Coronavirus relief Package in Tamilnadu: கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழத்தில் வரும் ஏப்ரல் 15.ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக,தினசரி ஊழியர்கள், முதியவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்றோர் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் விளைவாக, கடந்த 2-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1000/- மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வ்வைராஸ் தொற்று அவசர காலத்தில் சமூக விலைகளை கடைபிடிக்கும் பொருட்டு, நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் பெற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டத்தை பெருமளவில் தவிர்பதற்காக, தினமும் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான வரையறையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், குருநானக் கல்லூரியில் வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடோஓடி பழனிசாமி, ” வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்படும் போதே,1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் நியாய விலைக் கடைகளில் கூட்டம் கூடுவதை அடியோடு தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை விலையில்லா உணவுப் பொருட்கள் பட்டியலில் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித் தொகையை, “யாராவது வெளியூர் சென்று இருந்தாலோ, வாங்காமல் இருந்தாலோ, இந்த மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்” என்று அறிவுரித்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும்.
யாராவது வெளியூர் சென்று இருந்தாலோ, வாங்காமல் இருந்தாலோ, இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
இனிமேல் டோக்கன் வழங்குகின்ற போதே 1000 ரூபாய் வழங்க அறிவுறுத்தி இருக்கிறோம்.#TNGovt #Corona
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 3, 2020
நிவாரண உதவித் தொகையை விட்டுக் கொடுக்கலாம்: தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த நிவாரண உதவித் தொகை மற்றும் விலையில்லாப் பொருட்கள் பெற விருப்பமில்லாதவர்கள் இதற்கான வலைதளமான tnpds.gov.in என்ற முகவரி மற்றும் tnepds. செயலியிலும் சென்று உதவித் தொகை ரூ.1000/- அல்லது விலையில்லாப் பொருட்கள் மட்டும் அல்லது இரண்டும் இந்த மாதம் மட்டும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.