சின்ன மளிகை கடை, கிராம்ப்புற கடைகள், பால், மருத்துவமனை, அத்தியாவசிய பொருள்களின் போக்குவரத்து ஆகிவற்றை அனுமதித்து, மற்றவற்றிக்கு தடை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். இந்த நிமிடம் வரை, தமிழக சுகாதாரத்துறை தொற்றை எதிர்த்து போராட, தேவையான வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நிலைமை மோசமாகலாம்.

publive-image
முன்னாள் பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி

நிலைமை மோசமாகமல் இருப்பதை தடுக்க, நான் பரிந்துரைத்த எட்டு நாள் ஊரடங்கு சமயத்தில், கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சில இடங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இன்னும் நிரம்பாமல் இருக்கிறது. குறிப்பாக சென்னை உள்பட சில மண்டலங்களில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவும், மருத்துவ கட்டமைப்பு வசதிகளில் பற்றாக்குறையும் ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

முழு ஊரடங்கு விதிக்கப்படாவிட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மதுரை, கோவை, சென்னை, திருச்சி ஆகிய மண்டலங்களுகு உள்பட்ட 15 மாவட்டங்களுக்கவது கட்டாயம் ஊரடங்கு தேவை. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஞாயிறு ஊரடங்குடன் சேர்த்து, வாரத்தின் இடைப்ப்ட்ட நாள்களோடு அடுத்த ஞாயிறு வரை எட்டு நாள்கள் ஊரடங்கை அமல்படுத்தலாம். மக்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக தான் பொது சுகாதார நடவடிக்கைகளை அரசும், பொது மக்களும், கடைப்பிடிக்க வலியுறுத்தி வந்தோம். இருப்பினும், தற்போதைய சூழலில் தமிழக சுகாதாரத்துறை திணறி, நிலைமை மோசமடைந்துவிட கூடாது என்பதற்காகவே ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்துகிறோம்.

publive-image

தமிழகத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு உதவி வருகின்றன. இருப்பினும், தற்போதைய சூழலால், மாநில கட்டுப்பாட்டு மையம் திணறி வருகிறது. இதனை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும்’, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நாம் முழுவதுமாக ஊரடங்கையே நம்பி வாழ முடியாது. அரசு, ஆக்ஜிசன் வசதி கொண்ட படுக்கை வசதிகளை துரிதமாக அதிகரிக்க வேண்டும். நோயாளிகள் எந்த நிலையில் வந்தாலும், படுக்கை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள் இல்லை என்ற சூழலே நிலவக்கூடாது. மருத்துவ கட்டமைப்பு நோயாளிகளை கைவிட்டு விடக் கூடாது. இதற்காக, ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கொரோனா முடிந்து விடும் என கூற முடியாது. மூன்றாவது அலை கூட வரலாம். 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறைந்தது 500-வது அதிகப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த முதுநிலை மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை அரசு வழங்க வேண்டும். இதனால், மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதை குறைக்கலாம். மேலும், அரசு செவிலியர் விடுதிகளில் கடந்த மூன்றாண்டுகளில் படித்து முடித்த சுமார் 6000 செவிலியரக்ளை பணியில் அமர்த்தலாம். ரெம்டெசிவிர் உள்பட உயிர்க்காக்கும் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பது மற்றும், பதுக்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;, என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Lockdown Tamilnadu Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment