Advertisment

Tamil News Highlights: இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 07 February 2022 -தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 95-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: ஆளுநர் டெல்லி பயணம் திடீர் ரத்து!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பாக’ நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஆளுநர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (பிப்.7) கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu News LIVE Updates

100 சதவீத ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை!

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து, துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல்.. விசாரணை தொடங்கியது!

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி மல்ஹோத்ரா தலைமையிலான ஐவர் குழு விசாரணையை தொடங்கி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:26 (IST) 07 Feb 2022
    சந்தேகத்தின் அடிப்படையில் பொழுதுபோக்கு விடுதிகளில் போலீசார் நேரடி சோதனை நடத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

    சந்தேகத்தின் அடிப்படையில் பொழுதுபோக்கு விடுதிகளில் போலீசார் நேரடி சோதனை நடத்தக் கூடாது. சட்டப்படி செயல்படும் கிளப்களின் நடவடிக்கைகளில் போலீசார் தலையிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 21:58 (IST) 07 Feb 2022
    விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

    விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது



  • 21:23 (IST) 07 Feb 2022
    மத்திய பட்ஜெட் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மக்களுக்கும் எதிரான பட்ஜெட் - தயாநிதி மாறன்

    மத்திய பட்ஜெட் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மக்களுக்கும் எதிரான பட்ஜெட் என்றும், நடுத்தர மக்களுக்கு வருமான வரி சலுகையில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும் மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியுள்ளார்



  • 20:23 (IST) 07 Feb 2022
    இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ரூ.59 லட்சத்திற்கு விற்பனை

    இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாக கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 139 படகுகள் ரூ. 50 லட்சம் மதிப்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது



  • 20:13 (IST) 07 Feb 2022
    1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

    பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்தி கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்



  • 19:59 (IST) 07 Feb 2022
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் மேலும் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய பாதிப்பு 6,120 ஆக இருந்த நிலையில் 5,104 ஆக குறைந்துள்ளது



  • 19:41 (IST) 07 Feb 2022
    திருப்பூரில் சூட்கேஸில் பெண் சடலம்

    திருப்பூர் மாவட்டம், பொல்லிகாளிபாளையம் அருகே பரபரப்பான திருப்பூர்-தாராபுரம் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் அருகே கைவிடப்பட்ட சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 19:31 (IST) 07 Feb 2022
    1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

    பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்தி கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்



  • 19:25 (IST) 07 Feb 2022
    தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டினால் மட்டுமே மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி -மத்திய அரசு திட்டவட்டம்

    மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது



  • 18:34 (IST) 07 Feb 2022
    திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவர். திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் என்று கூறினார்.



  • 18:01 (IST) 07 Feb 2022
    ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- பிரதமர் மோடி

    நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.” என்று கூறினர்.



  • 17:44 (IST) 07 Feb 2022
    உலகளாவிய தலைமைப் பாத்திரத்தை இந்தியா ஏற்க வேண்டும் - பிரதமர் மோடி

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு: “கொரோனா பேரிடருக்குப் பிறகு புதிய உலக நாடுகள் வரிசை உருவாகியுள்ளது; நாம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். உலகளாவிய தலைமைப் பாத்திரத்தை இந்தியா ஏற்க வேண்டும். ஏழை மக்களுக்கு கியாஸ் சிலிண்டர், வீடு, கழிப்பறைகள், வங்கிக்கணக்குகள் கிடைத்துள்ளன; ஆனால், சிலரது (எதிர்க்கட்சியினர்) சிந்தனைகள் 2014ம் ஆண்டிலேயே இருக்கின்றன.” என்று கூறினார்.



  • 17:40 (IST) 07 Feb 2022
    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்; மோடி பதிலுரை

    நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.



  • 17:38 (IST) 07 Feb 2022
    அண்ணாமலை நீட் தேர்வு குறித்து பொய் பிரசாரம் செய்கிறார் - துரை வைகோ விமர்சனம்

    மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, “ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். ஏழை மாணவர்கள், பட்டியலின, மலைவாழ் மக்கள் நீட் தேர்வால் தான் மருத்துவம் படிக்க முடிவதாக தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்” என்று விமர்சித்துள்ளார்.



  • 16:58 (IST) 07 Feb 2022
    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி நடந்துள்ளதாக

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



  • 16:58 (IST) 07 Feb 2022
    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி நடந்துள்ளதாக

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்படி பழனிசாமி தெரிவித்தார்.



  • 16:56 (IST) 07 Feb 2022
    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி மோசடி நடந்துள்ளதாக

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



  • 16:46 (IST) 07 Feb 2022
    ஆஸி. கிரிக்கெட் வாரியம் மீது கில்கிறிஸ்ட் விமர்சனம்

    அரக்கனைப்போல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் லேங்கரை சித்தரித்து உள்ளனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் விமர்சனம் செய்துள்ளார்.



  • 16:44 (IST) 07 Feb 2022
    செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 9 வார்டில் திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



  • 16:36 (IST) 07 Feb 2022
    அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு பிரதிநிதி: சோனியா காந்தி அறிவிப்பு

    அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.



  • 16:35 (IST) 07 Feb 2022
    அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு பிரதிநிதி: சோனியா காந்தி அறிவிப்பு

    அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.



  • 16:26 (IST) 07 Feb 2022
    அருணாசலில் பனிச் சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் கெமெங் பகுதியில் சீன எல்லை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி புதைந்துள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



  • 16:25 (IST) 07 Feb 2022
    அருணாசலில் பனிச் சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் கெமெங் பகுதியில் சீன எல்லை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி புதைந்துள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



  • 16:23 (IST) 07 Feb 2022
    பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மக்களவையில் இரங்கல்

    பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



  • 16:00 (IST) 07 Feb 2022
    ''கர்நாடகா எப்போதும் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது''

    நதிகள் இணைப்பு விவகாரத்தில் காவிரி நதியும் இருப்பதால் கர்நாடகா எப்போதும் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என்று டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.



  • 15:54 (IST) 07 Feb 2022
    அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர தேர்தல் பிரசாரம்

    முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் தேவையை அறிந்து செயல்பட்டு வருவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனறும் பிரசாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.



  • 15:39 (IST) 07 Feb 2022
    மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

    மருத்துவப் படிப்பின் பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



  • 15:27 (IST) 07 Feb 2022
    10 விமான சேவைகள் ரத்து - விமான போக்குவரத்து துறை

    5ஜி அலைவரிசையால் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்தியா, அமெரிக்கா இடையிலான 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது



  • 15:25 (IST) 07 Feb 2022
    சதிராட்டக் கலைஞர் முதல்வரை சந்தித்து வாழ்த்து

    பத்மஸ்ரீ விருக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.



  • 15:20 (IST) 07 Feb 2022
    மாநிலங்களவை காலை 10 மணி வரை ஒத்திவைப்பு

    மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும், மாநிலங்களவை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.



  • 15:17 (IST) 07 Feb 2022
    நிறைவு பெற்றது வேட்பு மனு தாக்கல்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.



  • 15:10 (IST) 07 Feb 2022
    மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம்: எம்எல்ஏ ரோஜா கோரிக்கை

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.ரோஜா முன்வைத்தார்.



  • 14:28 (IST) 07 Feb 2022
    தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

    தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளுக்கு இலங்கை கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • 14:18 (IST) 07 Feb 2022
    சிவசங்கர் பாபா வழக்கு பிப்ரவரி 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

    சிவசங்கர் பாபாவுக்கு சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதி கோரிய வழக்கு சிபிசிஐடி, புழல் சிறைத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து்ளளது. தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்.11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.



  • 14:15 (IST) 07 Feb 2022
    கச்சத்தீவு திருவிழா : இலங்கை மீன்வளத்துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

    இலங்கை, கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு தொலைபேசியில் கோரிக்கை வைத்துள்ளார்.



  • 14:12 (IST) 07 Feb 2022
    முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்

    தமிழகத்தில் வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்று நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 13:29 (IST) 07 Feb 2022
    பிரதமர் மோடியின் உத்தர பிரதேச பயணம் ரத்து

    மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உத்தர பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜான் சவுப்பல் பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்கிறார்



  • 13:28 (IST) 07 Feb 2022
    நகைக்கடன் தள்ளுபடி இல்லாததால் லட்சம் பேர் ஏமாற்றம்

    வாக்குகளை பெற திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறது சவரன் நகைகடன் திட்டத்தை திமுக அறிவித்துள்ள நிலையில், லட்சம் பேர் நகைக்கடன் தள்ளுபடி இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்



  • 13:24 (IST) 07 Feb 2022
    ராமர் கோவில் குறித்து எம்.பி., பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

    பாஜக அரசால் மட்டுமே ராமர் கோவிலை வெற்றிகரமாக கட்ட முடியும் என்று மாநிலங்களவையில் எம்.பி., பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.



  • 12:38 (IST) 07 Feb 2022
    கடைக் கோடி தமிழ் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் - முதல்வர்

    கடைக்கோடி தமிழகத்தில் வசிக்கும் மாணவர்களுக்கும் எட்டாக்கனியாக உள்ள மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் மசோதாவின் நோக்கம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக, சமரசமற்ற அகிம்சைப் போரை துவங்கியுள்ளோம். நாளை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • 12:36 (IST) 07 Feb 2022
    பட்டுத்துணியில் நெய்யப்பட்ட ஸ்டாலினின் உருவப்படம்

    பட்டுத்துணியில் நெசவு செய்யப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை, எம்.எல்.ஏ ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே. செல்வமணி முதல்வரை நேரில் சந்தித்து அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.



  • 12:32 (IST) 07 Feb 2022
    மதுராந்தம் அருகே சாலையில் 2 வேன்கள் கவிழ்ந்து விபத்து

    மதுராந்தம் அருகே 2 வேன்கள் சாலை விபத்தில் சிக்கி விபத்து. ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.



  • 11:50 (IST) 07 Feb 2022
    சுரேஷ் ரெய்னாவின் தந்தை மரணம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்



  • 11:45 (IST) 07 Feb 2022
    ராஜீவ் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி

    ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 11:38 (IST) 07 Feb 2022
    21-ம் தேதி முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் எல்லைகள் திறக்கப்படும்

    ஆஸ்திரேலியாவில் வரும் 21ம் தேதி முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் எல்லைகள் திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.



  • 11:37 (IST) 07 Feb 2022
    இன்று மாலை வெளியாகிறது பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:01 (IST) 07 Feb 2022
    அனைவருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. நீதிமன்றம்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயம் கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில்’ அனைவருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் என மனுதாராருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.



  • 10:58 (IST) 07 Feb 2022
    ராஜிவ்காந்தி கொலை வழக்கு.. ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள ரவிச்சந்திரன், நெஞ்சுவலி காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 10:38 (IST) 07 Feb 2022
    லதா மங்கேஷ்கர் மறைவு.. மாநிலங்களவையில் இரங்கல்!

    மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு’ மாநிலங்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சபாநாயகர் வெங்கய்ய நாயுடு லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.



  • 10:38 (IST) 07 Feb 2022
    தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் இலங்கையில் ஏலம்!

    இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது. இது 5 நாட்கள் நடைபெறும், முதல் நாளான இன்று இலங்கை காரைநகர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 65 படகுகள் ஏலம் விடப்பட உள்ளன.



  • 10:24 (IST) 07 Feb 2022
    உடுப்பி அரசு கலைக்கல்லூரியில்’ ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி!

    கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், உடுப்பியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில்’ ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • 10:21 (IST) 07 Feb 2022
    பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. மேலும், பேருந்து நடத்துநர், பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • 09:53 (IST) 07 Feb 2022
    இந்தியாவில் 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்’ 83,876 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,99,054 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.



  • 09:06 (IST) 07 Feb 2022
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தல்!

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில்’ போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வத்தை மற்றொரு வேட்பாளர் லட்சுமணன் கடத்தி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • 09:04 (IST) 07 Feb 2022
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தல்!

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில்’ போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வத்தை மற்றொரு வேட்பாளர் லட்சுமணன் கடத்தி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • 08:51 (IST) 07 Feb 2022
    மக்களவையில் இன்று!

    கடந்த மாதம் 31ம் தேதி மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி மக்களவையில் இன்று பதிலளிக்கிறார்.



  • 08:50 (IST) 07 Feb 2022
    4.27 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்!

    தமிழ்நாட்டில் 4.27 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், சுமார் ஒரு கோடி பேர், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை எனவும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • 08:39 (IST) 07 Feb 2022
    சபரிமலை கோயில் நடை வரும் 12-ஆம் தேதி திறப்பு!

    மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, வரும் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.



  • 08:39 (IST) 07 Feb 2022
    லதா மங்கேஷ்கர் மறைவு.. பொது விடுமுறை அறிவிப்பு!

    பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மகாராஷ்டிராவில் இன்று பொதுவிடுமுறையும், மேற்கு வங்கத்தில் அரை நாள் விடுமுறையும் அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.



  • 08:38 (IST) 07 Feb 2022
    திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



  • 08:37 (IST) 07 Feb 2022
    பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு.. மணற்சிற்பம் செதுக்கி அஞ்சலி!

    பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் செதுக்கிய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment